பாராட்ட வருகிறார்கள்

This entry is part 30 of 35 in the series 11 மார்ச் 2012

பாராட்ட வருகிறார்கள்

அவசரமாய்
ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை!
சம்பிரதாய வாழ்த்து ,
அழுத்தும் கைகுலுக்கல்,
பொய்யெனப் புரியும்
புனைந்துரைகள்
எல்லாவற்றுக்கும்
முகநூலின்
ஒற்றை விருப்பச் சொடுக்காக
புன்னகைக்கலாமா?
பல்….?
தலையசைப்பு
சம்மதமாகவா ?மறுப்பாகவா?
மையமாகவா?
கண் பணித்துவிடுமோ…
சீரான சுவாசத்தோடு
வெற்றுப்பார்வை தோதாகுமா?
பெருமிதம்?கூச்சம்?
”எவ்வளவோ பாத்துட்டோம்..?
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்….?
எது பொருந்தும்….?
அவசரமாய் ஒரு கண்ணாடி ,
அல்லது
ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை!
-உமாமோகன்

Series Navigationகவிதைகள்பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்
author

உமாமோகன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    Kavya says:

    கண் பணித்துவிடுமோ?

    அப்படின்னா என்ன ?

    கண் பனித்துவிடுமோவென்றிருக்கவேண்டுமென நினைக்கிறேன்.

  2. Avatar
    punai peyaril says:

    என்னா சொல்ல வர்றீங்க.. பாராட்டுக்கு தகுதியிருந்தா, உணமை பொய்யாக தோணாது…

    1. Avatar
      Kavya says:

      இதுதான் புரியலே. ஆனால் கவிதை ஏதோ கொஞ்சம்.புரியுது

      செகப்பிரியர் சொன்னது எல்லாருக்கும் தெரியும்: “உலகமே ஒரு நாடகமேடை. அதில் நாமெல்லாரும் நடிகர்கள். மேடையில் உள்ளே நுழைகிறோம். நம் நடிப்பு முடிந்தது வெளியேறுகிறோம். அடுத்த காட்சிகள்; அடுத்தடுத்து நடிகர்கள நுழைகிறார்கள்; வெளியேறுகிறார்கள்”

      நிஜ வாழ்க்கையில் ஓரிரு வேளைகள்; ஓரிரு நபர்களிடம் மட்டுமே நாம் நாமாக இருக்கிறோம்; இருக்கப் பயப்படுவதுமில்லை. மற்றபடி வாழ்க்கை நாம் நாமாக இருந்தால் நமக்கே அது பாதகமாகி விடுவதால், நாம் நடித்தே தீரவேண்டும். சில்விடங்கள் அப்படி நாம் நடிக்கிறோம் பிறரும் நம்முடன் நடிக்கிறார்கள் என்பது திண்ணமாகத் தெரியும். இருப்பினும் எவரும் அதைத் தெரிந்த மாதிரி காட்டாமல் தெரியாதமாதிரி நடிக்கவேண்டும். சிறுகுழந்தைகளுக்கு இத்தேவையில்லாதபடியால் அது ‘ ராஜாவின் உடம்பின் துணியேயில்லையே!” என்று உண்மையைப்போட்டு உடைத்துவிடும்.

      நம் கவிஞர் இந்த மையக்கருத்தைத்தான் புதுக்கவிதையாக்கித் தருகிறார். விமர்சிக்கப்படவேண்டியது மையக்கருத்தன்று. Because it is an established truth.

      சொல்லியமுறையே. அஃது ஓஹோவென்றில்லாவிட்டாலும், பரவாயில்லை.

      திண்ணையில் வரும் கட்டுரைகளைவிட கவிதைகள் உயர்வு.

      References:

      “All the world’s a stage,
      And all the men and women merely players;
      They have their exits and their entrances,” Shakespeare in As You Like It.

      Child saying from the fairy tale: Emperor has no clothes!

  3. Avatar
    umamohan says:

    பனித்துவிடுமோதான் சரி!
    உண்மையில் தகுதி இருந்தாலும் பாராட்டை எதிர்கொள்ளத் தெரியாத
    உள்ளங்கள்.உண்டு.இன்றைய நடைமுறை உலகில் ஏற்பாடு செய்துகொள்ளும்
    (பெரிய ஆட்களுக்குப் போகவேண்டாம்.வளர்நிலையிலே கூட)
    பாராட்டுக்களை எதிர்கொள்ள சரியான ஏற்பாட்டோடு வருபவர்கள் உண்டு.
    நம்மைப்போல் சாதாரணர் …மனம் இது!
    ஒரு கிரீடமும் அங்கியும் இல்லாது வீட்டு உடையுடன் நின்றால்
    மன்னராக என்ன மன்னர் வேடதாரியாகவும் ஏற்பதில்லையே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *