தூறலுக்குள் இடி இறக்காதீர்

This entry is part 38 of 44 in the series 22 ஏப்ரல் 2012

-எடுக்கப்படாமல்

ஒலித்து நிற்கும்
தொலைபேசிமணி…
ஏகப்பட்ட
கேள்விக்கிளை விரிக்கிறது…
அச்சம்,எரிச்சல்,
ஆவல்….
ஏதோ மீதூர ,
மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்!
அந்த முனையில் ,
உக்கிரமான வாதம்
ஓடிக்கொண்டிருக்கலாம் !
உருக்கமான பிரார்த்தனை
பக்கத்தில் நடக்கலாம்..
கடன்காரனோ,
அதிகாரியோ,
திணறடித்துக் கொண்டிருக்கலாம்…
மரணச் சடங்கோ,
விபத்தோ,கூட்டமோ,
தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்!
தவறவிட்ட உறக்கம்
நேரங்காலமின்றி
வாய்த்திருக்கலாம்.-
Series Navigationசூல் கொண்டேன்!விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
author

உமாமோகன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *