தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !

This entry is part 29 of 41 in the series 13 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

காதலின் வலைகள் விரிந்துள்ளன
பூதள மெங்கும் !
அவற்றில் எவர் வீழ்வார் என்று
அறிவது யார் ?
ஆணவம் யாவும் நொறுங்கும் போது
தானாய்ப் பொழியும்
கண்ணீர்த் துளிகள்
என்பதை அறிவது யார் ?
இன்ப மயமான இவ்வுலகில்
உன் தேவைகள் வேண்டுவாய்
நிரந்தர மாக !
சன்மானம் தர வேண்டும்
உன்னை நீயே
என்று நீ அறிய மாட்டாய் !
தருணம் ஒன்று வரும்
விரும்பித் துயரை நீ வரவேற்க !
இன்பத்தின் நிழலில்
சுகங் காணப்
பின்னே செல்வாய்  !
புல்லாங் குழல் இசை வெள்ளம்
பொங்கும் முன்பு
ஆணவம் நழுவிச் செல்லும்.
ஆத்மா பந்தப் பிணைப்பை
ஆடையாய் உடுத்தும் !

+++++++++++++++++++
பாட்டு : 357 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888).
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University

Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 9, 2012

Series Navigationநிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளிதோல்வியில் முறியும் மனங்கள்..!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *