ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.
பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் : ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார். மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது. உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள். அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள். தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள். மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள். தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை. அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.
மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு
1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது. பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை. 1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது. 1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.
பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்
பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார். அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.
மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார். இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை. பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.
பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ? பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல ! ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல ! வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.
**********************
நாடக உறுப்பினர்
1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sar George Crofts) (50 வயது) : மேடம் மோனாவின் தோழன்.
************************
மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்
(இரண்டாம் அங்கம்)
அங்கம் -2 பாகம் -1
இடம்: ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
காலம் : வேனிற் கால இரவு
அரங்க அமைப்பு: மிஸ் விவியனின் தோட்ட மாளிகை. வீட்டில் விளக்கு வெளிச்சம் உள்ளது. இருளில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே மோனிகா நுழைகிறாள். கூட ஃபிராங்க் வருகிறான். வெளியே நடந்து களைத்துப் போய் சோபாவில் அமர்கிறான்.
மேடம் மோனிகா: அட கடவுளே ! உடலுக்கு எது மிகக் கெடுதி செய்யுமென்று தெரிய வில்லை ! வெளியே உலவி வருவதா ? இல்லை வேலையின்றி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதா ? விஸ்கியும் சோடாவும் இப்போது இந்தக் குடிசை மாளிகையில் இருந்தால் எனக்கு வேண்டும் !
ஃபிராங்க்: மிஸ் விவியன் வாங்கி வைத்திருப்பாள்.
மேடம் மோனிகா: அறிவு கெட்டுப் பேசாதே ! இளமங்கை வீட்டில் அதை வைத்து என்ன செய்வாள் ? கவலைப் படாதே ! அப்படி ஒன்றும் தேவையில்லை எனக்கு. எப்படி விவியன் இங்கு பொழுதைக் கழிக்கிறாள் தனியாக ? வியன்னா மாளிகையில் நான் எல்லாம் வைத்திருக்கிறேன்.
ஃபிராங்க்: பொறு மோனிகா ! உன் மேல் அங்கியை நான் எடுத்து மாட்டுகிறேன். (பின்னால் நின்று மோனிகாவின் மேல அங்கியை எடுக்கிறான்.)
மேடம் மோனிகா: எனக்கொரு நினைப்பு, வாலிபன் நீயும் அந்த வயோதிக வம்புக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று.
ஃபிராங்க்: உபதேசம் செய்து வாழும் பாதிரியார் பரம்பரையில் ஊறியவன் என்று சொல்கிறாயா ? (சோபாவில் அமர்கிறான்)
மேடம் மோனிகா: ஒன்றும் சொல்லாதே, உனக்கென்ன தெரியும் நான் கேட்பது ? நீ வயது வராத ஓர் இளைஞன்.
ஃபிராங்க்: மோனிகா ! என்னோடு வியன்னாவுக்கு வருகிறாயா ? அங்கு நாம் இருவரும் ஆடி ஓடி உல்லாசமாய் இருக்கலாம்.
மேடம் மோனிகா: உன்னோடு வர மாட்டேன். வியன்னா இளைஞனுக்கேற்ற நகரமில்லை ! உனக்கின்னும் வயதாக வேண்டும். (மோனிகா அவன் விழிகளை உற்று நோக்கி) சின்னப் பயலே ! கேள் நான் சொல்வதை ! முழுக்க முழுக்க உன் தந்தையைப் போன்றவன் நீ ! அது எனக்குத் தெரியும். உனக்கே உன்னைத் தெரியாது. என்னைப் பற்றிக் கற்பனையில் எந்தக் அற்பத்தனமும் உன்னிடம் இருக்கக் கூடாது. மற்றவர் என்னைப் பற்றிச் சொல்வதைக் கேட்காதே ! என்மீது மோகம் கொள்ளாதே ! உன் வயது மங்கையரைத் துரத்து. சொல்வது புரியுதா ?
ஃபிராங்க்: என்னருமை மோனிகா ! இது எங்கள் பரம்பரைக் குணம் ! நான் அதற்கு விதி விலக்கில்லை. நீ ஓர் அழகி இந்த வயதிலும். உன் அழகுக்கு வயது மட்டும் ஏறுவதில்லை !
(மோனிகா ஃபிராங்க் கன்னத்தைத் தடவி திடீரென வாயில் முத்தம் கொடுத்து அப்புறம் நகர்கிறாள்.)
மேடம் மோனிகா: (குற்ற உணர்வோடு சற்று உலாவி) நான் முத்தம் கொடுத்திருக்கக் கூடாது உனக்கு ! நானொரு கேடு கெட்ட மாது. தப்பாய் எடுத்துக் கொள்ளாதே ! உன் மீது எனக்குக் கவர்ச்சி உண்டாக வில்லை. ஒரு தாய் கொடுக்கும் முத்தம் அது. போ விவியன் கூட பாலுறவு வைத்துக் கொள் ! நான் வயதானவள். விவியன்தான் உனக்கு ஏற்ற மங்கை.
ஃபிராங்க்: ஓ விவியனோடு நான் பாலுறவு கொண்டவன்தான், உன் அனுமதி எதற்கு ?
மேடம் மோனிகா: (கோபப் படுவதுபோல் பாசாங்கு செய்து ஒரு துண்டை அவன் முகத்தின் மேல் வீசி) என்ன சொல்கிறாய் ? இந்த மாளிகையில் இலவச விருந்து எவருக்கும் கிடைக்காது. பணம் இல்லாதவருக்குப் படுக்கை இல்லை.
ஃபிராங்க்: நானும் விவியனும் காதல் ஜோடிகள் ! உனக்குத் தெரியாதா ?
மேடம் மோனிகா: நீங்கள் இருவரும் காதல் ஜோடிகளா ? என்ன அர்த்தத்தில் சொல்கிறாய் ? காதல் நிலையற்று மோதல் ஆகிவிடும். காதல் வருவாய் தராது. ரோமியோ ஜூலியட் காதல் என்ன ஆனது முடிவில் ? காதல் சில சமயம் சாதலில் முடியுது. இந்த மாளிகையில் காதல் நாடகம் நடக்காது ! ஆண் பெண் பாலுறவுக்குக் காதல் என்னும் தங்க முலாம் தேவை இல்லை. காதல் சோம்பேறிகளின் களியாட்டம். பொன்னான காலத்தை மண்ணாக்குவது காதல் !
ஃபிரான்க்: மோனிகா ! செல்வத்தின் மீது கண்ணாய் இருக்கும் உனக்குக் காதலைப் பற்றி எல்லாம் மறந்து போச்சு. எங்களை யாரும் பிரிக்க முடியாது. நீ ஏமாற்றம் அடைவாய்.
மேடம் மோனிகா: நான் நினைத்தால் அதையும் செய்து விடுவேன். இதோ பார் உன்னைப் போலொரு அயோக்கியன் என் சின்னப் பெண்ணுடன் உறவாடக் கூடாது. நான் சொல்வது உன் காதில் கேட்குதா ? நான் உங்கள் உறவை அனுமதிக்க மாட்டேன். என் மகளை ஒருபுறம் நேசித்துக் கொண்டு பிறகு என் பின்னே ஏன் வருகிறாய். இதைக் காதலென்றா சொல்கிறாய் ?
ஃபிராங்க்: மிஸிஸ் வார்ரன் ! விவியனைப் பொருத்த வரையில் எனது உள்நோக்கம் நேர்மையானது. நிலையானது, தூய்மையானது. ஆவேசப் படாதே ! உனது சின்னப் பெண்ணுக்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. அவளுக்கு அருகிலே வாழாத தாயின் உதவி சிறிதும் தேவை யில்லை. ஒன்று சொல்லட்டுமா ? உன்னைப் போல் விவியன் ஒன்றும் அழகியில்லை தெரியுமா ? அவள் பாலுறவுக்குத் தான் ஏற்றவள் ! பேபி முகம், பேபி நடை, பேபி மொழி !
மேடம் மோனிகா: (கோபத்துடன்) அழகில்லாதவளை பிறகு ஏன் நேசிப்பதுபோல் நடிக்கிறாய் ஃபிராங்க்: அவள் மூலம் என் நட்பைப் பெறுவதற்கு. பூங்காவில் இப்போது விவியன் என்ன செய்கிறாள் ? வயதான வில்லியத்துடன் என் சின்னப் பெண் சுற்றிக் கொண்டிருக்கிறாள். உனக்கு என்மேல் கவர்ச்சி போல் அவளுக்கு வில்லியத்தின் மேல் கவர்ச்சி ! நீயும் விவியனும் காதலரே. ஆனால் நீவீர் காதலிப்பது ஒருவரை ஒருவர் அல்ல !
ஃபிராங்க்: வயோதிக மாதருக்கு நான் அடிமை மோனிகா ! என் தந்தையின் ஆசை நாயகி எனக்கும் காதலி.
மேடம் மோனிகா: போதும் நிறுத்து ! விவியனும், வில்லியமும் எங்கே இருக்கிறார் இப்போது ?
ஜார்ஜ் வாலஸ்: அவர் இருவரும் தனிமை நாடிக் குன்றின் மீது ஏறினார்கள்.
மேடம் மோனிகா: என்னிடம் கேட்காமல் விவியன் அங்கே போகக் கூடாது. அதுசரி ! ஜார்ஜ் நீ இன்று எங்கே இன்று தங்கப் போகிறாய் ? இங்கு நீ தங்க முடியாது தெரிந்து கொள். விவியனுக்கு நம்முறவு தெரியக் கூடாது !
(தொடரும்)
***************
தகவல் :
Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/
(f) http://www.enotes.com/mrs-
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 29, 2012)
http://jayabarathan.wordpress.
- முள்வெளி அத்தியாயம் -15
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32
- நினைவுகளின் சுவட்டில் (91)
- ஏகாலி
- சித்திரவதைக் கூடத்திலிருந்து
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1
- தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த
- “ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)
- சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு
- தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)
- காலணி அளவு
- ஹைக்கூ தடங்கள்
- உள்ளோசை கேட்காத பேரழுகை
- பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்
- துரத்தல்
- ஏழாம் அறிவு….
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு
- பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா
- அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்
- சின்னஞ்சிறு கிளியே…!
- துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி
- மணமான அந்தப் பெண்களின் பெயரில்…
- திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்
- ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை
- குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்
- அன்பிற்குப் பாத்திரம்
- அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி
- ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்