ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி

author
3
0 minutes, 8 seconds Read
This entry is part 18 of 34 in the series 6 ஜனவரி 2013

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு…

ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி பற்றிய இந்த அறிவிப்பை தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி

 

 

 

ரியாத் தமிழ்ச்சங்கம் – எழுத்துக்கூடம்   சார்பில்  கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் கீழ் கண்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

முதல் பரிசு – 5000 இந்திய ரூபாய்கள்

இரண்டாம் பரிசு – 3000 இந்திய ரூபாய்கள்

மூன்றாம் பரிசு –  2000 இந்திய ரூபாய்கள்

உலகின்  எந்த மூலையிலிருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் அரிய சந்தர்ப்பம்.

சிந்தனை சிறகை விரியுங்கள் – சிறந்த கவிதையை வடியுங்கள் – சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள்  – கலந்து கொள்வதற்கான ஒரே தகுதி : தமிழராய் இருப்பது மட்டுமே…

விதிமுறைகள் :

1. தமிழ் மொழி அறிந்த, உலகின் எப்பகுதியில் வசிப்பவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.வயது வரம்பு இல்லை.

2. கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்தமான எந்தத் தலைப்பிலும் தங்களை கவர்ந்த எந்தச் சிந்தனையிலும் கவிதை எழுதலாம் என்றாலும் மதநெறி, அரசியலில் தனி நபர் தாக்குதல் மற்றும் பாலியல் போன்ற விதயங்களை விலக்கியதாக பாடுபொருள் அமைந்திருக்க வேண்டும்.

3. குறைந்த அளவில் 15 வரிகளும் அதிகமாய் 40 வரிகளுக்கு மிகாமலும் இருத்தல் நலம்.

4. தமிழ்க்குழுமங்கள் மற்றும் நாளேடுகளில் கவிதைப் போட்டியும் அதன் முடிவும் அறிவிக்கப்படும்

5. சிறந்த முதல் மூன்று கவிதைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

எப்படி கலந்துகொள்வது?

1. கவிதைகளை ஒருங்குறி (Unicode) அமைப்பில் நேரடி மின்னஞ்சலாகவோ அல்லது இணைப்புக் கோப்பாகவோ (Using MS Word) rtskavithaipotti2013@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

2. தட்டச்சு  வடிவம் இயலாவிடில் நல்ல தெளிவான உயர்தர தெளிவுறு (High-resolution) அமைப்பில் ஒளிவருடி (Scan செய்து) இணைப்புக் கோப்பாக அனுப்பலாம்.

3. கவிதை அனுப்புவோர் தங்களின் முழு அஞ்சல் முகவரி , தொடர்பு தொலைபேசி/அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

4. இந்தக் கவிதை இதுவரை எந்த அச்சு ஊடகத்திலும் – இணையத்திலும் – இணைய மடலாற் குழுமத்திலும் – செய்திக் குழுமங்களிலும் இன்னபிற ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்ற உறுதிமொழி மற்றும் கையொப்பமிட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்.

5.  கவிதைகளை அனுப்புகையில் “கல்யாண் – நினைவு கவிதைப் போட்டி” என அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

விதிமுறைகள் :

1. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது; அதன் மீதான மேலதிக கருத்து விவாதங்கள் அங்கீகரிக்கப்பட மாட்டாது.

2. ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் – ஆட்சி மன்ற குழுவினர் – அதன் உள்ளமைப்பு உறுப்பினர்கள் யாரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

3. இந்தப் போட்டியை எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திற்காகவும் நிறுத்தவோ விதிமுறைகளை மாற்றி கட்டமைக்கவோ ரியாத் தமிழ்ச்சங்க அமைப்புக்கு முழு உரிமை உண்டு.

4. போட்டியில் பங்கு பெறுவோரிடமிருந்து படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2013 ஜனவர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு 23:59 மணி வரை.

5. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் ரியாத் தமிழ்ச்சங்க ஆண்டு விழா மலரில், வலைத்தளத்தில், மடலாற்குழுமத்தில் உரியவர் பெயரோடு வெளியிடப்படும்.

கவியரங்கம்

1. சவுதி அரேபியா வாழ் தமிழர்களுக்கான கவியரங்கம் இது.. ரியாத் , தமாம், ஜித்தா மற்றும் சவுதி ஏனைய பகுதியிலுள்ள தமிழ்க் கவிஞர்கள் கலந்து கொள்ளலாம். வர இயலாதவர்கள் தங்கள் கவிதைகளை அனுப்பி வைக்க அவர்கள் சார்பாக இங்குள்ளவர்கள் வாசிப்பார்கள்.

2. பாடுபொருள் மேற்சொன்ன இரண்டும் தவிர்த்து எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

3.  கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள், நினைவுக் கேடயங்கள் வழங்கப்படும்.

4.  முதலில் தங்களைப்பற்றிய விவரண குறிப்பும் மாதிரி ஒரு கவிதையும் அனுப்பி வைக்கவும். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவோர் கவியரங்கத்துக்கு தகுதி பெறுவார்.

5. கலந்து கொள்ள விரும்புவோர் மேற்சொன்ன நான்கு விதிமுறைகளுக்கும் உட்பட்டு (4)-ல் சொல்லப்பட்ட விவரங்களை rtskaviyarangam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

Series Navigationஅக்னிப்பிரவேசம்-17உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  ரியாத் தமிழ்ச் சங்கம் says:

  இக்கவிதைப் போட்டி பலரின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  – ரியாத் தமிழ்ச்சங்கம்

 2. Avatar
  punaipeyaril says:

  கவிதை என்பது உண்மையைச் சுமந்து வருவது. மலாலா பற்றி எழுதலாமா..? அப்போட்டியில்… கவிதை என்பது சௌதியில் தடைசெய்யப்பட அல்லாவிற்கு பிடிக்காத விஷயமா என்று கேட்டுக் கொண்டு போட்டி நடத்துங்கள்…

 3. Avatar
  punaipeyaril says:

  மதநெறி, அரசியலில் தனி நபர் தாக்குதல் மற்றும் பாலியல் போன்ற விதயங்களை விலக்கியதாக பாடுபொருள் அமைந்திருக்க வேண்டும்.–> பாடல் போட்டி நடந்துங்கள்… கவிதை என்பது வேறு வகையறா… அது மாற்றத்தை கொண்டு வரும் வித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *