குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2

This entry is part 20 of 33 in the series 3 மார்ச் 2013

என்னடா, சங்கர்! என்ன யோசனை? உங்கப்பா கூப்பிட்றார், பார்!”
கண்ணாடியை முகத்துக்கு எதிரே பிடித்துத் தலை வாரிக்கொண்டிருந்த சங்கரன் திடுக்கிட்டவன் போலத் தலை திருப்பித் தாயைப் பார்த்தான்.

“ஏதோ ஆ·பீŠ வி„யமா ஒரு பிரச்னை பத்தி யோசிச்சிண்டிருந்தேம்மா. அதான் காதுல விழல்லே. இதோ போய் என்னன்னு கேக்கறேன்.”

கண்ணாடியைச் சுவரில் மாட்டிவிட்டு, சங்கரன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அப்பாவுக்கு முன்னால் போய் நின்று, “என்னப்பா? கூப்பிட்டேளா?” என்றான்.

“ஆமாண்டா. நேத்து ராத்திரி நீ லேட்டா வந்ததனால உங்கிட்ட பேச முடி யல்லை. நேத்து பலராமனைத் தற்செயலாப் பாத்தேன். என்னோட வேலை பண்ணி னவன். எனக்குக் கொஞ்சம் முன்னால ரிடைர் ஆனவன். அவன் இப்ப சாம்சன் அண்ட் தாம்சன்கிற கம்பெனியில டைப்பிŠடா இருக்கான்.”

“அறுபது வயசில டைப்பிŠடா? உடம்பு தாங்குமா?”

“அதைப் பத்தி நீ ஏன் கவலைப் பட்றே? அவனுக்குத் தேவை! போறான். . . அவனோட கம்பெனி ரெண்டு „¢·ப்ட்Šல வேலை செய்யறது. மத்தியான ஷிப்ட் ராத்திரி ஒன்பதரை மணி வரைக்கும். எட்டுலேர்ந்து ஒம்பதரை வரைக்கும் வேலை செய்யறதுக்கு ஒரு டைப்பிŠட் வேணுமாம். பார்ட் டைம். போறியா?”

அவன் ஒரு நம்ப முடியாமையுடன் தரணிபதியைப் பார்த்தான். அவன் பதில் சொல்லாதிருந்ததைக் கவனிக்காதவர் போல் அவர் தொடர்ந்தார்: “ஒண்ணரை மணி நேரந்தான். மாசாமாசம் ஐநூறு தருவாளாம். என்ன சொல்றே?”

“நீங்க போகச் சொன்னா போறேம்ப்பா.”

பின்னால் காலடியோசை கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அவன் அம்மா ராமலட்சுமி நின்றுகொண்டிருந்தாள்: “உங்கப்பாவுக்கு என்னடா?போன்னுவார். நீ ஒண்ணும் போக வேண்டாம். இப்பவே உடம்பு நன்னால்லே. காலம்பரஏழரைக்குக் கிளம்பினா, ராத்திரி எட்டரை மணியாறது ஒரு நாளைப் போல. எட்டுலேர்ந்து ஒம்பதரை வரைக்கும் பார்ட் டைம். பத்துலேர்ந்து அஞ்சு வரைக்கும் ஒரு கம்பெனி. அப்புறம் ஆறுலேர்ந்து எட்டு வரைக்கும் ஒரு கம்பெனின்னு உடம்பை உடம்பாப் பாக்காம உழைச்சு ஓடாத் தேஞ்சுண்டிருக்கிறவனைப் பாத்து இன்னும் ஒரு பார்ட் டைமுக்குப் போறியான்னு கேக்கறேளே, உங்களோட இருதயம் என்ன இரும்பா, இல்லே எ·கா!. . . நீ போடா உள்ளே. எங்க தரித்திரத்துக்கு விடிவே கிடையாது தான். அதுக்காக நீ தேஞ்சு மாஞ்சு தேவாங்காப் போகணும்னு சட்டம் எதுவும் இல்லே. போ உள்ளே!”

“வாசல்ல நின்னுண்டு பேசவேண்டாம். உள்ளே போய்ப் பேசலாம்,” என்று அவர் எழுந்து கொள்ள, மூவரும் அந்தச் சின்ன வீட்டுப் பகுதிக்குள் நுழைந்தார்கள்.

கூடம் என்று பெயர் பெற்ற அந்தச் சிறிய பகுதியில் சங்கரனின் தங்கைகள் இருவரும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். தம்பிகள் இருவரும் – முறையே 15,10 வயதுகளில் இருப்பவர்கள்- மொட்டை மாடியில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.
உள்ளே வந்ததும், ராமலட்சுமி, எரிச்சலுடன், “இத பாருங்கோ! சங்கர் ஒண்ணும்இன்னொரு பார்ட் டைம் வேலைக்கெல்லாம் போக வேண்டாம். சம்பாதிச்ச நாள்லே சேத்து வெச்சுக்கத் தெரியல்லே. அளவோட பெத்துக்கத் தெரியல்லே. நாம பண்ணின தப்புக்கெல்லாம் என் பிள்ளை பலியா?”

“ஏய்! என்னடி இது – வெவŠதை கெட்ட பேச்செல்லாம் பேசிண்டு! . . . உம் பொண்ணுகளை யெல்லாம் பின்னே எப்படிக் கரை ஏத்துறதுன்னு நினைச்சுண்டிருக்கியாம்? என் சொல் பேச்சைக் கேட்டிருந்தா இன்னைக்கு ஒரு பிள்ளை, ஒரு பொண்ணோடநின்னிருக்கும்!”

“சீ! வாயை மூடுங்கோ! அப்புறம், நானும் எல்லாத்தையும் பேசிடுவேன். உங்களுக்குத்தான் அசிங்கமாயிடும்!”

பெண்கள் இருவரும் சங்கரனும் தலையைக் குனிந்து கொண்டார்கள்..

சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு, “ சரி. . . சங்கரா! இன்னிக்கு ஞாயித்துக்கெழமையா யிருக்கிறதால், நீ போயி அந்த பலராமனைப் பாரு.. . .. . . . நானே கூட ஒரு வேலைக்கு முயற்சி பண்ணிண்டு இருக்கேனாக்கும்!”

“ஏன்? உங்களுக்கும்தான் டைப்பிங் தெரியுமே? அந்த பலராமன் சொல்ற பார்ட்டைம் வேலையை நீங்க ஏத்துக்குறது!”

“என்னடி, ஈவிரக்கமில்லாம பேசறே? நாப்பது வரு„ம் மாடா உழைச்சுட்டு ரிடைர் ஆயிருக்கேன்! இந்த வயசுக்கு மேலேயுமா டைப் அடிக்கப் போங்கறே? அடிப்பாவி நீ ஒரு மனு„¢தானா? ஏதோ எழுத்து வேலைன்னாலும் பரவால்லே. டைப் அடிக்கிறதாவது!”

ராமலட்சுமி பதில் சொல்லாத போதிலும், கணவனை நம்பாத தோரணையுடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பணிக்காலத்தில் வேலைகளில் தவறுகள் செய்ததற்காகவும், தாள்களைக் கட்டி வைத்து வேலையே செய்யாம லிருந்ததற்காகவும், மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்ட தன் சோம்பேறிக் கணவன் ஓய்வு பெற்ற பிறகு ஒருபோதும் வேலை செய்யத் தயாராக இருக்க மாட்ட ரென்பதால் ஓர் ஏளனச் சிரிப்பில் அவள் உதடுகள் வளைந்தன.

அந்தப் புன்னகையின் பொருள் புரிந்துவிட்டதால், தரணிபதிக்குள் ஆத்திரம் மண்டியது. அனால், என்ன சண்டை வந்தாலும் அம்மாவுக்கே பரிந்துகொண்டு வரும்மகன், மகள்களுக்கு எதிரே அவரால் வாயைத் திறக்க முடியவில்லை. மூக்கின் முனை மட்டும் துடித்தது.

“விடுங்கோப்பா. அம்மாவை ஒண்ணும் சொல்லாதங்கோ. நான் இப்ப அந்த இன்னொரு பார்ட் டைம் வேலையை ஏத்துண்டு இன்னும் ஐநூறு ரூவா கொண்டு வரணும். அவ்வளவுதானே? செஞ்சுட்றேன்.”

“அய்யோ! வேண்டாண்டா, சங்கர்! அப்புறம் உள்ளதும் போச்சு நொள்ளைக்
கண்ணாங்கிற மாதிரி ஆயிடும். சுவரை வெச்சுத்தானேப்பா சித்திரம் வரையணும்? ஒரு கெடியாரம் ‘கீ’ இருக்கிற வரையில தான் ஓடும். மனு„¡ளோட உடம்பும் அது மாதிரி த¡னேப்பா? அப்புறம், நீ படுக்கையிலே விழுந்துடுவே. இப்ப சத்தியா சேத்து வெச்சிருக்கிற பணமெல்லாம் உனக்கு மருந்து வாங்குறதிலே போயிடும். யோசிச்சுட்டு முடிவு பண்ணு. உங்கப்பாவுக்கு இருதயமே கிடையாதுடா. நன்னா நாலு வேளை சாப்பிடணும்!யாருக்கு இருந்தாலும் இல்லாட்டாலும் தன் வயிறு வாடக்கூடாது!” -கடைசி மூன்று வாக்கியங்களையும் ராமலட்சுமி முணுமுணுவென்று வாய்க்குள் சொல்லிக்கொண்டதால் கொஞ்ச நாள்களாய்ச் சற்றே மந்தமாகி விட்டிருந்த தரணிபதியின் காதுகளில் அவை விழவில்லை. ஆனால், மனைவி ஏதோ சொல்லித் தன்னை மனத்தாங்கலுடன் திட்டுகிறாளென்பது மட்டும் அரையாய்ப் புரிந்தது.

“என்னடி முணுமுணுன்றே? எறஞ்சு சொல்லித்தொலை. பதில் சொல்றேன்.”

“நாங்கல்லாம் நாலு வேளை சாப்பிட்டு சொகுசு கொண்டாடுறதுக்காக நீ உன்னை வருத்திக்க வேண்டாம்னு சொன்னேன். வேற ஒண்ணுமில்லே.”

தரணிபதி மனைவியை முறைத்தார்.

“நாங்கல்லாம்னு ஏண்டி பொத்தாம் பொதுவில சொல்றே? உங்கப்பான்னே சொல்றது!”

“அப்படித்தாம்ப்பா சொன்னா அம்மா!” என்று ƒ¡னகி வாய்க்குள் சொல்லி விட்டுச் சிரித்தாள்.

ƒ¡னகி சிரித்தது மட்டும் தெரிய, “நீ கேவலம் பண்ணினா உன் கொழந்தைகளுக்கும் கேவலமாப் போறது!” என்றவர் ƒ¡னகியை முறைக்க, அவள் பயந்து போய் எழுந்து தண்ணீர் குடிக்கும் சாக்கில் அடுக்களைக்குப் போனாள்.

“சங்கருக்குப் பதிலா நீங்க போங்கோ! எனக்கும்தான் வயசாயிண்டிருக்கு. ரிடைர்ஆயிட்டேன்னு †¡ய்யா உக்ந்துட்டேள். என்னால அப்படி உக்கார முடியறதா? பொம்மனாட்டிகள் மட்டும் எத்தனை வயசானாலும் உழைச்சுண்டே இருக்கணும்! ஒரு மணிநேரம் டைப் அடிக்கிறதுனால ஒண்ணும் தேஞ்சு போய்ட மாட்டேள்!” என்று மறுபடியும்தொடங்கிய மனைவியை முறைத்த தரணிபதி, “வாயை மூடு!” என்ற கத்தி விட்டு வாசல் திண்ணைக்குப் போய் உட்கார்ந்தார். அந்தக் கணத்தில் வீட்டு வாசலில் சைக்கிள் மணியோசை கேட்டது. எல்லாருமே வாசல் பக்கம் பார்த்தார்கள். சைக்கிளிலிருந்து இறங்கியஒரு பையன், வாசல் திண்ணையில் உட்கார்ந்து காற்று வாங்கிக்  கொண்டிருந்தவர்களிடம், “டி. சங்கர் வீடு இதானே?” என்றான்.

தரணிபதி, “ஆமா. என்ன வி„யம்ப்பா?” என்றார்.

“அவரைப் பாக்கணும்.”

“நான் அவனோட அப்பாதான். சொல்லு.”

“இல்லே, மாமா. அவரை நேர்ல பாக்கணும்.”

“சங்கர்! சங்கர்! யாரோ ஒரு பையன் வந்திருக்கான், உன்னைத் தேடிண்டு.”

வழிநடையில் கதவருகே நின்றிருந்த தாயை நகர்த்தி விட்டு வாசலுக்கு வந்த சங்கரனின் முகம் மாறியது. அவன் அவசரமாக வெளியே சென்று அந்தப் பையனைக்
கூட்டிக்கொண்டு நடக்கலானான். திண்ணையில் இருந்த தரணிபதியின் பார்வையும், வழிநடையில் நின்றிருந்த ராமலட்சுமியின் பார்வையும் இருவரையும் தொடர்ந்தன.

Series Navigationவெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *