ரியாத்தின் குறிப்பிடத்தக்க தமிழர் அமைப்புகளுள் தஃபர்ரஜ்ஜும் ஒன்று. தஃபர்ரஜ் 2013 இஸ்லாமிய விழா கடந்த வெள்ளியன்று அல்முஸ்தஷார் மகிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மெளலவி இப்ராஹீம் ஜும்ஆ உரையை அருந்தமிழில் ஆற்ற காரீ இம்ரான் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை நடத்திவைத்த பின்னர் விழா தொடங்கிற்று. எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற இவ்விழாவில் தஃபர்ரஜ் தலைவர் அஹமது இம்தியாஸ் வரவேற்புரை அளித்தார். துணைத் தலைவர் ஹைதர் அலி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்ச் சிலேடைப் புதிர்களை கவிஞர் இப்னுஹம்துன் பகிர்ந்துகொண்டார்.
குர்ஆனைப் புரிந்துகொள்ளும் கல்விப் பாடம் குறித்ததோர் அறிமுகத்தை முஹையத்தீன் கஸ்ஸாலி, மன்சூர் ஆலிம் ஆகியோர் சிறப்பாக நடத்தினர். பின்னர் மனோதத்துவப் பேராசிரியர் முனைவர்.அப்துல்லாஹ்(பெரியார்தா
முன்னதாக, பேராசிரியர் அப்துல்லாஹ்வின் நேர்காணல்களின் தொகுப்பான ‘கம்பளிப் பூச்சியின் ரோமங்கள் உதிர்வது போல அறியாமை உதிர்ந்தது…’ என்ற நூலை கவிஞர் ஷாஜஹான் அறிமுகப்படுத்த, நூற்பிரதிகளை பேராசிரியரிடமிருந்து ஷாஹுல் ஹமீது, சீனி நியாஸ், மின்ஹாஜ், முஹையத்தீன், கஸ்ஸாலி, அக்பர், ஃபெரோஸ் உள்ளிட்டவர்கள் பெற்றுக்கொண்டனர்.
தஃபர்ரஜ் செயற்குழு உறுப்பினர்கள் மன்சூர், ஆதம் அபுல்ஹசன், சிக்கந்தர் அனஸ், ஜாஹிர்ஹூசைன், காயல் கஸ்ஸாலி, அப்துல் அஸீஸ், ஜாஃபர் சாதிக், மீரான், ஷேக் அப்துல் காதர் உள்ளிட்டோர் விழாவின் பின்னணியில் காரியமாற்றியிருந்தனர்.
இப்னு ஹம்துன் நன்றி நவில, விழா இனிதே நிறைவுற்றது.
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2