தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !

author
1
0 minutes, 15 seconds Read
This entry is part 4 of 28 in the series 5 மே 2013

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

 

அந்த நாள் நாமிரு வரும் ஒன்றாய்

உடல் நெளிந் தாடினோம்

அடர்ந்த காட்டிலே !

மலர்களில் தோன்றிய ஆட்டம்

மலர் மாலை ஆனது !

அந்தச் சில கண நேரங்கள்

உந்தன் நினைவுக்குள் விழிதெழட்டும் !

அதை மறந்து விடாதே !

அந்த நாள் காற்று வெளியில்

பிதற்றும் நிலையில் என் மனது

பின்னிக் கிடந்தது !

எவ்விதம் நீ  

புன்னகை புரிந்தாயோ

அதுபோல்

மின்னலாய் அடிக்கும்

வானில் !

 

 

அந்த பௌர்ணமி இராப் பொழுதில்

நாமிருவரும் நெருங்கி

நடக்கும் போது

வானில் எழுந்தது பூரண நிலவு !

நீயும் நானும் சந்தித்த அந்த

வாய்ப்புத் தருணம்

எத்தகை மங்கல நிகழ்ச்சி !

இப்போது கால நேர மில்லை

எனக்கு !

உன்னை நினைத்து ஏங்கிடும்  

மனப் பளுவை மட்டும்

தாங்கிக் கொள்வேன்.

உன்  இதயத்தைச் சுற்றிப் போட்ட

என் முடிச்சை மட்டும்

அவிழ்த்து விடாதே !  

 அதை மட்டும் 

அவிழ்த்து விடாதே !

                                           

+++++++++++++++++++++++++

பாட்டு : 189   தாகூர்  தன் 66 ஆம் வயதில் [அக்டோபர் 17,  பினாங்கி லிருந்து இரயிலில் செல்லும் போது சுற்றுலாப் பயணத்தில் எழுதப் பட்டது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com]  May 1, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationசங்கல்பம்நவீன தோட்டிகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    “உன் இதயத்தைச் சுற்றிப் போட்ட என் முடிச்சை மட்டும் அவிழ்த்து விடாதே !” – தாடி வைத்த தாகூரின் மனத்தில் இவ்வளவு ஆழமான காதல் உணர்வா? நம்ப முடியவில்லையே! -நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *