அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்

This entry is part 8 of 40 in the series 26 மே 2013

 

குமரி எஸ். நீலகண்டன்.

இதுவென்று எதுவுமில்லை.

எதிலும் இது இல்லை.

எனதென்று உலகில்

எதுவுமில்லை.

உனதென்று உலகில்

ஒன்று மில்லை..

ஒன்றுமில்லா உலகத்தில்

பேருருவுடன் பெருத்த

புன்னகையுடன்

காத்திருக்கிற ஒன்று அன்பு.

பலருக்கும் அது

காட்சி அளிப்பதில்லை.

சுந்தரம் அவர்களுக்கு மட்டும்

அது சூரியனாய்

காட்சி அளித்திருக்கிறது.

 

அழியாத காதலின் ஆலயம்ஒவ்வொரு வீட்டிற்குள் நுழையும் போதும் இருக்கைகள் தெரியும். புத்தகங்கள் தெரியும். பொருட்கள் ஒவ்வொன்றும் தெரியும்விலை உயர்ந்த பொருட்கள், கலைப் பொருட்கள் சிலர் மனதில் ஆழமாய் பதிந்து விடும் அவையே அந்த வீட்டின் அடையாளமாய் பலர் மனதிலும் நிலை நிற்கும். ஆனால் சுந்தரம் அவர்களின் வீட்டில் நுழைந்த நினைவானது பத்மா சுந்தரம் இருவரை மட்டுமே நினைவுறுத்தும். சுற்றி இருக்கும் அனைத்தையுமே மூழ்கடிக்கும் வலுவான ஆளுமை கொண்டது அவர்களது அன்பு.

 

பிரிட்டீஷ் பேரரசின் பிரதமராகவும் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற சிறப்பிற்குமுரியவர் வின்ஸ்டன் சர்ச்சில். வின்ஸ்டன் சர்ச்சிலும் அவரது காதல் மனைவியான கிளெமன்டைனும் ஐம்பத்தாறு வருடங்கள் மிகுந்த நேசத்துக்குரியதிருமண வாழ்க்கை நடத்தினர். பணிகாரணமாகபிரிந்திருக்கும்சிறியகாலஅளவில்கூடகடிதங்கள்மூலமாகதங்களதுகாதலைபகிர்ந்துகொண்டனர். ஒரேவீட்டிலிருக்கும்போதுகூடஅவர்கள்காதல்குறிப்புக்களைபகிர்ந்துகொண்டனர். உலகஅறிஞர்களின்காதல்இலக்கியங்கள்அந்தஅளவிற்குபிரபலமானவை. சர்ச்சிலுக்குதனதுமனைவியின்சிறுபிரிவுகூடபெருந்துயரத்தைஅளித்தது. சென்னைக்குவந்திருந்ததனதுமனைவிகிளெமன்டைனுக்குவின்ஸ்டன்சர்ச்சில்1935 ஜனவரி 23 ஆம்தேதியன்றுஇங்கிலாந்திலிருந்துஎழுதியகடிதம்இது.

 

 

My darling Clemmie,

 

In your letter from Madras you wrote some words very dear to me, about my having enriched your life. I cannot tell you what pleasure this gave me, because I always feel so overwhelmingly in your debt, if there can be accounts in love…. What it has been to me to live all these years in your heart and companionship no phrases can convey.

 

Time passes swiftly, but is it not joyous to see how great and growing is the treasure we have gathered together, amid the storms and stresses of so many eventful and to millions tragic and terrible

years?

 

Your loving husband

winston churchill

வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய மனைவி க்ளெம்மிக்கு எழுதிய கடிதம்

 

 

என்கண்ணானஅன்பிற்குரியக்ளெம்மி,

நீ சென்னையிலிருந்து எழுதிய கடிதத்தில் உன்னுடைய வாழ்க்கையை நான் வளமைப் படுத்தியமை குறித்து எழுதிய உனது சில வார்த்தைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தன. இவைஎந்தஅளவிற்குஆனந்தத்தைஅள்ளிக்குவித்தனஎன்றுஎன்னால்சொல்லஇயலாது. காரணம்காதலுக்கென்றுஒருகணக்குஇருந்தால்நான்அளவுக்கதிகமாகஉனக்குகடன்பட்டிருப்பதாகஉணர்கிறேன். இவ்வளவுகாலங்கள்உன்இதயத்தில்நான்குடியிருப்பதற்கும், உன்னுடையதோழமைதுணைக்கும், என்னுள்இருக்கும்காதலின்விளைவுகளைதெரிவிக்கஎன்னிடம்வார்த்தைகள்இல்லை.

காலம்வேகமாககடக்கின்றது. சூறாவளியும்அழுத்தமுமானபலகடந்தகாலநிகழ்வுகளிலிருந்துலட்சக்கணக்கில்துயரமானகொடூரமானவருடங்களினிடையேநாம்இணைந்துசேமித்தது, இந்தஅன்பெனும்பெரும்பொக்கிஷம். அதுவும்வளர்ந்துகொண்டேஇருக்கிறது. இதைகாணும்போதுஎவ்வளவுமகிழ்ச்சியாகஇருக்கிறது.

 

அன்பிற்குரியகணவர்

வின்ஸ்டன்சர்ச்சில்

ஒருசிறுபிரிவுதுயரத்தில்வின்ஸ்டன்சர்ச்சில்வெளிப்படுத்தும்இந்தகாதல்இலக்கியத்தைவிடஉயர்வானது, தனதுமனைவியைஉலகைவிட்டுபிரிந்தசுந்தரம்அவர்களின்இந்தகவிதைஇலக்கியம். சுந்தரம்அவர்களும்பத்மாஅவர்களும்அமெரிக்காவிலோஇங்கிலாந்திலோபிறந்திருந்தால்இலக்கியத்திற்கானஉலகளாவிய உயரிய விருதை பெற்றிருப்பார்கள். இந்த நூல் அவர்களின் காதலை மட்டும் வெளிப்படுத்துவதல்ல. ஒரு வளமான ஆரோக்கியமானஉலகிற்கு அவர்கள் தருகிற செய்தி இது. ஒரு மகிழ்ச்சியான பாரதசமுதாயத்திற்கு அவர்கள் விதைக்கிற விதைஇது.இந்தநூல்குறித்துபேரறிஞர்கள்பலரும்உலகஇலக்கியத்தோடுஒப்புமைப்படுத்திஇதன்உயர்ந்ததரத்தைவியந்துஇந்தநூலிலேயேகருத்தைகூறிஇருக்கிறார்கள்.

 

பத்மாசுந்தரம்

 

பேரறிஞர்கள், பெரியவர்களென

இந்திராபார்த்தசாரதி

டி.வி.வெங்கட்ராமன்

பி.எஸ். ராகவன்

நடராஜன், நரசய்யா

கல்யாணம்

உட்பட

அறிஞர்கள்,

ஒவ்வொருவரின்

திசைகள்வேறு.

ஆனால்எல்லோரின்

பார்வையிலும்

ஒரேசூரியனாய்

பிரகாசித்தாள்பத்மா

 

அவரது வாழ்க்கையில்

இரண்டேவலிகள்

பத்மாவின்வாழ்க்கையில்

இரண்டேவலிகள்

திரண்டுவந்தன.

ஒன்றுபிரசவவலி.

மற்றொன்று

மரணவலி.

 

பிரசவவலிக்கு

பிந்தையஆனந்தத்தினை

அறிந்திருந்தாள்

முந்தியே

அழகான அறிவான

அற்புதமானகுழந்தைகள்

அவளின் பிரசவ வலிக்கு

ஆண்டவனின் பரிசுகள்.

அது உடலும் மனமும்

ஒன்றியபரவசம்.

 

மரண வலி

பரிவுகளின் பிரிவை

எண்ணி

அவளை வருத்திய

மயான வலி அது.

 

ஆனாலும் தவிர்க்க இயலாத

மரணமானது

அவளுக்கு பேரானந்தத்தையும்

பெரு அமைதியையும் அளித்தது.

மரணத்தின் பிந்தைய

அமைதியில்

ஒருபரவசஜோதியின்

பிரகாசம்தெரிந்தது

அவளில். அது

உடலற்றுஒளிர்கிற

ஆன்மபரவசம்.

 

மரணத்தின்பின்னுணர்ந்த

ஆனந்தம்.

தொலைவிலிருந்து

சுந்தரக்காதலை

சுவைக்கும்

தேனிலவுஅவளுக்கு..

சுந்தரத்தின் அன்பில்

அசையும் இதயத்துடிப்பில்

அவள் ஆடிக் களிக்கிறத் தருணமிது.

 

பத்மா சுந்தரம்

சிறந்தஓவியக்கலைஞர்.

பத்மாலயத்தில்

அவள் வரைந்த அந்த ஆழமான

ஓவியத்தின்குகைக்குள்ளிருந்து

ஒளிந்துவிளையாடினாள்

சுந்தரத்தோடு.

மேலே தொங்கிய

அழகியபுகைப்படத்தின்

வயதானமுகத்திலிருந்து

குழந்தையாய்சிரித்தாள்

சுந்தரத்தை நோக்கி.

 

சக்தியின்பீடத்திலிருந்து

சர்வசக்தியாய்

ஜொலித்தாள்பத்மா.

 

பத்மாலயத்தின்காற்றில்

பறந்துசுந்தரத்தின்

சுவாசத்துள்புகுந்து

அவரின்காதலை

சுவைக்கிற

ஆனந்ததேனிலவுஅவளுக்கு.

 

சுந்தரத்தின்மடிதனில்

பத்மம்

தாமரையாய்மலர்ந்தாள்.

கலைமகள்கரமசைக்க

கவிதைகள்பிறந்தன

சுந்தரக்கரங்களில்

சுவைபடசுவைபட

 

எலிஜீஸ்ஆன்பத்மா

உலகத்தரத்தின்

உன்னதகவிதைகளை

உருட்டிப்புரட்டுகிற

உத்வேகத்துடன்

காதல்சந்தத்துடன்

வந்தசுந்தரக்

கவிதைகளில்

களிநடம்புரிந்தாள்

 

தோழிஸ்யாமாவை

இழுத்து

ஆழமானஅக்கவிதைகளை

அழகுத் தமிழில் செதுக்கினாள்.

ஸ்யாமாவின் உன்னத

உணர்வுபூர்வமான

மொழிபெயர்ப்பில்

எழுத்துக்கள் தெரியவில்லை..

முகங்கள் தெரிந்தன

 

உலகத்தின் உன்னதமான

காதல் தம்பதியரான

பத்மா சுந்தரம்

இருவரின் புனிதமான

கருணை ததும்பிய

காதல் முகங்கள்

தெரிந்தன.

 

மொழி அறியாதவர்களுக்கு

அந்த மொழியைப்

பொறுத்தவரை அவர்கள்

பார்வை குறையுள்ளவர்கள்.

அவர்களுக்கெல்லாம்

மூக்கு கண்ணாடியாய்

முழுப்பார்வை அளித்தார்

டாக்டர் ஸ்யாமா ஸ்வாமிநாதன்

தனது தரமான

மொழி பெயர்ப்பால்.

 

சுந்தரத்தின் இதயத் துடிப்பை

இனிய தமிழமுதாய்

வார்த்தார்.

சுந்தரத்தின் இதய அமுதை

எல்லோரும்சுவைக்க

வைத்தார்.

 

பத்மாவிற்குஇப்போதுஎந்தவேலையுமில்லை…. எந்தமனச்சோர்வும்இல்லை. மனக்களைப்பும்இல்லை. சதாசுந்தரத்தின்சுவாசத்தோடுபயணித்துக்கொண்டும்அவரதுகவிதைகளைபடித்துபடித்துபரவசிப்பதுமாகவாழ்ந்துகொண்டிருக்கிறார்.

 

அழைக்கும்போதெல்லாம்கவிதைபத்மாவிற்குமிகவும்பிடித்துவிட்டது. ”when i call padma” என்ற ஆங்கில தலைப்பிற்கு ஸ்யாமாவின் அழைக்கும் போதெல்லாம் என்ற ரத்தின சுருக்கமான வளமான மொழி பெயர்ப்பும் பத்மாவை மிகவும் கவர்ந்தது. அந்த கவிதையை படித்த போது பத்மா சிரித்து கொண்டே இருந்தாள். காரணம் கேட்ட போது சொன்னாள். ”சுந்தரர் இனியெல்லாம் என்னை அழைக்க வேண்டாம். எப்போதுமே அருகிலிருப்பவளை அழைப்பது எதற்குஎன்றாள்.

 

உலகை நேசிப்பவனே தன்னை நேசிப்பவனாக இருக்க வேண்டுமென்ற பத்மாவின் அவாவிற்கு உரியவராக விளங்கியவர் சுந்தரம்.

 

பத்மாவை இழந்த சூன்ய உலகத்தில் சுந்தரம் அவர்கள் தனது சுந்தர நினைவுகளை நிரப்பினார். அவர்களின் காதல் ஈரத்தில் வறண்ட அந்த தேசத்தில் கவிதை மலர்கள் அழகுடன் பூத்தன. கவிதைகளைக் கண்டு தென்றல் வீசிற்று. வண்டுகள் இசையுடன் ரீங்காரமிட அந்த சூன்ய உலகம் ஒரு அழகிய மலர் தோட்டமாயிற்று. அதுவே பத்மாவிற்கான இந்த கவிதை தோட்டம் அழியாத கவிதையின் ஆலயம் பத்மாவிற்கு கவிதாஞ்சலி.

தனது பிரிவினை தனது கணவர் சுந்தரம் எதிர் கொள்ளும் விதத்தில் பத்மாவிற்கு மிகுந்த பெருமிதம். காரணம் உலக கவிஞரான டபிள்யூ ஹெச் ஆடனின் சலிப்பு தனது கணவரின் கவிதையிலில்லை. இயற்கையை எதிர்க்காமல் இயற்கையோடு செல்கிற தனது கணவரின் உயர்ந்த இயல்பை எண்ணி மனம் பூரிக்கிறாள். சக்தியின் உருவத்தில் தனது சாகாத அன்பின் வெளிப்பாடான அந்த கவிதைகளில் மனம் ஆனந்தமடைகிறாள்.

 

வறண்ட தூத்துக்குடியில் வசந்தம் வீசிய சுந்தரத்தின் காதல் நினைவுக் கவிதையில் பத்மாவைப் பொறுத்த வரை தூத்துக்குடியே குற்றாலத்தில் குளிக்கிறது.

 

பூரணத்துவம் அடைந்த பத்மாவின் விழிகளிலும் சில நேரங்களில் கண்ணீர் ததும்புகிறது. காரணம் விழிகளால் பருகும் தன் கணவனின் விரிந்த காதலை எண்ணி வியக்கிறாள்.

 

நீ வேண்டும் வேண்டும் என்றுமே எனக்கு நீயே வேண்டுமென பிடிவாதமாய் கவிதையில் அழைக்கும் சுந்தரத்திற்கு இருக்கிறேன்.. இருக்கிறேன்உன்னோடே இருக்கிறேனென இன்னொரு கவிதையில் காட்சி அளிக்கிறார் பத்மா.

 

எல்லைகளற்ற வெளியில் எந்த தொல்லைகளற்ற மனதுடன் பறக்கும் குதிரையில் பயணித்த காதல் அனுபவங்களின் சூசக முழக்கமான சுந்தரத்தின் வா காதல் செய்வோம் என்ற கவிதை வரிகளை படித்து படித்து சுந்தரத்தை சுற்றி சுற்றி வருகிறார் பத்மா.

 

அன்புக்குரியவளே என்று தனது இயல்புகளை உணர்ந்து இயம்பிய கவிதைகள் பத்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தன. காரணம் தன்னை முழுவதும் உணர்ந்த தனது கணவனை எண்ணி அவள் மிகுந்த பெருமிதம் கொண்டாள்.

 

உன்னோடு இருந்த காலங்களை நினைத்து பத்மாவை நிழலில் இருத்தி நிகழ்த்திய சுந்தரத்தின் கவிதையும் பத்மாவிற்கு தென்றலின் சுகத்தை அளித்தது.

 

தற்போது புத்தகமில்லாமல் படித்துக் கொண்டிருக்கிறாள் பத்மா, சிலைகளின்றி பூஜித்து கொண்டிருக்கிறாள்.சுந்தரம் அழைக்காமலேயே அவரின் அருகிருந்து உதவிக் கொண்டிருக்கிறார். தங்களது முதல் சந்திப்பை எண்ணி முகம் மலர்ந்து சிரிக்கும் பத்மா, காதலொளி ஏற்றப்பட்ட மயிலை வீட்டின் மனம் கவர்ந்த நாட்களை எண்ணி மனம் லயிக்கிறாள். காதலின் ஆனந்தத்தில் அன்றளித்த கண்ணீரையெல்லாம் சுந்தரத்திடம் குறும்பாய் திருப்பி கேட்கிறாள். மகளிடம் கற்றப் பாடமது கொடுத்த கண்ணீரை குறும்பாய் திருப்பி கேட்பது. அவள் சுந்தரத்தின் கவிதைக்கு பதிலாய் அவர் மூச்சில் கலந்து குறுகுறுக்கிறாள். மல்லிகை வாசம் வீசி அவரின் மனம் நிறைக்கிறாள். எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க அவருக்கு பாடம் சொல்கிறாள்.

 

யாருக்கும் அடிமையாகாத இயல்புடைய சுந்தரம் தம்பதியர் காதலுக்கா அடிமையாவார்கள்.

 

மயக்கமுற்ற அன்பு காதலுற்ற இருவருக்கு மட்டுமே இன்பமளிப்பது. அவை மனித சமுதாயத்திற்கு பயன்படுவதில்லை. மயக்கத்தில் கூட அவர்கள் தன் காதலை இழக்க தயாராக இல்லை. இருவரது அன்பால் தங்களை வலுவேற்றி பாரத பண்பாட்டை உயர்த்துவதில் இந்த சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றியவர்கள் அவர்கள். கரை கடந்தது இருவரின் காதல் பாய்ச்சல். சதா பாய்ந்து கொண்டே இருப்பது அவர்களின் காதல் வெள்ளம். அவர்களின் ஆத்மாக்களின் கரைகளுக்கிடையே கங்கை போல் ஓடிக் கொண்டிருப்போம் என்ற தனது கணவரின் கவிதை வரிகளில் பத்மா பெருமிதம் கொள்கிறார். தனித் தனி தந்திகளாய் தன்னிகரற்ற இசையை ஒலிக்கும் தங்களது காதல் முழக்கத்தை ஒலிக்கும் கவிதையில் பத்மா இன்பத்தில் உருகுகிறார்.

 

தாகூரின் கவிதைக்கு ஈடானது தனது கணவரின் காதல் வரிகள்.

ஷெல்லியோடு, ஜான் கீட்ஸோடு தனது கணவனின் கவிதைகளை ஒப்பு நோக்கி வியக்கிறாள்.

 

தனது கணவன் ஒரு உலக மகா கலைஞன்உன்னத மனிதர். உலகம் போற்ற வேண்டிய உயர்ந்த கவிஞனென காற்றில் உரக்கப் பாடுகிறாள். தனது கணவனே உலகத்தில் உன்னத கலைஞனென உரக்கப் பாடுகிறாள். அதுதானே உண்மைபத்மா மகிழ்ச்சியுடன் இன்னும் அவரது கணவரோடு வாழ்ந்து கொண்டு தனது குழந்தைகளை ஆசிர்வதித்து கொண்டிருக்கிறார்.

 

 

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *