தாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. !

This entry is part 18 of 40 in the series 26 மே 2013

தாகூரின் கீதப் பாமாலை – 66  

 

பிரியும் வேளையில் நீ சொல்லி விடு  .. !

 

 

Tagore 

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

 

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

 

 

பிரியப் போகும் அந்த நேரத்தில்

 

இறுதியாய் 

 

எனக்கு ஒன்றைச் சொல்லி விடு !

 

எப்போதும்  உன்  வேதனை மறைத்து

 

குசும்பு விளை யாட்டில்

 

உனது இதயத்தை எங்கே

 

ஒளித்து வைத் துள்ளாய் என்று

 

உரைத்து விடு !

 

சொல்லாமல் விட்ட சொல்லைச்

 

சொல்லி விடு நீ

 

பிரிவதற்கு முன்பு !  

 

 

 

 

ஏவிய உன் புன்னகை ஊசிகள்

 

ஏளனச் சொற்களால் என்னைத் தாக்கும் !

 

கண்மணி !  கண்ணீர்த்  துளியுடன்

 

இன்று வரட்டும் உன்

 

இறுதிச் சொல் ! 

 

அந்தோ !

 

அகந்தைப் பெண்ணே !

 

பிரிவால்  நேர்வது

 

இரட்டை மடங்கு வேதனை !

 

ஏனெனில் உனக்கு 

 

கொடுக்கப் பட விருக்கும் பரிசை

 

எடுத்துப் போக  நீ

 

விழைகிறாய்  !

 

 

+++++++++++++++++++++++++

 

பாட்டு : 177   1927 ஆண்டு நடுமையில் தாகூர்  66 வயதினராய் இருந்த போது ஷேஷ் ரக்‌ஷா என்னும் பாட்டு நாடகத்துக்காக எழுதியது.

 

+++++++++++++++++++++++++

 

Source

 

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

 

2. A Tagore Testament,

 

Translated From Bengali By Indu Dutt

 

Jaico Publishing House (1989)

 

121 Mahatma Gandhi Road,

 

Mombai : 400023

 

*********************

 

S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 20, 2013

 

http://jayabarathan.wordpress.com/

/

Series Navigationஒலியின் க‌ல்வெட்டுக‌ள்போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *