தாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !

This entry is part 23 of 27 in the series 30 ஜூன் 2013

 

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

என்னருகில் படகோட்டி உள்ள போது

அவனருகில் 

நான் செல்வ தில்லை !

விருட்டென அவன் நீங்கிய

காற்றின் வேகத்தை  

கடந்து சென்ற போது

உணர முடிந்தது என்னால் !

படகோட்டி கரைத்தட மிதப்பில்

நடந்த போது

குறிப்பாய் என் விழிகள் அவனைப்

பார்க்க வில்லை !

நீரோட்டம் எதிர்த்துச் செல்லும்

படகு நகர்ச்சியின்

தூரத்து அரவம் மட்டும் கேட்கும்

இப்போ தெனக்கு !

 

 

நாடக மேடைத் திடலில்

எந்த நாடகமும் நடக்க வில்லை

இப்போது !

அமைதி யின்றி மனம்

அவதி யுறும் நிலை இல்லாது

இரவும், பகலும் !

இப்போது

இறுதி நாட்களின் சொற்கள்

எனது

கனவுகளில் வந்து

கட்டி விடும் ஒரு  கூட்டை  !

திரளும் கண்ணீருடன்

திருப்பி நினைத்துப் பார்ப்பேன்  !

இன்றைய பொழுதில்

என்னிடம் எஞ்சி இருப்பது அது

ஒன்று தான்  !

 

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 191   1927 ஜூன் – ஜூலையில் தாகூர்  66 வயதினராய் இருந்த போது ஷேஷ் ரக்ஷா [Shesh Raksha] பாட்டு நாடகத்துக்கு எழுதிய பாடல் இது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 25, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -8மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *