வால்ட் விட்மன் வசனக் கவிதை – 30 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) உன்னத நிலை அடையும் காலம்

This entry is part 21 of 27 in the series 30 ஜூன் 2013

 

 

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

  

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

  

 

படுக்கையில் மூச்சிழுத்துக்

கிடக்கும் நோயா ளிக்கு

உதவி செய்ய முன்வருவேன் நான்.

உறுதி யாக

நிமிர்ந்து நிற்கும் மனிதருக்குத்

தேவை யான

பேருதவி செய்ய வருவோன் நான் !

பிரபஞ்ச விளக்கம் பற்றி

பிறர் உரைத்ததைக்  

கேள்விப் பட்டேன்;  ஆம்,

கேட்டேன் அதை, கேட்டேன் அதை

பல்லாயிரம் ஆண்டுகளாய் !

பார்க்கப் போனால்

நடுத்தரப் பொதுக் கருத்து !

ஆனால் அது அவ்வளவு தானா ?

பெரிதாக்கிப்

பயன் படுத்திப் பார்க்க

நான் முயன்றால்

வாணிபக் கழுகுகள்

ஏல விற்பனையில்

விலையை ஏற்றி விட்டு

பழைய வர்த்தகர்

தலை குனியச் செய்கிறார் !

 

 

பிரம்மா, புத்தர், ஜெகோவா,

கிரேக்கர மற்றும்

பெரோவின் ஓசிரிஸ், ஐசிஸ்

தெய்வங்கள் போல்

கடவுளை ஒத்த பரிமாணத்தில்  

படைக்கப் பட்டவ னாய்க்

கருதிக் கொள்கிறேன் என்னை.

உயிருடன் இருந்து, அவரது

கடமைகள் செய்வதில்

உடன்பாடு உள்ளது !

ஒவ்வொரு வடிவத் தெய்வங்கள்

மதிப்பீட்டை  

ஒப்புக் கொள்ளலாம் !

முகவரி ஒன்றில்லை

மகா சக்திக்கு !

உன்னத நிலை அடையும் என்

காலத் துவக்கத் துக்கு   

காத்திருக் கிறேன் !

 

 

அந்த நாள் எனக்குத்

தயார் ஆகுது !

அதற்குள்  

செய்ய வேண்டிய வற்றைச்

சிறப்பாய்

செய்து முடிப்பேன்

என்னால்

இயன்ற மட்டும் !

என் மண்டை வடிவைக் கண்டு

ஏற்கனவே நானோர்

படைப்பாளி யென

உடன்பாடு ஆகி விட்டது !

பதுக்கி வைத்த கருவுக்குள்

என்னை

பதித்துக் கொண்டேன்

இப்போது.

 

+++++++++++++

தகவல்:

 1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
 2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
  Cowley [First 1855 Edition] [ 1986]
 3. Britannica Concise Encyclopedia [2003]
 4. Encyclopedia Britannica [1978]
 5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
 6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
  [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 25, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -8
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

 1. Avatar
  Dr.G.Johnson says:

  வால்ட் விட்மனின் கவிதையை அழகுபட எழுதியுள்ளீகள் நண்பரே .உங்கள் கவிதை நடை படிக்க இனிமையாகவும் சுவை!படவும் உள்ளது. வாழ்த்துகள், தொடர்க தங்களின் கவிதைகள்!அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *