தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !

This entry is part 11 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

என்னுடல் உறுப்புகள்

எல்லா வற்றிலும்

ஊதுவது யார் புல்லாங் குழலை ?

உள்ளம் அலை மோதும்

களிப்படைந்தும்,

கவலை யுற்றும் !

மலரும்  என்னுடல் இன்னிசை  யால்,

மனம் பொங்கி நிரம்பும்,

சுற்றி உள்ள காற்றில்

புத்துணர்ச்சி அடைந்து மிதக்கும்

ஒரு நறுமணம்  !

 

உள்ளத்தின் உள்ளே திடீரென

நம்பிக்கை எழுந்திடும்

எனது தியாகம்

பரிவான

எரி நெருப்பைக் கக்கும்

ஒரு வாசக மொழியைத் தான்

கண்டு பிடித்து !

இன்று என் புதிய வனப்பிலும்

உடையிலும்

இதோ வருகிறது 

எனது ஆத்மாவின் குரல்

இரும்பு வளைய மிட்டு

கட்டுக் கடங்காத

கவித்துவ 

உள்ளெழுச்சியில்  !

 

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 331   1935  ஜனவரில் தாகூர்  74 வயதினராய்  இருந்த போது  “சித்ராங்கதா” நாட்டிய நாடகத்துகாக சாந்தி நிகேதனத்தில் எழுதப் பட்டது.  பிறகு ஒரு மாதம் சென்று ஒரு பாட்டு நாடகத்தில்  சேர்க்கப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] August 19, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஅயோத்தியின் பெருமைகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *