திண்ணையின் இலக்கியத் தடம் -3

This entry is part 9 of 33 in the series 6 அக்டோபர் 2013

ஜனவரி 3 2000 திண்ணை இதழ்
பழ.நெடுமாறனின் “தமிழக நதி நீர் பிரச்சனைகள்” என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் ” மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை” என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது. கேரள ஆறுகளில் 2500 டிஎம்சி நீர் பெருகுகிறது. 500 டிஎம்சிக்கு மேல் கேரளாவுக்கு விவசாயத் தேவை இல்லை என்கிறார். இந்த ஆறுகளை சுரங்கம் மூலமாகத் திருப்பி தமிழ்நாட்டின் கோவை, மதுரை, ராமநாதபுர மாவட்டங்களை செழிக்கச் செய்யலாம் என்கிறார். 1977 மாநில முதலமைச்சர்களின் குழு அமைக்கப் பட்டது ஆனால் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை.
( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000103&format=html)
——————————————————
வையாபுரிப் பிள்ளை -2 வெங்கட் சுவாமிநாதன் – சிலப்பதிகாரத்தை அதன் – இசையை நாட்டியத்தை – மேல் சாதி மீது வெறுப்பு என்னும் அரசியலில் ஆதாயம் தேடுபவர்கள் ஒதுக்கினார்கள் என்று தொடர்கிறார். கர்நாடக இசை என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு உரியது அல்ல தமிழர் அனைவருக்குமே சொந்தமானது என்பது அவர் வாதம்.
( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000103&format=html)
——————————————————-
‘சூரிய சக்தியில் குளிர்சாதனம்’ என்னும் கட்டுரையில் துக்காராம் கோபால் ராவ் இரண்டு விதமான குளிர் சாதன முறைகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று பூமிக்குக் கீழே புதைக்கப் பட்ட குழாய்கள் வழி குளிர் காற்றை (பூமிக்குள் உள்ள இயற்கையான காற்று) கட்டிடத்துக்குள் அனுப்புவது. மற்றொன்று dessicant என்னும் முறையில் சில ஈரம் உறிஞ்சும் ஜெல்லிகள் ஈரத்தை வெளிக்காற்றிலிருந்து உறிஞ்சி தாங்கள் உலர்ந்து அறைக்கு குளிர் காற்றத் தரும்.
( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000103&format=html )
கவிதைகள் – பழுப்பு நிற அணில் – ஹம்பெர்ட் உல்ஃப்
என்னைப் பற்றி நான் நினைத்தால்- மாயா ஏஞ்சலௌ
கனேடிய பருவ மங்கை – பொன்

*******************************************
ஜனவரி 10 2000 இதழ்:
கதைகள்: ‘அறிதலின் மூலம் ‘ – காஞ்சனா தாமோதரன், ‘துக்க விசாரணை’ – ஜி. நாகராஜன்
கவிதைகள்: ‘கடத்தல் கவிதை’ நிக்கி ஜியோவானி, ரேவதியின் கவிதைகள்.
*******************************************
ஜனவரி 18 2000 இதழ்:
சின்னக் கருப்பனின் கட்டுரை – “ஜெயலலிதா – பாகிஸ்தான்- பில் பிராட்லி” : தலைப்பில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் முதலாவது ஜெயலலிதா பற்றியது. டான்சி நிலம் ஒரு பதிப்பகத்தால் வாங்கப்பட்டது குறித்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு பத்து வருடம் கழித்து வந்துள்ளது. அரசு ஊழியர் அரசு நிலத்தை வாங்கக் கூடாது என்பது ஒரு வழி காட்டுதலே விதியல்ல என்னும் தீர்ப்புக்கு கட்டுரையில் இந்தப் பொழிப்புரைக்குப் பத்து வருடம் தேவைப்பட்டதா என்பது கேள்வி.

இரண்டாவது விஷயம்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்தில் ஒரு பாகிஸ்தானி ஊழியர் கள்ள ஐநூறு ரூபாயை மாற்ற முயன்ற போது கைது செய்யப்பட்டார். பதிலாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக ஊழியர் மீது பொய் வழக்குப் போடப் பட்டுள்ளது. இதை இந்தியா கடுமையாக எதிர்த்து ஏன் எச்சரிக்கை விடுக்க வில்லை? மிகவும் சகிப்புத்தன்மை காட்டுவது ஏன்?

மூன்றாவது: பின் பிராட்லியும் அல்கோரும் விவாதித்ததை திண்ணையில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் சின்னக் கருப்பன். ஐயா, என்னைப் போன்றவரை மனதில் வைத்தாவது அவர்கள் இருவரும் யார் என்று சொல்லியிருக்கலாமே? ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000118&format=html)
————————————————————-
ஜெயகாந்தனின் கட்டுரை: ஒரு நடிகன் என்பவன் யார்?:
“ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்னும் புத்தகத்தின் ஒரு பகுதி. நடிப்புத்துறையில் நடிகர்கள் கலைஞர்கள். ஆனால் இலக்கியம், கலை போன்றவற்றில் அவர்கள் பாமரர்கள். பணம், புகழை அடிப்படையாக வைத்து இந்தத் துறைகளிலும் தமக்கு ஒரு அங்கீகாரத்தை அவர்கள் தேடிக் கொள்கிறார்கள். இது ஜெயகாந்தனின் நடையில் கடுமையாக சாடப்பட்டுள்ளது. ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000118&format=html)
கவிதைகள் : கே.எஸ். அய்யங்காரின் கவிதைகள்
கதை: தாட்சண்யம் – ராஜநாராயணன்
***************************************************
ஜனவரி 24 2000 இதழ்:
சின்னக்கருப்பன் கட்டுரை: நெடுஞ்செழியன் – அமெரிக்காவின் அடாவடித்தனம் – இந்தியாவின் அடிவருடித்தனம் (மூன்று விஷயங்கள்)
1.நெடுஞ்செழியனை விமர்சித்து அவர் காலமானதால் விமர்சிக்கக் கூடாதா என்னும் கேள்வியை எழுப்பியுள்ளார். நெ சுயமரியாதை இயக்கத்தில் ஒரு உதாரணமாக இருந்தவர் சுயமரியாதை இன்றி வாழ ஒரு உதாரணமாகி விட்டார்.
2.கிளின்டனின் இந்திய விஜயத்தின் நோக்கம் இந்திய அணு ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்துவதே என்று ஊடகத்தில் ஒரு அமெரிக்க அதிகாரி பேசி இருக்கிறார். இது போல சீனா பற்றி அமெரிக்கா நினைக்கக் கூட முடியாது. சீனா பல அணு குண்டு தாங்கிய ஏவு கணைகளை அமெரிக்காவை இலக்காக்கி நிறுத்தி வைத்திருக்கிறது என்பதே அதற்குக் காரணம் சீனாவுக்கு அமெரிக்கா Most Favoured Nation என்னும் இடம் கொடுத்திருப்பதற்கு இதுவே காரணம்.
3. இந்தியா தானே பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று அறிவிக்காத போது மற்ற நாடுகளை எப்படி அவ்வாறு அறிவிக்கும் படி வேண்டுகிறது?
( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200012413&edition_id=20000124&format=html )
கதைகள் – கிறிஸ்மஸ் வாழ்த்து கடவுளே – லாரி ப்ரென்ச், நாடகம் – பலசாலி -அகஸ்ட் ஸ்ட்ரிண்ட் பெர்க்
கவிதைகள் -கலப்பினம் – லாங்க்ஸ்டன் ஹ்யூ, நதியோடு பேசுதல் – வ.ச.ஜ.ஜெயபாலன்
***********************
ஜனவரி 30 2000 இதழ்:
கட்டுரைகள்:
மூப்பனார் – அரசியலமைப்புச் சட்டம் – சீனா – சின்னக்கருப்பன் – சி.க எழுதினால் எப்போதும் மூன்று விஷயங்கள் பற்றித் தான் எழுதுவாரோ?
1.மூப்பனார் —திமுகவுடன் கூட்டணி வைத்ததில் திமுகவுக்கு எந்தப் பயனுமில்லை. காங்கிரஸுக்குத் தான் பயன். திமுக மட்டுமே திராவிடக் கட்சி. அதிமுக, மதிமுகவெல்லாம் மக்களை ஏமாற்றும் ஆனா ஆவன்னா கட்சிகள். மூப்பனார் ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்து விட்டார்.
2.பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டு வருவதாகக் கூறி இருக்கிறது. உபியில் கூட்டணி ஆட்சிகள் கவிழ்ந்து ஆறு மாதத்துக்குள் ஜனாதிபதி ஆட்சி வந்து விட்டது. எனவே நிலையான ஆட்சிகள் தேவை.
3.பாகிஸ்தானியர் ஒருவர் முஸ்லிம்களை ஒன்றாக்கி சீனாவில் கலவரம் செய்ததால் அங்கே தூக்கிலிடப்பட்டார். இருந்தாலும் சீனா, பாகிஸ்தான் உறவுக்குக் காரணம் இந்தியா மீது உள்ள பகையே. ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000130&format=html)
————————————————-
பெங்களூரில் வள்ளுவர் சிலை – கோபால் ராஜாராம்
பெங்களூரில் வள்ளுவர் சிலைக்கு எதிர்ப்பு வரக் காரணம் கன்னடர்கள் வள்ளுவருக்கு எதிரானவர் என்பதால் அல்ல. அவர்கள் பரந்த மனம் கொண்டவரே. இது ஒரு மேலாண்மைக் குறீயீடாகவே அவர்களால் காணப்படுகிறது. திராவிட இயக்கங்கள் சிலை வைப்பதில் தீவிரம் காட்டுகின்றன. சிலைகள் அவமதிக்கப்பட்டு கலவரங்களும் உண்டாகின்றன. நாம் சாரத்தை விட்டு விட்டு சக்கையைப் பிடிக்கிறோம். ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000130&format=html)
—————————————————
மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள் – மஞ்சுளா நவநீதன் – சற்றே நீண்ட கட்டுரை. ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை பெற்ற நான்கு பேரைத் தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தியும் அதே சமயம் மரண தண்டனையை எதிர்த்தும் ஒரு மாநாடு நடந்து அதன் பின்னர் சில கட்டுரைகள் காலச் சுவடில் வெளியிடப்பட்டன. கட்டுரை ஆசிரியர் தூக்கு தண்டனை ஒழிக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கும் அதே வேகத்தில் வன்முறையை ஆதரிக்கும் இயக்கங்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு பிரிவினைக் கருத்துக்களை வெளிப்படுத்தி இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ம.ந. சரித்திரப் பேராசிரியரோ? உலக சரித்திரத்தில் இருந்து பல எடுத்துக்காட்டுகளை பயன் படுத்துகிறார்.
( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000130&format=html )
விண்ணிலிருந்து ஒரு பார்வை – பாரி பூபாலன்
விண்வெளியிலிருந்து பார்க்கும் போது பூமி வெறும் உருண்டையாகத் தெரிகிறது. ஆனால் அதனுள் எத்தனை நாடுகள். எல்லைகள். சண்டைகள், சச்சரவுகள். விண்ணில் பயணிக்கும் போது அவர்களின் பிரதிநிதி போல நீ உணர்கிறாய். ஆனால் நீயும் அந்த வாழ்க்கையின் சிறு அங்கம் தான். ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000130&format=html)
கவிதைகள் -என் கண்ணம்மா – வ.ச.ஜ.ஜெயபாலன்

பிப்ரவரி 6 2000 இதழ்:
சின்னக்கருப்பனின் கட்டுரை: அன்று ஜல சமாதி இன்று அக்கினிப் பிரவேசம்.– ஜெயலலிதாவுக்கு கோர்ட் தண்டனை விதித்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் தர்மபுரியில் ஒரு கல்லூரிப் பேருந்து எரிக்கப் பட்டு மூன்று மாணவிகள் இறந்து போனைதையும், முன்னர் மகாமகக் குளத்தில் புனிதநீராட ஜெயலலிதா சென்ற போது பலரும் இறந்ததையும் ஒப்பிட்டு சி.க. எழுதியுள்ள கட்டுரையில் அரசியல் கட்சிகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று அழுத்தாமாகக் கூறுகிறார். (கட்டுரையில் அந்த வழக்கு விவரம் இல்லை. அந்த வழக்கு ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதிக்கு ஐந்து மாடிகள் கட்ட அனுமதி அளித்ததில் முறைகேடு என்று கோர்ட் முதலில் அளித்த தீர்ப்பு. அப்பீலில் அது ஜெவுக்கு சாதகமாக முடிவானது.) ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000206&format=html)

மரபணு மருத்துவம்: வெங்கட் ரமணன் : ஒருவருக்கு உகந்த மருந்து அவரது மரபணுவின் அடிப்படையில் எது என பெரியதான புற்று நோய் தொடங்கி தலை முடி உதிர்வதைத் தடுப்பது வரை கிட்டட்தட்ட எல்லாவற்றையுமே மரபணு அடிப்படையில் சிகிச்சை அளிப்பதைப் பற்றி விவரமாகச் சொல்கிறார். மரபணு ஆராய்ச்சியில் க்ளோனிங் என்னும் செயற்கை மனிதனை உருவாக்கும் முயற்சி விபரீதமானது என்று எச்சரிக்கிறார். ( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40002061&edition_id=20000206&format=html)

கவிதைகள்: லாவண்யா கவிதைகள், துடிப்பான சிறகுகள் – மனு பாரதி

***********************************

பிப்ரவரி 13 2000 இதழ்:

கட்டுரை: வீணை மீட்டும் கைகளே: பாரி— ஒரு வீணை ஒரு ரூபாய் என்று தொடங்கி இறுதியில் 5000 ரூபாய்க்கு ஏலம் போகிறது. எதற்கு பயன்படுத்த முடியாத பழைய வீணைக்கு இந்த விலை என்பவரிடம் பிறர் கேட்க அவர் ‘மீட்டிய கைகளால் இந்த வீணைக்கு மதிப்பு” என்கிறார். மீட்டுவோரில்லாமல் பல எளியோரின் வாழ்க்கை வலியோரால் சுரண்டப்படுகிறது. நாம் ஆசானாகி அவர்களை மீட்ட வேண்டும். ( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60002131&edition_id=20000213&format=html)

கனடாத் தமிழ் இலக்கியம் – பண்டிதர் பிரம்ம ராயர் – கனடாவில் வெளிவந்த சிற்றிதழ்களில் காலம், தேடல், தாயகம், நுட்பம், ழகரம், மறுமொழி ஆகிய இதழ்களையும் எழுத்தாளர்களில் செல்வம், ஐயகரன், ஜியார்ஜ் குருஷெவ், வ.ந.கிரிதரன், ஞானம் லம்பெட், அ. கந்தசாமி, திருமாவளவன், குமார் மூர்த்தி, சேரன், சிவதாசன், ஆனந்ப் பிரசாத், செழியன், குறமகள், மொனிக்கா, கவிஞர் கந்தவனம் ஆகியோரைக் குறிப்பிட்டு கனாடாவிலும் இலக்கியவாதிகளிடம் குழு மனப்பான்மை உள்ளதென்று குறிப்பிட்டு அதைத் தாண்டி வரும்படி வேண்டுகிறார். ( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600021314&edition_id=20000213&format=html)

இன்னொரு கட்டுரையில் வெஜிடபிள் புலாவ் எப்படிச் செய்வது என்று சொல்லித் தருகிறார் ஆர்.சந்திரா (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60002133&edition_id=20000213&format=html)
*********************************************

பிப்ரவரி 20 2000 இதழ்:
கட்டுரை:
வாஜ்பாயின் சவடாலும் வாட்டர் பற்றிய வரட்டு வாதமும்: கட்டுரையில் “ஆக்கிரமித்த காஷ்மீரைத் திரும்பத் தந்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு ” என்னும் வாஜ்பாயியின் பேட்டியை சவடால் என் கிறார் சின்னக் கருப்பன். இந்திய துணைக்கண்டத்திலுள்ள எல்லா நாடுகளையும் உள்ளடக்கிய நாடாக இந்தியா மாறுவதே காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என்கிறார் சி.க. தீபா மெஹ்தாவின் வாட்டர் படத்தை எதிர்க்கும் ஹிந்து அமைப்புக்களை விமர்சிக்கிறார். உபியில் ஒரு கிறித்துவப் பள்ளிக்கூடம் மாணவிகள் குட்டைப் பாவாடை அணிவதைக் கட்டாயமாக்குவதை இந்த அமைப்புகள் எதிர்ப்பதை சுட்டிக் காட்டி இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறார்.( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20002217&edition_id=20000221&format=html)

கணினி உலகின் புதிய விண்மீன்: கட்டுரையில் வெங்கட்ரமணன் X86 என்னும் நுண்செயலி பற்றியும், மடிக்கணினிகள் புழக்கத்துக்கு வந்துள்ளதையும், லினக்ஸ் பற்றியும், கைபேசிகள் வழியாகப் பல சாதனங்களை இயக்க இயலும் சாத்தியம் பற்றியும் விரிவாக விளக்குகிறார். தொழில் நுட்பம் பற்றிய விரிவான கட்டுரை. ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000221&format=html)

கடைசி வரை ஒருவர்: கடிதங்கள் அறிவிப்புகள் பகுதியில் மனுபாரதி சென்னையில் காயத்ரி என்னும் அறக்கட்டளையை நடத்தி வரும் ராகவன் என்பவரின் சேவைப் பாராட்டி அந்த அறக்கட்டளை அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதை எடுத்துக் காட்டி, நிதி உதவி செய்யப் பரிந்துரைக்கிறார். ( www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20000221&format=html )

கவிதைகள்: ஜெயமோகன் கவிதைகள், ஆதிவாசிகள்: ரேகா ராகவன்
கதைகள்: கற்கள்- விழி.பா.இதயவேந்தன்

***************************************************

பிப்ரவரி 27 2000 இதழ்:
இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது: கோபால் ராஜாராம் கட்டுரையில் ‘ராமானுஜர்’ என்னும் நாடகத்துக்காக இது வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, அவரது ‘ஔரங்கசீப்’ நாடகம் முக்கியமானது ஆனால் கிர்ஷ் கர்நாட்டின் துக்ளக் நாடகம் போல ஏனோ அது அங்கீகரிப்புப் பெறவில்லை என்று கூறுகிறார். இ.பாவின் மழை, போர்வை போர்த்திய உடல்கள் நாடகங்கள் இன்னும் நன்றாக வந்திருக்கலாம் என்று குறிப்பிட்டு ஜெயகாந்தனின் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன இவற்றை ஒப்பிட அழுத்தமாக வந்துள்ளது என்கிறார்.( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60002282&edition_id=20000228&format=html).

ப.சிதம்பரத்துக்கு ஒரு யோசனை: கட்டுரையில் சின்னக் கருப்பன் ஜெ.- காங்கிரஸ் கூட்டணிக்கு மூப்பனாரே காரணம் என்றும் சோனியாவின் ஆதரவாளர்களால் காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது என்று குறிப்பிட்டு ப.சி. காங்கிரஸில் சேர வேண்டும் என்று யோசனை தெரிவிக்கிறார். எக்கலான் என்னும் அமெரிக்க உளவுத் துறை பல ஐரோப்பாவில் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகவும் கூறுகிறார்.( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20002281&edition_id=20000228&format=html).

கதைகள்: அபுக்கா- ப்ரணவன், கவிதைகள்: லாங்க்ஸ்டன் ஹ்யூ கவிதை.

(திண்ணை வாசிப்பு தொடரும்)

Series Navigationநீங்காத நினைவுகள் – 18திருவரங்கக் கலம்பகத்தில் மறம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *