துளிப்பாக்கள்

This entry is part 7 of 26 in the series 27 அக்டோபர் 2013

தழும்பி நின்றது

எதிர்காலம் குறித்த பயம்

தேர்வறை.

———————————————————

புற்றீசலாய் கிளம்பிவிட்டார்கள்

பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு

தேர்தல்.

—————————————————————-

காளைகளுமில்லை

கழனிப்பானையுமில்லை

நவீன விவசாயம்

———————————————————————-

யாரை தேடி

இரவெல்லாம் பயணம்?

நிலா

—————————————–

சிலைகளாய் நின்றவர்கள்

உயிர்தெழுந்து வந்தார்கள்

மாறுவேடபோட்டி.

————————————————————

மு.கோபி சரபோஜி
Series Navigationசித்தன்னவாசல்மது விலக்கு தேவையா ? சாத்தியமா?
author

மு.கோபி சரபோஜி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *