தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !

This entry is part 29 of 29 in the series 3 நவம்பர் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 87

புல்லாங்குழல் வாசிக்கும் .. !

image (2)

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 
கனவு மறுபிறப்பு பெண்ணே !

உனது பாதை வழியே

குறியிட்ட சந்திப்பு இடங்களில்

நினைவு விளக்குகள் போல்

ஏற்றி வைக்கப் படும் !

மாதவிக் கொடி என்னும்

காலம் இன்று

மலர்ந்தது

எரியும் விளக்குகள் போல்,

நறுமணம் பொழிந்த வண்ணம் !

விழிப்பூட்டும் இரவுக் குளிர் காற்றில்

துடித்துச் செல்லும் விட்டில்

விளித்திடும் அலறி !

உடலில் ஒட்டிய புடவை முனை

நடுக்கம் உண்டாக்கும் !

இச்சமயம்

மௌனக் குரலில்

தூரத்தி லிருந்து வருவது போல்

என் இதயத்திற் குள்ளே

நள்ளிரவு ராகத்தில்

புல்லாங் குழல் வாசிக்கும் !

உன்னை நினைத்துக்

கொண்டு

தட்டு நிறைய நிரப்பினேன்

மல்லிகை பூ

மாலைகளை !

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 233   1939  ஆண்டு மார்ச் 12 இல்  தாகூர்  78 வயதினராய்  இருந்த போது எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  October  29 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் – 7 செப்டம்பர் அக்டோபர் 2000 இதழ்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

    இடும்போது Bold Fonts வந்து விட்டன கவிதையில். சிறிது எழுத்துருவுக்கு மாற்றும்படி வேண்டுகிறேன்.

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    ஜி.ஜே.தமிழ்ச்செல்வி says:

    விழிப்பூட்டும் இரவுக் குளிர் காற்றில்

    துடித்துச் செல்லும் விட்டில்

    விளித்திடும் அலறி !

    அழகான வரிகளை உள்ளடக்கிய கவிதை பிரபஞ்சத்தின் ஒரு துளியை பகிர்ந்ததில் திருப்தி உண்டானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *