வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!

This entry is part 11 of 34 in the series 10 நவம்பர் 2013

  வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam)

பெண்ணின் வடிவழகு ..!

walt-whitman

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

 

இதுதான் பெண்ணின் வடிவழகு,

அந்த வடிவி லிருந்து தான்

வெளிப்படும்

உச்சி முதல் பாதம் வரை

தெய்வத்தைச்

சுற்றியுள்ள ஒளிவட்டம் !

தவிர்க்க முடியாக் கடும் கவர்ச்சி

அந்த வடிவி லிருந்து தான்

முந்துகிறது !

துணையற்ற நீர் ஆவிபோல்

என்னைத் தன்வசம்

இழுத்திடும்

அவ்வடிவ உயிர்ப்பு !

என்னையும் அவ்வடிவையும் தவிர

மற்ற எல்லாம்

அப்புறம் விழுகின்றன !

கலைகள், நூல்கள், காலம், மதம்,

கண்ணுக்குத் தெரிபவை,

கற்பாறைப் பூமி,

வானுலக எதிர்பார்ப்பு,

அல்லது

அஞ்சிடும் நரகம் அனைத்தும்

கரைந்து இரையாய்ப்

போகின்றன !

 

 

கூந்தல், அழகிய கொங்கை

இடை நெளிவு, கால் வளைவு,

கவனமற்றுத் தொங்கும்

இரு கரங்கள்,

பொருட் செறிவில் லாதவை !

நானும் அதுபோல்

பொருட் செறிவில் லாதவன் !

ஏற்ற இறக்கத்தைக் கடல்

நீரோட்டம் மாற்றிவிடும் !

அது போல் நீரோட்டம்

ஏற்ற இறக்கத்தை

மாற்றம் செய்து விடும்.

காதலிக்கும்

சதை உடம்பு பொங்கிப் பூத்துச்

சுவைபட வலிப்பது !

எல்லை அற்ற

பேரளவில்

உடற்கனல் ஆக்கும் காதல்

உந்து சக்தி,

நடுக்கமுடன் ஊறும்

காதல் சுரப்பிகள்

கனி ரசமாகும் !

மணமகன்

தேனிலவுக் காதல் இரவில்

தானாய் எழுபவை.

ஆண்மகன் மென்மையாய்

சரண் அடையும்

அதிகாலைப் பொழுது !

 

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

 

 

****************
S.Jayabarathan [jayabarathans@gmail.com] November 7, 2013

 

http://jayabarathan.wordpress.com/

Series Navigationதிருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கைபனம்பழம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *