திண்ணையின் இலக்கியத் தடம் -9

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

Martin+Luther+King+Jr+PNG
சத்யானந்தன்

ஜனவரி 2001 இதழ்:

கட்டுரைகள்:

தலித் உளவியல் – கருத்தம்மா – அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று பேசும் கட்சிகள் சமூக நீதி என்று பேச முன் வருவதில்லை. கல்வி முறை, தொடர்பு சாதனங்கள் இவை எல்லாமே தலித்துகளுக்கு எதிராக ஆதிக்க சக்திகளுக்கு உதவியாகவே உள்ளன. இவற்றிலிருந்து விடுபட தலித்துகள் விழிப்புணர்வு அவசியம். தலித்துகளின் அறியாமை ஆதிக்க சக்திகளுக்குத் துணையாகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101012&edition_id=20010101&format=html )

இந்த வாரம் இப்படி – சின்னக் கருப்பன் – புத்தாண்டில் நாம் ஜாதி மத பேதங்களைக் கடந்து செல்ல முற்படுவோம். 2.நல்ல சாலைகளால் கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் வாஜ்பாயின் திட்டம் வரவேற்புக்குரியது. 3.”ஸ்பிக் ஊழல்” என்னும் வழக்கு ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கு அதிகரிப்பதைப் பொருத்துக் கொள்ள முடியாததன் விளைவு. 4.பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா மீண்டும் தாக்கலாகி உள்ளது. 5.செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பழி வாங்க பாகிஸ்தானில் இந்தியா குண்டு வெடித்தது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101011&edition_id=20010101&format=html )

இலக்கியக் கட்டுரை – என் கதை -2 -கே.டானியல் – “பஞ்சமர்” நாவலுக்குப் பின் என்னால் எழுதப்பட்ட கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்ச கோணங்கள், தண்ணீர் , முருங்கையிலைக் கஞ்சி, மையக் குறி, சொக்கட்டான் ஆகிய எல்லா படைப்புகளுமே பஞ்சமர் நாவலின் தடத்தை ஒட்டியவையே. எனது படைப்புகளில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நான் சந்தித்தவரே. கற்பனை பாத்திரம் யாரும் இல்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60101011&edition_id=20010101&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும் – சர்க்கரை சாப்பிடும் இயந்திர மனிதன்- கட்டுரையாசிரியர் பெயர் இல்லை. தென் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் சர்க்கரை குளூக்கோஸாகவும், க்ளூக்கோஸ் எலெக்ட்ரான்ஸ்களாகவும் மாற்றப் பட்டு பேட்டரியில் சேமிக்கப் பட்டு இயந்திர மனிதன் இயங்க உதவுகிறது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40101011&edition_id=20010101&format=html )

அறிவியல் துளிகள் – டாக்டர் இரா.விஜயராகவன் – அன்றாட நிகழ்வுகளின் பின் உள்ள அறிவியல் பற்றிய கட்டுரை. ((www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40101012&edition_id=20010101&format=html )

கதைகள்- காவல் – சா.கந்தசாமி, கண்ணாடி – அசோகமித்திரன், சில பயணக் குறிப்புகள்- காஞ்சனா தாமோதரன், கூனல்கள்- பாரதி ராமன்
கவிதைகள்- தி.க.சி பல்லாண்டு – வ.ஐ.ச. ஜெயபாலன், மனிதாபிமான ஃபாஸிஸ்டின் ஜனநாயகக் குரல், நீ யார் – பசவய்யா, சூரிய கிரகணம் – திலக பாமா

ஜனவரி 8, 2001 இதழ்: சாகித்ய அகாதமி விருது பெறும் தி.க. சிவசங்கரன்- கோபால் ராஜாராம் – சாகித்ய அகாதமி ஒரு குறிப்பிட்ட படைப்புக்காக விருது வழங்கினாலும் அது ஒரு ஆளுமைக்கு வழங்கப் படுவதே. ஜீவா அவர்களால் தொடங்கப் பட்ட தாமரை இதழை இலக்கியத்துக்கான பத்திரிக்கையாக உயர்த்தியவர் தி.க.சி. அவரால் தமிழ்நாட்டின் எழுத்தாளர்களாக அடையாளம் காட்டப் பட்டவர்கள் பிரபஞ்சன், டி.செல்வராஜ், பூமணி, வண்ணதாசன், தமிழ் நாடன், அக்கினிபுத்திரன், சார்வாகன், ஜெயந்தன். இலங்கை எழுத்தாளர்களைத் தமிழ் நாட்டுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர் திகசி. கைலாசபதி, அகஸ்தியர், சிவத்தம்பி, சாந்தன், டொமினிக் ஜீவா ஆகியோர் தாமரையின் மூலம் அறிமுகமானவர்கள். அவரது இலக்கியப் பணி இணையற்றது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101081&edition_id=20010108&format=html )

குரூரம் – கட்டுரை – கி.ராஜநாராயணன் – கரிசல் காட்டுக் கதைகளில் இரண்டு இந்தக் கட்டுரையின் வாயிலாக நமக்குக் கிடைக்கிறது. காட்டான் நாட்டான் என்று இரு நண்பர்கள் தனிக்கட்டைகள். வரும் ஆயுதம் எடுத்து ஆளை வெட்டிவதற்கு அஞ்சாதவரகள். ஒரு நாள் நாட்டான் காட்டான் குடிசைக்குப் போகிறான். காட்டான் “ன்றைக்கு ஒன்றுமில்லை. நாளைக்கு ஆட்டுக் கறி வேக வைக்கிறேன். வா” என்கிறான். ஆட்டுக் கறி வேகும் வாசனை பிடித்த நாட்டான் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து வெட்ட முடிவு செய்து காட்டானின் கவனம் பிசகுவதற்காகக் காத்திருக்கிறான். அப்போது காட்டான் “நேரமாகி விட்டது. ஆத்திப் பட்டை மணத்து விட்டது. இன்னும் வெந்தால் கூழாகி விடும்” என்றான். ஆத்திப் பட்டை என்பது ஒரு மரப் பட்டை அதில் நார் உரிக்க ஒரு அளவுக்கு வேக வைக்க வேண்டும். அது வேகும் போது ஆட்டுக்கறி வாசனை வரும். இதைக் கேட்டதும் நாட்டான் மனம் வருந்தினான். “அவசரப் பட்டுவிட்டோமே” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு கிளம்பினான். இதன் உபகதையாக கி.ரா. நினைவு கூருகிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது நிறைய விருந்தினர் வந்த ஒரு நாளில் மூன்று கோழிகளை சமைத்தும் கடைசியில் பணியாள் ஆண்டியபுரத்தான் என்பவருக்கு ஒரு துண்டு கோழிக்கறி கூடக் கிடைக்கவில்லை. அவர் வெறுப்பில் அடுத்த நாள் வீட்டில் இருந்த எல்லாக் கோழிகளின் கழுத்தையும் திருகி விடுகிறார். குரூரத்துக்கு இவை இரண்டும் கி.ராவின் நினைவில் வரும் உதாரணங்கள்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101082&edition_id=20010108&format=html )

என் கதை- 3- கே.டானியல் – மூன்றாம் பகுதியில் யாழ்ப்பாணத்தின் கடை நிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைத் தாம் பல நாவல்களில் கதையாய்க் கொண்டு வந்ததைக் குறிப்பிட்டு ஒரு நாள் குழந்தைகளுக்குக் கஞ்சிக்காக மொத்த சோற்றையும் குழைய வைத்து விட்ட தமது தாயைப் பார்த்து தம் தந்தை ஒரு கவிதை எழுதியதை நினைவு கூறுகிறார். டேனியலின் மறைவுக்குப் பின் “இலக்கு” என்னும் சிறு பத்திரிக்கையில் இருந்து இந்த மூன்று பகுதிகளும் திரட்டப் பட்டன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60101081&edition_id=20010108&format=html )

நகைச்சுவையும் வித்தியாசமானவையும் – கோமதி நடராஜன் – 1984ம் ஆண்டு மங்கை ஜூன் இதழில் வெளியான ஆலோசனைகள்- குடும்பத் தலைவிக்கு அறிவுரைகள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70101081&edition_id=20010108&format=html )

கலைகள், சமையல் – சமையல் குறிப்பு – பாதாம் கீர், உளுத்தம் பருப்பு போண்டா

கதைகள்: தேவை – சா. கந்தசாமி, போலீஸ்காரர் மகள்- பாரதி ராமன்

கவிதைகள்- அடை வேகுதே- ஆசைத்தம்பி, ஒற்றைத் தீக்குச்சி – லாவண்யா

ஜனவரி 15, 2001 இதழ்:

கட்டுரைகள்:
மானுடவியல் (Anthropology) என்பது என்ன? (அமெரிக்க மானுடவியலாளர் சங்கத்தின் வலைப் பக்கத்திலிருந்து)- கட்டுரையை சுருக்குவது கடினம். அதன் ஒரு முக்கிய பகுதி அப்படியே:

“ஒரு துறை என்று பார்த்தால், மானுடவியல் வெளிப்படையான பரிணாமப் பார்வையை மனித நடத்தையை ஆய்வதற்க்குப் பயன்படுத்துகிறது. மானுடவியலின் நான்கு முக்கியமான உப துறைகளிலும் (சமூகக் கலாசார மானுடவியல், உயிரியல் மானுடவியல், தொல் பொருள் மானுடவியல், மொழியியல் மானுடவியல் ) மனிதன் பெரும் நீண்ட பரிமாணப் பாதையில் வந்து கொண்டிருக்கிறான் என்று ஒப்புக் கொண்டு, அதை ஆய்வதன் மூலமே மனிதனாக இருப்பது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியும் என்றும் ஒப்புக் கொள்கிறது”

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101151&edition_id=20010115&format=html )

இந்த வாரம் இப்படி: சின்னக் கருப்பன்: 1.பொங்கல் வாழ்த்துக்கள் 2. சுப்பிரமணிய சுவாமி கடுமையான குற்றச் சாட்டை காங் தலைவர் மீது வைத்திருக்கிறார். 3.தாய்வான் டிஜிட்டல் கேமரா தொழில் நுட்பத்தில் முன்னோடியாக உயர்ந்துள்ளது. 4.வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப் பட்டுள்ள சோக்கிலா அய்யர் தமிழ்நாட்டவர் இல்லை. சிக்கிம் பழங்குடி இனத்தவர். 5.ஆனந்த விகடனில் தெருவில் பாடும் பார்வையிழந்தவர், பலூன் விற்பவர், பாத்திரத்தில் பெயர் பதிப்பவர் எனப் பல எளியோரை பேட்டி கண்டு போட்டுள்ளது பாராட்டுக்குரியது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101152&edition_id=20010115&format=html )

மார்ட்டின் லூதர் கிங் பேக்சுகளிலிருந்து சில முத்துக்கள்: (ஒரு பகுதி அப்படியே) : மன்னிப்பதற்கான தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் குணம் அற்றவன் அன்பு செலுத்தும் குணமும் அற்றவனே. நம்மிடையே மிக மோசமானவர்களிடம் கூட சில நல்ல குணங்கள் உண்டு. அதே போல் மிகச் சிறந்த மனிதர்களிடமும் குறைபாடுகள் உண்டு. இதைப் புரிந்து கொண்டால் பகைவர்களையும் நேசிக்கும் பண்பு உருப்பெற்று விடும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101153&edition_id=20010115&format=html )

இந்திய ராணுவம் ஒரு காகிதப் புலியா- பிரிகேடியர் எஸ் எஸ் சாந்தேல் -SC VCM (Retired) -இந்திய மக்கட் தொகையை, நிலப்பரப்பை ஒப்பிட ராணுவ பலம் குறைவே. எல்லா பட்டதாரி ஆண்களும் பெண்களும் 2 ஆண்டு கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் மூன்றாண்டு ராணுவ சேவை செய்ய வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101154&edition_id=20010115&format=html )

யுத்த விமானம் ஒன்று – மோகன் கருப்பைய்யா- மிக் விமானங்கள் மிகவும் திறனுள்ளவை. இவை பழுதாகும் நிலையில் உள்ளன. புதியவை தேவை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101155&edition_id=20010115&format=html )

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்
ஒரு கவிதையும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அதன் அகழ்வாராய்வும் – பாரதி ராமன் – தன்னைச் சுற்றி காலமான உயிரோடு உள்ள சங்கீத மேதைகள் நிற்பதாக ஒரு கற்பனை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70101151&edition_id=20010115&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும் –

வருங்காலத்து 10 தொழில் நுட்பங்கள் – எம் ஐ டி ரிவியு – 1. மனித மூளை கம்யூட்டர் இணைப்பு (Brain machine Interfaces)

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40101151&edition_id=20010115&format=html )

கதைகள் : உறவினர்கள் -அழகிய சிங்கர், சொந்தக் கதை சோகக் கதை – ஆகேஷ்
கவிதைகள்- சிலிர்த்த முத்தம் – வ.புகழேந்தி, ஜனவரி 22ல் ஒரிஸாவில் எரித்துக் கொலை செய்யப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு அஞ்சலி – வ.ஐ.ச. ஜெயபாலன். கட்டற்ற காதல் பாட்டு – ரைடியஸ் பிரதர்ஸ்

ஜனவரி 22, 2001 இதழ்:

இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்-

1. ஜார்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். 2. இந்தியாவுக்கு சீனப் பிரதமர் வருகை. 3.ஜெயலலிதாவுக்கு மூப்பனார் கண்டனம். 4.சாட்டின்புரா என்னும் இடத்தில் ஐஎஸ்ஐ தூண்டுதலால் தான் சீக்கியர்களைக் கொன்றதாகக் கொலையாளி வாக்குமூலம். 5.சு. சமுத்திரம் சாகித்ய அகாதமியை விமர்சித்தார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101221&edition_id=20010122&format=html )

இலக்கியக் கட்டுரைகள்:

வரைபட உலகம் – வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை- பகுதி 1 – சுகுமாரன் -வைதீஸ்வரனை சமகால கவிஞர்களுடன் ஒரு ஒப்பாய்வு.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60101221&edition_id=20010122&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்

எம் ஐ டி ரெவ்யூ- 2- நெகிழும் டிரான்ஸிஸ்டர்கள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40101221&edition_id=20010122&format=html )

கணினி வலையம் – இரா.விஜயராகவன்- LAN, WAN பற்றிய விரிவான கட்டுரை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40101222&edition_id=20010122&format=html )

கதைகள்: வாரிசை- லாவண்யா, உறவு, பந்தம், பாசம் -மௌனி
கவிதைகள்: மழை -திருமாவளவன் மாற்று அறுவை சிகிச்சை கவிதைகளுக்கானது -பாரதி ராமன்

கலை சமையல் – இறால் பிரட் கிச்சடி, தந்தூரி சிக்கன்

ஜனவரி 29 2001 இதழ்:

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் – ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் -1: தேஜஸ்வினி நிரஞ்சனா- ராஜ்குமார் கடத்தப் பட்ட போது பல ஒலிப் பேழைகள் வெளியிடப் பட்டன. கன்னட் மொழியின் அடையாளமாக ராஜ்குமாரை நிறுவ ஊடகங்கள் முயன்றது பற்றிய விவரங்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101291&edition_id=20010129&format=html )

இந்த வாரம் இப்படி – மஞ்சுளா நவநீதன்- 1.குஜராத்தில் பூகம்பம், 2.யார் தலித் மக்களின் எதிரிகள்? 3.கும்ப மேளாவில் சோனியா காந்தி, மகாமகத்தில் ஜெயலலிதா 4.

( )

தண்ணீர் தண்ணீர் – சயன்டிபிக் அமெரிக்கன் கட்டுரையின் தழுவல் – தமிழ்நாட்டுக் குடிநீருக்கு மூன்று அணுகு முறைகள் : 1. புதிய நீர் உற்பத்திகளைத் தேடுதல் 2. புதிய நீர் வினியோக முறைகள் 3.தேவையைக் குறைத்தல் 4.மறு உபயோகம்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20101293&edition_id=20010129&format=html )

வரைபட உலகம் 2- வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை – சுகுமாரன் – வைதீஸ்வரன் கவிதைகளில் பிரமிப்புக் கணங்களே எஞ்சியிருக்கின்றன. சில வரிகளாகவும் சில படிமங்களாகவும் தேங்கியிருக்கின்றன. அந்தக் கணங்கள் நீட்சி பெற்று கவிதைத் தருணங்களாக நிலைப்பதில்லை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60101291&edition_id=20010129&format=html )

அறிவியல் தொழில் நுட்பம் – எம் ஐடி டெக்னாலஜி ரெவ்யூ -3- DATA MINING – செய்திப் புதையலெடுப்பு
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40101292&edition_id=20010129&format=html )

கலைகள், சமையல் -கேரட் அல்வா, கேழ்விரகு தோசை
கவிதைகள்: திறந்த புத்தகம் – திலக பாமா, வீட்டுக்குறிப்பின் உள்ளுணர்வு: சித்திரலேகா, நெறி: பாரதிராமன்,
கதைகள்: நிதர்சனம்- ஆகேஷ், ஒரு வருடம் சென்றது – சா.கந்தசாமி, பாஷை-ஜெயகாந்தன்

பிப்ரவரி 4 2001 இதழ்:

இந்த வாரம் இப்படி: மஞ்சுளா நவநீதன்- 1.குஜராத் பூகம்பத்தில் பலியானோர் செய்திகள் மிகவும் வருத்தமளிப்பவை. தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நிதி தருவோருக்கு காசோலக் கமிஷன் தள்ளுபடி செய்துள்ளது. வரவேற்கத்தக்கது. 2. தனித்தமிழ் நாடு கோரும் இயக்கங்களைத் தடை செய்ய வேண்டுகிறார் கலைஞர். 3.தர்மபுரி அருகே பயங்கரவாதத்துக்கான மின்னணுக் கருவிகள் கிடைத்துள்ளன. 4.போடி அருகே முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. 4.சேடப்பட்டி முத்தையாவின் நிலையில்லாத அரசியல். 5.எம்ஜியாருக்குக் கோவில் கட்டுகிறார் சுதாகரன். 6. ஜார்ஜ் புஷ் கருக்கலைப்பு செய்யும் நிறுவனங்களுக்கு நிதி உதவி இல்லை என்று அறிவித்தது கிறித்துவ அமைப்புகளின் அழுத்தத்தால் தான். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102041&edition_id=20010204&format=html )

பாகிஸ்தானிலிருந்து ஒரு கடிதம் (மக்கள் விருப்பத்தை எதிர்த்து)… இர்ஃபான் ஹூசேன் – பாகிஸ்தானின் ஹெரால்ட் இதழில் பேனசீர் புட்டோ அளித்த பேட்டியில் ராணுவத்தின் கீழ் வரும் ஏழு நிறுவனங்கள் தேர்தலின் போது பணபலம் மற்றும் ஆள் பலத்தைப் பல்வேறு பகுதிகளில் பிரயோகித்தார்கள் என்று விளக்கும் கட்டுரை. கட்டுரையின் கீழ் பின் குறிப்பாக ” ராணுவ ஆட்சி ” இந்தியாவில் வர வேண்டும் என்று பிதற்றுவோருக்காக இந்தக் கட்டுரை வெளியிடப் படுகிறது என்னும் குறிப்பு முக்கியமானது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102042&edition_id=20010204&format=html )

ஆண்மையின் புதிய அளவு கோல்கள்- ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் -2- தேஜஸ்வனி நிரஞ்சனா- தமிழர்கள் எல்டிடியியுடன் அடையாளப்படுத்தப் படுகிறார்கள். கன்னடத்தவர் அப்பாவியாக ராஜ்குமாருக்காக சாமி கும்பிடுகிறார்கள். நாம் ஏன் இன்னும் பொறுமை காக்க வேண்டும் எனப் பேசுகின்றன இந்தப் பேழைகள். வீரப்பன் காவிரி பற்றி வைத்த கோரிக்கை ஒருவிதத்தில் இத்தகைய மொழிவெறியாளருக்குப் பயன்பட்டுள்ளது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102044&edition_id=20010204&format=html )

பின் நவீனத்துக்கு முன்னும் பின்னும் – ரேமண்ட் ஃபெடர்மன்- பகுதி 1- காஞ்சனா தாமோதரன்- பின் நவீனத்துவம் பற்றிய ஆழமான புரிதலுக்கு இட்டுச் செல்லும் கட்டுரை. கண்டிப்பாக இதை முழுதாகப் படிக்க வேண்டும். அதன் முக்கியமான பகுதி கீழே:
” இலக்கியத்தின் Master Pieces இப்போது அர்த்தமற்றுப் போயின. அல்லது அர்த்த மிகுதியில் மூழ்கின: அடிப்படையற்று, முற்றுப் பெறாது , முரண்கள் நிறைந்த மொழி; இலக்கணம், நியதி, வடிவம், முறைப்படுத்துதல், என்று மொழியின் வெற்று வார்த்தைப் பிரயோகங்கள் ; master piece எழுத்துக்களின் அர்த்தம் எழுத்தாளரின் திறமையால் பிரதியினுள் இயல்பாகப் பொருந்தி, காலகாலத்துக்கு நிலைத்திருப்பது என்பது மாறி, தற்காலிகமானதாகவும், வாசகர்களால் அருளப்பட்டதாகவும் தெரிந்தது. மனித இனத்து உலக அனுபவங்களின் புனித புராணமாக, கலாசாரத்தின் விலைமதிப்பற்ற அடையாளமாக, மாறாத அடிப்படை மனித இயல்பின் ஒட்டுமொத்த உண்மையாக இலக்கியத்தைப் போற்றுவது நின்றது. தனி மனித சுதந்திரத்தை அழிக்கும் ஆதிக்க சக்தியாக, பெண்களின் மீதும், தாழ்த்தப் பட்டோர் மேலும், வெள்ளைக்கார ஆண் ஆதிக்கம் செலுத்த உதவும் உபகரணமாகவே இலக்கியம் காணப் பட்டது. இலக்கியத்தின் தாழ்ந்த வேலைக்காரனாக இருந்த இலக்கிய விமர்சனம் தன் சுதந்திரத்தை அறிவித்து தானும் இலக்கியம் என்று அழுந்தக் கூறிக் கொண்டது.

அனைவரும் இந்தப் புதிய பார்வையை கோணல் பார்வை என்றனர். சிலர் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் காலப் போக்கில் அதுவே அத்தருணத்தின் உண்மை நிலை என்றாயிற்று. நவீனத்திலிருந்து பின் நவீனத்துவத்துக்கு மாறியதன் விளைவுகளே இவை என்பது இப்போது புரிகிறது”
( )

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள் – 1 ஜெயமோகன்- குற்றாலத்தில் கன்னட எழுத்தாளர்களுடன் நடந்த இலக்கிய அமர்வில் திலகவதி நூல்களை வெளியிட்டார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60102043&edition_id=20010204&format=html )

இலக்கியமும் திரைப்படமும் – பாண்டிச்சேரி கருத்தரங்கு- கௌதம நாதன்- பல எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குனர்களும் கலந்து கொண்ட கருத்தரங்கு சாகித்ய அகாதமியால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60102044&edition_id=20010204&format=html )

அறிவியலும் தொழில் நுட்பமும்

எம் ஐடி – டெக்னாலஜி ரெவ்யூ-டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை – ரஞ்சித் சிங்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40102042&edition_id=20010204&format=html )

டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு -ரிச்சர்ட் டாக்கின்ஸ்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=40102041&edition_id=20010204&format=html )

கதைகள்- நான் பண்ணாத சப்ளை – அஸ்வகோஷ், வரிகள் – லா.ச.ராமாமிர்தம்

கவிதைகள்- அவமானத்துடன் ஒரு அரிவாள்- சேவியர், சிந்தாமணி கொட்லகெரெயின் கவிதைகள்- தமிழில் பாவண்ணன் , பி.ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்- தமிழில் ஜெயமோகன், நிர்மால்யா, நெடில்- பாரதி ராமன், கடவுளே கடவுளே கோகுல கிருஷ்ணன்

கலை சமையல்- கைமா வடை, பானகம்

பிப்ரவரி 11 2011 இதழ்:

பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்கப் போராடும் ஆப்கானியக் கலைஞர்கள்- (புராண காலத்தில் காந்தார இசை என்று புகழ் பெற்ற ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ஃபாக் யூசுப் பாய் எழுதிய கடிதம்)

தாலிபான்கள் கை ஓங்கிய பின் இசை என்பது குற்றமாகக் கருதப் படுகிறது. இசையைக் கேட்பதும் இசைப்பதும் தண்டனைக்கு வழி வகுக்கும். பல ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் உஸ்தாத் மொஹம்மது இஸ்வான் என்பவர் பெஷாவரில் இரு சிறிய அறைகளில் சங்கீதம் கற்பிக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102111&edition_id=20010211&format=html )

ஆண்மையின் புதிய அளவு கோல்கள்- ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – தேஜஸ்வனி நிரஞ்சனா-3- ராஜ்குமார் கடத்தப் பட்டு 40 நாட்கள் ஆன நிலையில் தமிழ் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஊடகங்களில் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102112&edition_id=20010211&format=html )

இந்த வாரம் இப்படி: மஞ்சுளா நவநீதன்

1. ரூபாய் நான்கரை லட்சம் விலையாகும் எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்து அமெரிக்காவில். அது 13000 ரூபாய் இந்தியாவில். இந்திய காப்புரிமைச் சட்டங்கள் அவ்வளவு கடுமையானவை அல்ல என்பதே காரணம். 2005ல் இது மாறுகிறதாம். நல்லதல்ல. 2.எதிர்ப்புக்களுக்கு அஞ்சி உலக வர்த்தக நிறுவன மாநாடு அடுத்த முறை தோஹா நகரில். 3. ஜாதிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் திமுக ஜாதி அடிப்படையில் இயங்கும் கட்சி அல்ல. 4. பழம் பெரும் எழுத்தாளர் சாவி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102113&edition_id=20010211&format=html )

இலக்கியமும் திரைப்படமும் – பாண்டிச்சேரி கருத்தரங்கு- கௌதம நாதன்-
ஜெயகாந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60102111&edition_id=20010211&format=html )

பின் நவீனத்துக்கு முன்னும் பின்னும் – ரேமண்ட் ஃபெடர்மன்- பகுதி 2- காஞ்சனா தாமோதரன்-

பின்னவீனத்துவம் பற்றிய மிஷேல் ஃபூக்கோவின் விளக்கம்: வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு ஒரு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை தருக்கமும் மரபும் அற்றது ; பன்மையை வரவேற்பது; அங்கீகரிக்கப் பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது ; ஒப்புதல் உள்ளது – அதே நேரத்தில் தனிமைப் படுத்துவதை உபகரணமாகக் கொண்டது ; பாண்டித்ய விதிகளுக்குள் கட்டுப்படாது தீர்வில்லாத கேள்விகளை எதிர் கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60102112&edition_id=20010211&format=html )

குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள் – 1 ஜெயமோகன்- குற்றாலத்தில் கன்னட எழுத்தாளர்களுடன் நடந்த இலக்கிய அமர்வில் திலகவதி நூல்களை வெளியிட்டார்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60102113&edition_id=20010211&format=html )

கதைகள் – ஒரு காதலனின் டைரிக் குறிப்பு -லாவண்யா, அவள்- சா.கந்தசாமி, இவளோ-லா.ச. ராமாமிர்தம்
கவிதைகள்- காதல் – பசுபதி, ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது – சேவியர், விடிவெள்ளியோடு ஒரு விடியல் – திலகபாமா, நானோர் இந்தியக் குடிமகன்- எட்வின் பிரிட்டோ, கு.ஹ.ரகுநாத்தின் கன்னடக் கவிதைகள் -தமிழில் பாவண்ணன், எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ – வ.ஐ.ச.ஜெயபாலன், DAY-O (The Banana Boat Song) – Harry Belafonte.

அறிவியலும் தொழில் நுட்பமும்
உயிர் வழி அடையாளத் துறை – ஜோஸப் அடிக், கணினியில் ஆவணங்களை வடிவமைத்தல்- விஜயராகவன்.

பிப்ரவரி 19 இதழ்:

கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும்-

பிரான்ஸிஸ் போர்டு கோப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் – மொழிபெயர்ப்பு – யமுனா ராஜேந்திரன்- கியூப சமூகம் காலனி ஆதிக்கத்தால் 500 ஆண்டுகளுக்கு மேல் சுரண்டப் பட்டது. இன்று அங்கே கருத்துச் சுதந்திரம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்களது வளர்ச்சி மற்றும் நிலைப்பை வைத்துப் பார்க்கும் போது உடனடியான மாற்றம் இல்லையென்றாலும் காலப் போக்கில் மேம்பட்ட சமூகமாக அது உயரும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102191&edition_id=20010219&format=html )

ஆண்மையின் புதிய அளவு கோல்கள்- ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – தேஜஸ்வனி நிரஞ்சனா-4 மொழிபெயர்ப்பு – கோபால் ராஜாராம்

கன்னட ரசிகர்களின் வன்முறைக் குணத்தையும் மறுபக்கம் ராஜ் குமாரை ஒரு யோகி போலச் சித்தரிப்பதும் பொருந்தாமல் ஒரு கலவையான ஆண்மையுள்ள ஆளுமையாகவே ராஜ் குமார் உருவகப் படுத்தப் படுகிறார். ஒரு விதத்தில் இது நம்பிக்கை தருவதே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102192&edition_id=20010219&format=html )

ஏன் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கிறது அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது? – மார்வின் ஹாரிஸ்- ஹக்ஸ்லி தொடங்கி பலரும் ஆப்பிரிக்க இன மக்கள் ஒருக்காலும் ஐரோப்பியர்களை அல்லது அமெரிக்கர்களை மூளையைப் பயன்படுத்தும் துறையிலோ அல்லது தொழில் துறையிலோ ஈடுகட்ட முடியாது என்று ஆதாரமும் அடிப்படையும் இல்லாத ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட மாதிரிகளும் நம்பத் தகுந்தவை அல்ல. காலங்காலமாகக் காலனி ஆதிக்கத்தால் சுரண்டப் பட்டவர்கள் ஆப்பிரிக்கர்கள். கல்வியும் வளர்ச்சியும் பல நூற்றாண்டுகளுக்கு அங்கு வர இயலாத படி திட்டமிட்ட சதி நடந்தது. ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவை எடுத்துக் கொள்வோம். ஜப்பான் காலனி ஆதிக்கத்து ஆட்படவில்லை. இன்று வளர்ந்த நாடுகளை விஞ்சும் தொழில் நுட்பம் அங்கே உண்டு. இந்தோனேஷியா டட்ச் ஆதிக்கத்தால் பின் தங்கி இன்று ஜப்பானோடு ஒப்பிட முடியாததாக இருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102193&edition_id=20010219&format=html )

இந்த வாரம் இப்படி: மஞ்சுளா நவநீதன்
தமிழகத் தேர்தல் கூட்டணிகள் விசித்திரமாக உள்ளன. 2.பர்மா மற்றும் அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவு பேணுவது நல்லதே.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102194&edition_id=20010219&format=html )

ஜெயமோகனின் கடிதம் :மார்க்ஸிஸ்டுகள் திண்ணையில் கூறியுள்ள விஷயங்களுக்கு ஜெயமோகனின் எதிர்வினை

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102195&edition_id=20010219&format=html )

இலக்கியக் கட்டுரை: கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவுபடுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி- கிரிஷ் கர்னாடின் யயாதி நாடகத்தின் பின்னணியில் நாடகக் கலைக்குக் கன்னடத்தில் பின்னணி ஏதும் இல்லாத நிலையில் கர்நாடின் பங்களிப்பு பற்றிய பேட்டி

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60102191&edition_id=20010219&format=html )

கலைகள்- சமையல் – காரட், தேங்காய் மிக்ஸட் பர்பி, புளி அவல்

கதைகள்- சூரியனைத் தேடும் இலைகள்- மனுபாரதி, கல்கி- மாலன்

கவிதைகள்- சினிமா போஸ்டர் வடிவில் ஒரு கவிதை – அர்ஜென்டைனா இயக்குனர் பெர்ணான்டோ பெரி- தமிழில் யமுனா ராஜேந்திரன்

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்: தின கப்ஸா

அறிவியல் தொழில் நுட்பம் – இயற்கை மொழி கணினியியல் – காரென் ஜென்ஸேன்

பிப்ரவரி-26 2001 இதழ்:

அபிராமி முதல் கண்ணகி வரை- லாவண்யா- திருக்கடவூர், பூம்புகார், வைதீஸ்வரன் கோயில், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களைச் சுற்றி வந்த பயணக் கட்டுரை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102261&edition_id=20010226&format=html )

இரணியன் – திரைப்பட விமர்சனம் – யமுனா ராஜேந்திரன்- நிலப்பிரபுக்களை எதிர்த்துத் தனியாகப் போரிடும் இரணியன் அவர்களால் சுடப்பட்டு இறக்கும் போது தான் மக்கள் விழித்துக் கொள்கின்றனர். வெகு ஜன உக்திகள் கலந்திருந்தாலும் இது இடதுசாரிகள் கூலிகளுக்கும் ஏழைகளுக்கும் அவர்கள் வாழ்வு மேம்படத் தந்த பங்களிப்பு பற்றிய பதிவான படம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102262&edition_id=20010226&format=html )

காய் கவர்ந்தற்று- பாரதி ராமன்- இலக்கியவாதிகளைக் கிண்டலடித்து அவர்கள் வம்பிலும் வசையிலும் ஈடுபடக் கூடாது என்று அறிவுரை கூறும் கட்டுரை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102263&edition_id=20010226&format=html )

இந்த வாரம் இப்படி: மஞ்சுளா நவநீதன்

1.பாரதி திரைப்படம் நன்றாக இருக்கிறது. 2.சோ ஜெயலலிதாவுக்காக வரிந்து கட்டி வேலை செய்கிறார்.3.புத்ததேவ் பட்டாசார்யா தனியாருக்கு ஆதரவளிப்பது தவறு. 4. நான்கு நேறியில் தொழிற்பூங்கா வருவது நல்லது. 5. கணிப்பொறியாளர்கள் நிறையவே தேவை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20102264&edition_id=20010226&format=html )

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்- உரத்த சிந்தனைகள்- உலகச் சிந்தனையாளர்களின் உதிரியான கருத்துக்கள். & யாரோ சொன்ன புன்னகை மொழிகள்.

கதைகள்: பிரும்மம்- பிரபஞ்சன்,..ப்பா-தி.ஜானகிராமன், கறுப்பு அணில் – அ.முத்துலிங்கம், சிங்கமும் விறகுவெட்டியின் மகளும்- வ.ஐ.ச. ஜெயபாலன்

கவிதைகள்: கவரிங் புன்னகைகள்- திலகபாமா, இயலாமை- சேவியர், சிதம்பர ரகசியம்-ஜெயானந்தன், மரணம் -கோகுல கிருஷ்ணன், ஊர்ந்து போகும் வாழ்க்கை- சிந்தாமணி

அறிவியல் தொழில் நுட்பம்- மிண்வெளித்துகளியல்- ஜான் ஜோனோ பல்லஸ்

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *