ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

This entry is part 17 of 26 in the series 8 டிசம்பர் 2013

19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

 

Jackie-Chan-jackie-chan-5468506-553-800

19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

Jackie-Chan-jackie-chan-5468506-553-800ஆஸ்திரேலியா திரும்பிய மகனைக் கண்டதும் தாய் பெரிதும் மகிழ்ந்தார். வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். பரிசாகத் தந்த கடிகாரத்தைக் கண்டதும், ஆனந்தக் கண்ணீர் வடித்து மகனின்திறமையைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை பரிசைப் பார்த்து விட்டு அத்தனை மகிழ்ச்சி கொள்ளவில்லை. எப்படி இந்தக் குறைவான காலத்தில் இத்தனைப் பணம் சம்பாதித்திருப்பான் என்று ஐயம்கொண்டரோ என்னவோ.

“அப்பா.. என்னுடைய ஒப்பந்தம் மூன்று படங்களில் நடிக்க இருந்தது. அதை மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் முடித்ததால், எனக்கு சம்பளத்திற்கு அதிகமாக போனஸ{ம் கொடுத்தார்கள். பிறகுஹாங்காங்கில் அளவிற்கதிகமாக ஸ்டண்ட் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியதால் உங்களுடன் இருக்க வரலாம் என்று வந்தேன்” என்றான் அதைப் புரிந்து கொண்டு.

தனக்கு இத்தனைக் கோர்வையாக பொய் சொல்லக்கூட வருகிறதே என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.

“தீடீரென நீ ரொம்ப நல்ல மகனாக ஆகிவிட்டாயே..” என்று ஆச்சரியப்பட்டார் தந்தை.

அதைக் கேட்ட சானுக்கு என்னவோ போலிருந்தது. உடனே, “அப்பா.. உங்களுக்குக் கடிகாரம் வேண்டாம் என்றால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்றான்.

“இல்லை.. இல்லை.. ரொம்ப நல்லா இருக்கு.. இப்போ என்ன நேரங்கறதத் தெரியாத முட்டாள் இல்லை நான். ஞாபகம் வைச்சிக்கோ” என்று சூசமாகக் கூறிவிட்டு கடிகாரத்தின் அழகை ரசித்த வண்ணம்சென்றார்.

சென்ற முறை வந்திருந்த போது எப்படி இருந்ததோ, அதைப் போன்று தான் இப்போதும் இருந்தது. ஏதும் செய்வதற்கு இல்லை. முன்பு வந்த போது முதல் தடவை என்பதாலும் பெற்றோருடன் இருந்துகுடியுரிமை பெறுவதே முக்கிய வேலையாக இருந்ததாலும் வெளியே சென்று எந்த வேலையும் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இம்முறையும் ஆரம்பத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல், அறையிலேயே உட்பார்ந்து கொண்டு பொழுதைக் கழித்தான். சில சமயங்களில் தந்தையுடன் சமையலறைக்குச் சென்று அவர்சமைப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் சிறுவனாக இருக்கும் போது, தந்தை சமைக்கும் போது தொந்தரவு கொடுத்த வண்ணம் இருப்பான். ஆனால் இப்போதோ வெட்கி நின்றான்.

ஒரு சமயம் வெட்கி நிற்கும் மகனிடம் தந்தை “மகனே.. எனக்கு அறுபது வயது. இப்போதும் என்னால் சமைக்க முடிகிறது. உனக்கு இருபது வயது. உன்னால் ஆறுபது வயதில் சண்டை போடமுடியுமா?” என்ற கேள்வியைக் கேட்டார்.

அவரது கேள்வி தனக்கு இன்னும் நீண்ட வாழ்க்கை இருப்பதையும், ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் தான் இருப்பதையும் புரிய வைத்தது.

இப்போது சான் இருக்கும் சூழலே வேறு. கான்பராவிலேயே தங்க வேண்டிய நிலை. வெட்டியாக வேலை செய்யாமல் எத்தனை காலம் இருக்க முடியும்? வேலையும் செய்தாக வேண்டிய இல்லை.

ஆங்கிலம் பேசவும் கற்கவில்லை. முன்பு தங்கியிருந்த போது பேசிப் பழக இம்மியளவும் முயலவுமில்லை. வெளியே சென்றால் ஆங்கிலம் பேசுவது அவசியம். அதற்கு பயந்தே தான் எங்கும்செல்லாமல் அறையிலேயே அடைபட்டுக் கிடந்தான்.

அவன் சும்மா இருப்பது அவனுக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்த தாய், சானிடம் “சான்.. நீ ஏன் ஆங்கிலம் கற்க முயற்சி செய்யக் கூடாது?” என்றார் ஒரு நாள்.

“எங்கே போய் கற்பது?”

“ஆங்கில வகுப்புகள் நிறைய இடங்களில் நடக்குது. அதில ஒண்ணுல சேர்ந்துக்க..”

“வகுப்பா.. உட்கார்ந்து படிக்கணுமே..”

“அப்புறம் எப்படி கத்துக்கறதாம்..”

“அம்மா எனக்கு வகுப்பறைன்னாலே பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியதா..” என்று கேட்டான் சான்.

“நீ இப்படியே வெளியே போக பயந்துகிட்டே எத்தனை நாள் இருக்கப் போறே.. ஆங்கிலம் தெரிஞ்சா தான் நீ தைரியமா வெளி இடத்துக்கு போய் வரலாம். அதனால எப்படியாவது மனச மாத்திக்கிட்டுஆங்கிலத்த கத்துக்க முயற்சி செய்” என்று வற்புறுத்தினார்.

இறுதியில் தாயின் அறிவுரையின் படி ஆங்கில வகுப்பில் சேர்ந்தான்.

வகுப்பு ஒரு அரசாங்கப் பள்ளியில் நடந்தது. அந்த வகுப்பில் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த அரேபியர்களும் சீனர்களும் இந்தியர்களும் நிறைந்திருந்தனர்.

தன்னுடைய சீனப் பெயரை உச்சரிக்க ஆசிரியர் சிரமப்பட்டதைக் கண்ட சான், தன் பெயரை பால் என்ற ஆங்கிலப் பெயராக வைத்துக் கொண்டான்.

ஆங்கிலத்தைக் கற்க பெரிதும் முயன்றான். கடினமாக உழைத்தான். எவ்வளவு தான் முயன்ற போதும் ஏ, பி, சியை கூடத் தாண்ட முடியவில்லை. ஆசிரியரைக் கவனிப்பது தலைவலியாக இருந்தது. தொடர்ந்து ஓடியாடி இருந்துவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு கவனிப்பது என்பது சித்ரவதையாக இருந்தது. நேரத்தை வீணடிப்பதாகத் தோன்றியது.

இதற்கு மேலும் பொறுக்க முடியாத சான் தன் தந்தையிடம், “இனிமேல் நான் வகுப்பிற்குப் போக மாட்டேன். எனக்கு பள்ளி ஏற்ற இடமில்லை. நான் வேறு ஏதாவது செய்யறேன்” என்றான்.

படிப்பாளியாகத் தன் மகன் மாற வேண்டும் என்று வெகு காலமாகக் கனவு கண்டு கொண்டிருந்த தந்தைக்கு இந்த வார்த்தைகள் வருத்தத்தைத் தந்தது. கனவு காற்றோடு கரைந்து போனது.

மகனுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே? பல வழிகளை யோசித்தார். வேலைக்கு சேர்த்து விடலாம். ஆனால் எந்த வேலைக்கு அனுப்புவது? எந்த வேலையென்றாலும் ஆங்கிலம் பேசியாகவேண்டிய சூழ்நிலை. இறுதியில் கட்டட வேலையில் சேர்த்து விட முடிவு செய்தார்.

அடுத்த நாள் அவனை அவரது நண்பர் ஜாக்கைப் பற்றிக் கூறினார். “எனக்கு ஜாக் என்ற நண்பர் இருக்காரு. கட்டடத் தொழிலாளியாக இருக்காரு. அவர் வேலை செய்யும் இடத்துலயே உனக்கும் வேலைகிடைக்கும். அங்கே யாரிடமும் நீ பேச வேண்டியதில்லை. உனக்கு வேண்டிய மட்டும் ஓடியாடலாம்” என்றார்.

சான் அதற்கு ஒத்துக் கொண்டான். சூட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் செங்கலை நகர்த்துவது பெரிய விஷயமில்லை. வேறு கதியில்லை. வகுப்புக்குப் போவதைக் காட்டிலும் இது எவ்வளவோதேவலை என்று எண்ணினான்.

அடுத்த நாள் வேலைக்குச் அழைத்துச் செல்ல ஜாக் வந்தார்.

சானைக் கண்டதுமே “ரொம்ப பலசாலியா இருப்பே போலிருக்கே.. உன்னால நிறைய வேலை செய்ய முடியும்” என்றார்.

கேட்டதும், தலையை மட்டும் ஆட்டி வைத்தான். அவர் ஆங்கிலத்திலேயே பேசியதால், அவர் என்ன பேசினார் என்பது சானுக்குப் புரியவேயில்லை. அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றனர்.அங்கு பல பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

“ஓய் ஜாக்” என்று ஒருவர் அவரை கத்தி அழைத்து, “யார் இந்தச் சீன வாலிபன்” என்று கேட்டார்.

ஜாக் சானைப் பார்த்தார். கேட்ட நண்பரைப் பார்த்தார். கொங் சாங் என்ற சீனப் பெயரை அவர்களால் எளிதில் சொல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த அவர், “அது வந்து.. அவன் பெயரும் ஜாக்..”என்றார்.

“நல்ல பெயர் போங்கள். ஆனால் எப்படி உங்களை அடையாளம் சொல்வது” என்றார் நண்பர் மேலும்.

அனைவரும் நகைத்தனர்.

“அதுவா பிரமாதம்.. நான் பெரிய ஜாக்.. அவன் சின்ன ஜாக் போதுமா..” என்றார்.

பிறகு, கொஞ்ச நாட்களிலேயே, சின்ன ஜாக் என்பது ஜாக்கி என்றானது. அப்போதிருந்து இன்று வரை சான் ஜாக்கியானான்.

நாள் முழுக்க வேலை. கட்டட வேலையில் கொஞ்ச நேரமும் ஓய்வெடுக்க முடியவில்லை. முதுகு வலி ஏற்பட்ட போதும் அவனது தோல்விகளைப் பற்றி எண்ண நேரம் இருக்கவில்லை. வேலைநேரத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆனால் இரவு ஆனதும், தோல்விகள் மட்டுமே மனத்தில் தோன்றி பாடாய் படுத்தின. ஹாங்காங்கை விட்டு வந்தது, ஓ சாங்கின் கருணை, தான் செய்து தந்தசத்தியம் எல்லாம் வந்து போயின. கடினமாக உழைத்தாலும், தூக்கம் மட்டும் வராது. படுத்துக் கொண்டு எண்ணவோட்டத்தில் இருப்பதை விடவும் ஏதாவது வேலை செய்வது நல்லது என்றுதோன்றியது.

அதனால் இரவு நேரத்தில் ஒரு சீன உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தான். தந்தையைப் போன்று நன்றாக சமைக்கத் தெரியாவிட்டாலும், காய்கறிகளை வெட்டிக் கொடுக்கும் வேலையைச்செய்தான். நல்ல கட்டு மஸ்தான உடலைக் கொண்டிருந்த காரணத்தால் சில சமயங்களில் பாதுகாப்பு வேலையைச் செய்தான்.

நாள் முழுவதும் கட்டட வேலை. பிறகு இரவில் உணவு விடுதியில் வேலை. தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்ததால் தூங்கும் நேரம் மிகவும் குறைந்தது. எதைப் பற்றியும் யோசிக்காதுவேலை ஒன்றே குறியென இருந்தான். தோல்விகளைப் பற்றி எண்ண நேரமே கிடைக்கவில்லை.

தந்தைக்கு மகன் எந்தப் பிரச்சினையுமின்றி வாழ்வது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாய்க்கு மட்டும் மகனிடம் ஏதோ பாதிப்பு இருப்பதை உணர முடிந்தது.

மகனின் கடின உழைப்பைக் கண்டு பொறுக்க முடியாமல், சில மாத பின், தாய் ஒரு நாள் அவனிடம் பேசிப் பார்க்க முடிவு செய்தார். அன்று இரவு வேலையை முடித்துக் கொண்டு சான் வீடுதிரும்பியிருந்தான்.

“ஜாக்கி.. நீ இங்கே இருப்புது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா நீ இங்கே சந்தோஷமா இருக்கியா..” என்று கேட்டார்.

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, தலையை ஓய்வாக சாய்த்துக் கொண்டிருந்த சான், “நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்..” என்று தாயைத் திருப்திப்படுத்த சொன்னான்.

தாய் அவன் பக்கம் வந்து தோளில் கையிட்டு, “நீ இதச் சொல்லணுமேன்னு சொல்றே.. மனசாரச் சொல்லலைன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் உன் தாய். உன்னை விடவும் உன்னைப் பற்றிஎனக்கு நல்லாத் தெரியும். நீ பொய் சொன்னாலும், உன் தந்தை அதைக் கண்டு கொள்ள மாட்டார். நான் அப்படி இல்லை. நீ உன் வாழ்க்கையில் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என்பது மட்டும்நிச்சயம் எனக்குப் புரியுது” என்றார்.

தாயின் இந்த வார்த்தை சானின் இயலாமையை வெளிக்காட்டியதன் காரணமாய் மடை திறந்த வெள்ளமென கட்டுக்குள் வைத்திருந்த உணர்வுகள் அத்தனையும் கொட்டிவிடத் துடித்தான்.

“ஆமா.. நான் என்ன செய்யறதுன்னு சொல்லுங்க..” என்று கத்தினான். “நானோ எதுக்கும் உதவாத தொழில கத்துயிருக்கேன்.. எனக்கு வேறே வேலை எதுமே தெரியலையே..” என்றான் ஆதங்கத்துடன்.

தாய் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், “நீ நினக்கிறது மாதிரி இல்லை. பெற்றோரிடம் அன்பும் நம்பிக்கையும் இருக்கு. நல்ல ஆரோக்கியம், இளமை உன்கிட்டே இருக்கு. நீ குதிரை வருடத்தில்பிறந்தவன். நீ பெரியதாகச் சாதிக்கப் பிறந்தவன். நீ இருக்க வேண்டிய இடம் இதுவல்ல” என்றார்.

தாய் உள்ளம் உள்ளம் மகன் தங்களிடம் இருக்க வேண்டும் என்று எண்ணியது. பிரிய விருப்பம் இல்லாத போதும், மகனின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமே என்று அவனைஆஸ்திரேலியாவிருந்து துரத்த எண்ணியது.

தங்களுடைய மகிழ்ச்சியை விடவும் மகனின் மகிழ்ச்சி முக்கியமாகப் பட்டது.

தாயுடன் பேசிய பின், அன்றே ஹாங்காங் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தான். தாயின் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பவில்லை.

ஆனால் என்ன செய்வது? புரூஸ் லீயின் மரணத்திற்குப் பிறகு, தன்னுடன் பணிபுரிந்த அனைத்து சகோதரர்களும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வேலையே கிடைத்தாலும், மறுபடியும்ஸ்டண்ட் தொழில் செய்வது பலன் தருமா?

அந்தச் சமயத்தில் தான் ஒரு முக்கியதான மனிதர் சானின் வாழ்க்கையில் நுழைந்தார்.

அவர் யார்?

Series Navigation4 கேங்ஸ்டர்ஸ்திண்ணையின் இலக்கியத்தடம் -12
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *