திண்ணையின் இலக்கியத் தடம் – 17

This entry is part 13 of 29 in the series 12 ஜனவரி 2014

மே 5, 2002 இதழ்:

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்- ஜெயமோகன்
தமிழிசை மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுத் தேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தமிழிசைக்கு என ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தவர். அவர் மறக்கப் பட்டதும் அவரது பங்களிப்பு மறைக்கப் பட்டதும் வருத்தத்துக்குரியவை.( www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205053&edition_id=20020505&format=html )

பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து- (obession)- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழில்- பி.கே.சிவகுமார்- புறமனம் கவலைகளாலும் அமைதியின்மையாலும் பாதிக்கப் படும் போது அகமனம் வெளிப்படாது ஏற்படும் முரண்பாடு துன்பத்தை விளைவிக்கும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205054&edition_id=20020505&format=html )

அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும் போது- ரிச்சர்ட் டாக்கின்ஸ்- “கடவுளே எல்லாவற்றையும் உருவாக்கினார்” என்பவர்களுக்குப் பெரிய அடி இதற்கு எதிரான் போப்பின் நிலைப்பாடு. அவர் இரட்டை வேடம் இட்டாலும் இது நல்லதே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205055&edition_id=20020505&format=html )

வீரமும் விடியலும்- (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா?- கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி) -பாவண்ணன்- புலையர்களை ஒன்று கூட்டி தலித்துகள் கல்வி கற்க, அவர்களுக்குப் பள்ளியில் அனுமதி கிடைக்க, ஆசிரியர் கிடைக்க என பல நிலைகளிலும் போராடியவர் அய்யன் காளி. இவரது வரலாறு வாய்வழிக் கதையாயிருந்தது இப்போது பதிப்பாகி உள்ளது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205056&edition_id=20020505&format=html )

வம்பு பேச்சும் கவலையும்- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழில்- பி.கே.சிவகுமார்- குறுகுறுப்பான ஆர்வம் (curiosity) எந்தப் புரிதலுக்கும் வழி வகுக்காது. மன அமைதியை இழக்கச் செய்யும். புரிதலே உண்மையான அறிவுக்கு வழி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205123&edition_id=20020512&format=html )

தினமணி நிருபர் தற்கொலையும் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்- வெளி ரங்கராஜன்- ஊடகங்கள் ஊழியர்களை மதிப்பதுமில்லை. உரிய ஊதியம் தருவதுமில்லை. இவர்களது மதிப்பீடுகள் மிக மலினமானவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205125&edition_id=20020512&format=html )

ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்- சு.வெங்கடேசன் – வைதீக வெறியே ஜெயமோகன் எழுத்துகளின் நிரவியிருக்கிறது- வெங்கடேசனின் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் நூல்களின் விமர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205126&edition_id=20020512&format=html )

திசைகளும் பயணங்களும்- பாவண்ணன்- (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா- 2- என்னைக் கேட்டால் என்.எஸ்.ஜெகந்நாதன்)- சங்க கால கவிதைகளின் மீதுள்ள ரசனையில் தொடங்கி கேம்ஸ் தியரி வரை பல துறைகள் பற்றிய ஜெகந்நாதனின் கட்டுரைத் தொகுதி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60205121&edition_id=20020512&format=html)

மே 18,2002 இதழ்:

புத்தர்? – போப் ஜான் பால்- புத்தர் பேசும் நிர்வாணம் நாத்திகத்தை அடிப்படையாகக் கொண்டது. கிறித்துவம் பேசும் விடுதலை கிறித்துவை மையச் சரடாகக் கொண்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205182&edition_id=20020518&format=html )

தமிழில் சிறுபான்மை இலக்கியம்- ஜெயமோகன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205183&edition_id=20020518&format=html )

எண்ணமும் அன்பும்-ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழில்- பி.கே.சிவகுமார்- அன்பு என்பது எண்ணம் இருக்கிற ஆனால் இயங்குகிற நிலையில் இல்லாத நிலையாகும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205184&edition_id=20020518&format=html )

சோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்: மைக்கேல் பர்லே
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205187&edition_id=20020518&format=html )

துக்கத்தில் பிறந்த சிருஷ்டி- பாவண்ணன்- (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா- 3- புஷ்கினின் அஞ்சல் நிலைய அதிகாரி- புஷ்கின் காலத்தில் அஞ்சல் அதிகாரிகள் வழிப்போக்கருக்குத் தங்குமிடம் தந்து வழிகாட்டியாகவும் இருந்தார்கள். ஒரு வழிப்போக்கன் அஞ்சல் அதிகாரியின் மகளை அவரிடம் சொல்லாமல் அழைத்துச் சென்று மணம் முடித்துக் கொள்கிறான். அவர் துக்கத்திலேயே உயிர் விடுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60205181&edition_id=20020518&format=html )

மே 25,2002 இதழ்:

தனித்திருத்தலும் தனிமைப் படுதலும்:-ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழில்- பி.கே.சிவகுமார்- தனித்திருக்கிற தன்மை பெற்றவரே காரணமற்ற, நியாயப் படுத்துதல்கள் இல்லாத, அளக்க இயலாத ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும், உறவாடவும் முடியும். தனித்திருப்பவருக்கு வாக்கை ஆதியுமந்தமுமில்லாத முடிவற்றது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205251&edition_id=20020525&format=html )
பங்களாதேஷில் 1971ல் நிகழ்ந்த இனப் படுகொலைகள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205254&edition_id=20020525&format=html )

மு.தளைய சிங்கம் விமர்சனக் கூட்டம் பதிவுகள்- ஜெயமோகன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20205256&edition_id=20020525&format=html )

காதலும் கனிவும் – பாவண்ணன் (எனக்குப் பிடித்த கதைகள் -12- அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக் காதல்’- ஒரு தலைக்காதல் பற்றிய ரஷியக் கதை. ஒரு தந்தி அலுவலக குமாஸ்தா ஒரு பிரபுவின் மனைவியை ஒரு தலைப் பட்சமாகக் காதலிக்கிறான். பல வாழ்த்துக்கள் பரிசுகள் அனுப்பி மாட்டிக் கொண்டு எச்சரிக்கப் பட்ட பின் தற்கொலை செய்து கொள்கிறான். பிதோவனின் சொனடா என்னும் பாடலை அவள் பாட வேண்டும் என்பதே அவனது இறுதி விருப்பம். அவள் அதை அவனது சவத்தின் அருகில் ஒரு பியானோ இசைக்கலைஞன் மூலம் இசைக்கச் செய்கிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60205251&edition_id=20020525&format=html )

ஜூன் 9,2002- மு.தளயசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும்- ஜெயமோகன்- 1 (தளயசிங்கத்தைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படைகள் )- அசலான சிந்தனையாளர்கள் அனேகமாகத் தமிழில் இல்லை. இரு விதிவிலக்குகள் ஆனந்தக் குமாரசாமியும் தளயசிங்கமும் மட்டுமே.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=202061010&edition_id=20020610&format=html )

மு.தளயசிங்கத்தின் இலக்கியப் பார்வை-எம்.வேதசகாய குமார்- சிந்தனைத் தளத்தில் பாரதிக்கு அடுத்ததாகக் காலவரிசையில் தளயசிங்கம் வருகிறார். ஆனால் சுந்தர ராமசாமி தவிர யாரும் அவருக்கு உரிய இடத்தைக் கண்டு அவரை அங்கீகரிக்கவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206103&edition_id=20020610&format=html )

கல்வியா வீரமா?- ராணுவச் செலவும் இந்திய அரசாங்கமும்- மஞ்சுளா நவநீதன்- கல்விச் செலவையும் ராணுவச் செலவையும் ஒப்பிட்டு ஹிந்து பத்திரிக்கை எழுதக் கூடாது. பாதுகாப்பில் இந்தியா பின் தங்கினால் சீன பாகிஸ்தானக் கைகள் ஓங்கும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206106&edition_id=20020610&format=html )

பார்வை- கிராமிய அழகியல் மனநிலை- வெளி ரங்கராஜன்- விருதுநகர் மாவட்டம் கொங்கன் குளம் கிராமத்தில் நடந்த கூத்தும் சிறுவர்கள் கதை சொல்லும் நிகழ்ச்சியும் மண்ணின் மணம் ததும்ப மனதில் பதிந்தன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206102&edition_id=20020610&format=html )

பணக்காரரும் ஏழையும்- ஜே.கிருஷ்ண மூர்த்தி – தமிழாக்கம்- பி.கே. சிவகுமார்- எந்த அளவு புறவயமான பகட்டும் ஆடம்பரமும் தெரிகிறதோ அந்த அளவுக்கு அகவயமான ஏழ்மை அதிகமாக இருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206103&edition_id=20020610&format=html )

அரசியல் அடையாள நெருக்கடிகள்- பாலஸ்தீனில் தொடங்கி- பீர் முகம்மது- இனவாதத்தால் பாதிக்கப் பட்ட இனம் மற்றொரு இனத்தை அதை விட மோசமாகப் பழிவாங்குகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206104&edition_id=20020610&format=html )

காற்றுக்கென்ன வேலி முதல் கன்னத்தில் முத்தமிட்டால் வரை- யமுனா ராஜேந்திரன்- காற்றுக்கென்ன வேலி, நந்தா, அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், ஆளவந்தான் ஆகிய படங்கள் பற்றிய ஆழமான விமர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206102&edition_id=20020610&format=html )

வாழ்க்கையும் வடிகாலும்- பாவண்ணன்- (எனக்குப் பிடித்த கதை 14- ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள்’)- ஒரு கைதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் போகும் போது தப்பி, பிறகு பிடிபடுகிறான். அழைத்துச் சென்ற மூன்று போலீஸ்காரர்கள் அவனை அடித்தும் மின்சாரம் செலுத்தியும் கொன்று விடுகிறார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206104&edition_id=20020610&format=html )

ஜூன் 17 2002 இதழ்:

சடங்குகளும் மாற்றமும்- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- சடங்குகள் எல்லாம் வீணான ஒப்பித்தல் மற்றும் செக்குமாட்டுத்தன்மையைக் கொண்டவை. சுய அறிவை இவை புறந்தள்ளுபவை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206171&edition_id=20020617&format=html )

அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பது தவறு- இளமுருகு- கலாமை ஜனாதியாக்கும் முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது. விஞ்ஞானி தான் வேண்டுமென்றால் எம்.எஸ்.சுவாமிநாதன் இல்லையா?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206176&edition_id=20020617&format=html )

மு.தளயசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும்-பகுதி: இரண்டு-ஜெயமோகன்
– மு.தளயசிங்கம் என்ன சொல்கிறார்?- பூரண இலக்கியம் என்னும் கருத்தைப் பற்றி தளயசிங்கம் விரிவாகப் பேசுகிறார். இனிமேல் இலக்கியவாதி பொழுதுபோக்கு எழுத்தாளனாகவோ , வாழ்க்கையின் ஏதேனும் ஒரு தளத்தைச் சேர்ந்த உண்மையைச் சொல்பவனாகவோ இருக்க முடியாது. இனிவரும் இலக்கியவாதி, அறிவியல், அழகியல், அரசியல் ஆகிய அனைத்திலும் ஊடுருவியுள்ள பூரணமான ஞானத்தை உணர்ந்தவனாக அதைத் தன் எழுத்தினூடே அனுபவமாக்குபவனாக இருக்க வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206177&edition_id=20020617&format=html )

எஸ்.ராமகிருஷ்ணனின் “வெய்யிலைக் கொண்டு வாருங்கள்” – ஒரு மதிப்பீடு-எச்.பீர் முகம்மது- எஸ்.ராவின் புதிய கதை எழுத்து நுட்பம் லத்தீன் அமெரிக்க சாயலைக் கொண்டது. குறிப்பாக லூயி போர்ஹே, ஆக்டோவியபாஸ் மற்றும் ரோஸா போன்றவர்களின் பாதிப்பு நிறையவே இருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206171&edition_id=20020617&format=html )

விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம்- எஸ்ஸார்ஸி- (ஏழு லட்சம் வரிகள்- தொகுதியை முன் வைத்து ஒரு குறிப்பு)- ஆழ்ந்த இந்தியத் தத்துவ ஞானச் சுரங்கமாய் விளங்கும் தொன்ம விஷயங்களை செரித்துக் கொண்டு சமகாலத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் சில தருணங்களை மறு ஆக்கம் செய்வது இந்தத் தொகுதியின் முக்கியத் தன்மையாகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206173&edition_id=20020617&format=html )

மரணம் என்னும் நெருப்பு- எனக்குப் பிடித்த கதைகள்- 15 – தாஸ்தாவெஸ்கியின் “நாணயமான திருடன்- பாவண்ணன்
ஒரு நல்ல மனிதர். அதிகம் வசதியானவரில்லை . அவர் எமில் என்னும் ஏழ்மைப் பட்டவனை ஒரு உணவகத்தில் சந்திக்கிறார். ஒரு நாள் உணவு வாங்கித் தருகிறார். அவன் அவர் வீட்டைத் தெரிந்து கொண்டு அங்கே வருகிறான். அவருடன் அடிக்கடி தங்குகிறான். அவர் ஊரை மாற்றினாலும் அவரைத் தேடி வருகிறான். அவன் உணவுக்கும் சேர்த்து அவர் சம்பாதிக்க வேண்டி வருகிறது. ஒரு நாள் அவரது மேலங்கி (கோட்) அதை அவன் திருடி விடுகிறான். தெரியாதது போல நடிக்கிறான். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் அவனை அன்பாகவே நடத்துகிறார். நாளடைவில் அவனிடம் திடீர் மாற்றம். வெளியில் அடிக்கடி தங்குகிறான். வேலைக்கும் போகிறான். ஒரு நாள் அவரைப் பார்க்க வரும் அவன் உடல் நிலை மோசமாகிறது. மருத்துவம் பார்த்தும் பயனில்லை. சாகும் முன் அவரது கோட்டைத் திருடியது தானேதான் என்று கூறி மனம் வருந்துகிறான். வேறு ஏதோ சொல்ல வருகிறான் அதற்குள் அவன் உயிர் பிரிந்து விடுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206172&edition_id=20020617&format=html )

ஜூன் 23,2002 இதழ்:
இன்று நடிகர் சங்கக் கட்டிட நிதி- நாளை வருமான வரி பாக்கி- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சியை மலேசிய ரசிகர் புறக்கணிக்க- பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206232&edition_id=20020623&format=html )

தனிமைப் படுத்திக் கொண்டால் தேங்கித்தான் போவீர்கள்- மௌலானா வாஹீதுதின் கான் நேர்காணல் :யோகீந்தர் சிகந்த்- சுபியிசம் அல்லது இஸ்லாமிய துறவியம் மைய நீரோட்டமாக, முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து வந்திருக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206234&edition_id=20020623&format=html )

மு.தளயசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும்- பகுதி- மூன்று- தளயசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன?- ஜெயமோகன்- எல்லா அறிதல் முறைகளும் மையமான மெய்யறிவின் அடிப்படையில் தொகுக்கப் படும். விளைவாக அறிவியலின் யுகம் மெய்யியலின் யுகமாக வளர்ச்சி பெறும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206235&edition_id=20020623&format=html )

அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆவது சிறப்பானது- சின்னக் கருப்பன்-
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206237&edition_id=20020623&format=html )

மதிப்புரை- மகாராஜாவின் ரயில் வண்டி- அ.முத்துலிங்கம்- நுரவ் மார்க்கீவ்- சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும், கை கோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளி ஆக்குகின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206231&edition_id=20020623&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-16-பாவண்ணன்- அளக்க முடியாத கடல்- மாக்ஸின் கோர்க்கி- வறுமையின் கோரப் பிடியையும் மறுபக்கம் ஒரு சிறுவன் தன் குடும்பத்துக்காகத் தன் இன்னுயிரை விட்டுவிடும் தியாகம் பற்றிய கதை. மிகவும் வறிய ஒரு குடும்பம். ஏற்கனவே ஏதோ ஒரு குற்றத்துக்காகச் சிறை சென்ற கணவன் திரும்பி வந்தும் குடும்பத்துக்கு எந்த வித உதவியும் இல்லை. விரக்தியில் ஒரு நாள் “நானோ அல்லது உங்களில் யாரோ மரணமடைந்தால் தேவலாம்” என்று சொல்லி விடுகிறாள். சிறுவன் தன் இன்னுயிரை ஒரு குதிரையின் முன் விழுந்து விட்டு விடுகிறான். அப்படி குதிரையால் இறந்தால் அந்தக் குடும்பத்துக்கு சிறு தொகை இழப்பீடாகக் கிடைக்கும் . அவனது கல்லறைக்கு நான்கு ஆண்டுகள் கழித்து வரும் தாய் இதை ஒரு இளைஞனிடம் கூறிக் கண்ணீர் விடுகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206233&edition_id=20020623&format=html )

ஜூன் 29,2002 இதழ்:
ஊட்டியில் தளயசிங்கத்துக்கு நடந்த தொழுகை- R.P.ராஜநாயகம்- தளயசிங்கம் பற்றிய அமர்வில் தம் கருத்துக்கள் முழுமையாக விவாதிக்கப் பட வில்லை என்றும் தாம் பேச வேண்டியவற்றைப் பேச வாய்ப்பில்லாமற் போயிற்று என்றும் ராஜநாயகம் பதிவு செய்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206295&edition_id=20020629&format=html )

கௌரவம்- ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- பேராசை கொள்ளாமல் இருப்பதும், தரும சிந்தனை அற்று இருப்பதும் நெருங்கிய தொடர்புள்ளது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20206296&edition_id=20020629&format=html )

பொறுப்பின்மையும் போதையும்- எனக்குப் பிடித்த கதைகள்- 17-பிரேம்சந்தின் ‘தோம்புத் துணி’- தந்தை மகன் இருவருமே குடிகாரர்கள். அனேகமாக வேலைக்குப் போகமாட்டார்கள். எப்போதாவது போனால் அதைக் குடித்து வீணடிப்பார்கள். எதாவது ஒரு வயலில் இருந்து உருளைக் கிழங்கைத் திருடி வேக வைத்து உண்பார்கள். குடும்பத் தலைவி இவர்களுக்காக உழைத்தே உயிர் நீத்தாள். மகனை ஒரு பெண் மணந்து அவள் பிரசவ வேதனையில் போராடிக் கொண்டிருக்கும் போது இருவரும் குடிசைக்கு வெளியே வேகவைத்த உருளைக் கிழங்கைத் தின்று கொண்டிருக்கிறார்கள். அவளை விசாரிப்பதற்காக எழுந்தால் மற்றவன் அந்த உருளையைத் தின்பானோ என்று பயம். அவள் இறந்து விடுகிறாள். அவளது கோடித் துணிக்கு ஊரே சேர்ந்து பணம் தருகிறது.அதையும் அவர்கள் குடிக்கச் செலவு செய்து விடுகிறார்கள்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60206294&edition_id=20020629&format=html )

 

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *