வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 12 of 29 in the series 12 ஜனவரி 2014

  (Children of Adam)

சுயத்துவ இயக்கம் எனக்கு ..!

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

        

 

சுயத்துவ இயக்கவாளி நான்

இயற்கை சுபாவம் அது !

இன்ப நாட்கள்,

புலர்ந்து மேலேறும் பரிதி,

இனிமை யான என் நண்பர்கள்,

மலைக் குன்று அடிவாரத்தில்

மலர்ந்து விரிந்த வெண்மைப் பூக்கள் ,

இலையுதிர் காலத்து

பன்னிறப் பசுமை இலைகள்,

விலங்கினம், பறவை இனங்கள்,

வெட்டாத ஆப்பிள் பழங்கள்,

என்னைப் போன்றவர் எழுதும்

மெய்க் கவிதை ஓவியங்கள்,

காதல் நினைவுகள்,

காதல் கனியின் இனிய சாறு,

காதல் உறவின் வாசனை,

காதல் தியாகங்கள்,

காதல் மேல் ஏறுபவர்கள்,

காதலியின் கைகள், வாய் இதழ்கள்,

மோக முலைகள்,

ஒடுங்கிப் பிணைந்த இடுப்பு,

காதற் கற்புலகம்,

காதலில் பூத்த வாழ்க்கை,

காதலிக்கும் என்னுடல்,

நான் நேசிக்கும் பெண்ணுடல்,

மானிடர் தம்முடல்,

ஞாலத்தின் பூத உடல்,

தென்மேற்குத் திக்கி லிருந்து

முன்பகலில் அடிக்கும்

மென்காற்று,

பூ மடுவில் முணுமுணுக்கும்

கொடுந் தேனீ,

 

 

இரவில் நெருங்கிப் படுத்து

இடுப்பைச் சுற்றிக்

கரம் பற்றி உறங்கிடும்

இரு தம்பதிகள்,

சிவக்கும், முகம் சிவக்கும்

வாலிபன்,

நாணிச் சிவக்கும் நங்கையர்,

நள்ளிரவில்

துள்ளி எழும் வாலிபன்

கட்டுப் படுத்தும்

ஆண்குறி !

தாயின் பெருங் கற்பு,

தந்தையின் பெருங் கற்பு,

இனப்பெருக் கத்துக்கு

எடுத்த என் உறுதி மொழி,

புதிய ஆண், பெண்

உதிப்பு,

என் ஆயுளுக்குப் பின்பு

என்னிடத்தை நிரப்ப

ஆண்மகன் எண்ணிக்கை மிகுவது

எனக்கிச்சை தான்.

இயற்கை வினைகள் நேரும்

தருணத்தில்

எல்லாம் சுயமாய் நிகழ்ந்தன

எனக்கு !

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [ January 9, 2012]

Series Navigationமலரினும் மெல்லியது!திண்ணையின் இலக்கியத் தடம் – 17
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *