வால்ட் விட்மன் வசனக் கவிதை – 67 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

 

 (Children of Adam)

(Scented Herbage of My Breast)

மெல்லிய இலைகள்

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

[முன்வாரத் தொடர்ச்சி]

 

 

வாழ்வுக் காக நானிங்கு
மந்திரம்
ஓத வில்லை !
மரணத்துக் காக
ஓத வேண்டும் நான் !
எத்துணை மௌனமாக,
எத்துணை அச்சமுடன்,
மேலாகச்
சூழ்நிலை உருவாகிறது
காதலருக்கு !

பிறப்போ, இறப்போ

பிறகு வருவதற்குக்  

கவலைப் படவில்லை !

எதற்கும்

என் ஆத்மா பெரிதாய்

இச்சைப் படுவ தில்லை .

ஆயினும்

காதலர் உன்னத ஆத்மா

சாதலை வரவேற்கும் என்பதில்

எனக்குறுதிப் பாடில்லை !

 

அந்தோ மரணமே !

உந்தன் வாசகம் போலவே

இந்த இலைகளும்

துல்லிய மாய் எதிரொலிக்கும் !

இனிய இலைகளே !

உயரமாய் ஓங்கி வளர்வீர் !

அப்போதுதான்  

உன்னை நான் காண இயலும் !

என் நெஞ்சின் மீது

முளைப்பீர் !

ஒளிந்துள்ள இதயத்தை விட்டு

வெளியே வருக !

வெட்கி அடங்கி வாழாதீர்

என் நெஞ்சில்

விரிந்த இலைகளே !

குரல் கொடுப்பாய்

மரணமே !

மதிப்பவன் நான் உன்னை !

அர்ப்பணம் செய்

பிறர்க்கு

உன்னை நீயே !

சொந்தம் நீ எனக்கு !

மற்றவை 

எல்லாம் நீடிக்கா விடினும்

இலைகளே !

நெடுங் காலமாய்

நீடிப்பீர் நீவீர் !

 

 

 ++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [March 21, 2014]

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *