அன்றொருநாள்…இதே நிலவில்…..

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 29 in the series 25 மே 2014

 

(சரோஜ்நீடின்பன்)

 

முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள்.   இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம்.  ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி  வெளிநாட்டில்

வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது.  சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. இதைப்  படித்துவிட்டுத்தன்னைப்பற்றிஎழுதியதுஎன்றுயாரும்என்னிடம்சண்டைக்குவரவேண்டாம்).

 

ஐம்பதுவருடங்களுக்கு முன் ஒரு பகுதியில்  மனிதர்கள் எப்படிவாழ்ந்தார்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றித்  தெரிந்து கொள்வதற்குப்பலமுறைகள்கையாளப்படுகின்றன. அந்தகாலக்கட்டத்தில்வெளியானபத்திரிக்கைகள், புத்தகங்கள், நடந்தநிகழ்ச்சிகளின்  தொகுப்புக்கள்,  ஆவணப்படங்கள்,புகைப்படங்கள், தலைவர்கள்பேசியபேச்சுக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்துக்  குறிப்பெடுத்துஅறியலாம். அந்தமுறையில் 2003 முதல் 2013 வரைவெளியானஆயிரத்திற்கும்அதிகமானதமிழ்த்திரைப்படப்பாடல்களில்ரேண்டம் முறையில் தேர்ந்தெடுத்த, புகழ் பெற்ற, பலராலும் விரும்பப்பட்ட பதினோரு பாடல்களின் மூலம் அந்த நாட்களில் வாழ்ந்த தமிழர் பண்பாடு  மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள செய்த முயற்சியே  இந்த ஆராய்ச்சியின் நோக்கம். அதென்ன பதினொரு பாடல்கள் கணக்கு? என்று கேட்காதீர்கள். அதெல்லாம் ரேண்டம் சாம்ப்ளிங் விஷயம்.  கட்டுரையின் சுருக்கத்தை(அப்ஸ்ட்ராக்ட்) கீழே காண்க.

 

“2000 ஆண்டுதுவக்ககாலத்தில்தமிழ்ப்பெண்கள்மிகவும்வீரம்மிக்கவர்களாகஇருந்திருக்கவேண்டும். ஆண்களுக்குசிறிதும்பயப்படாமல், சிலநேரங்களில்அவர்களுக்குசவால்விடும்படிகூடவாழ்ந்திருக்கிறார்கள்.  ஆண்களைராட்சஸனென்றும், கொடியசாத்தானென்றும்வர்ணித்திருக்கிறார்கள். துரோகம்செய்தாலும், சவுக்கடிகொடுத்தாலும்பரவாயில்லைமுத்தங்களைஅள்ளிவீசுஎன்றுஆண்களுடன்சரசமாடிஇருக்கிறார்கள். (2003ல்வெளியானகாக்க காக்க    என்றபடத்தில்வரும்தூதுவருமாஎன்றபாடலில்இருந்துகையாண்டது).  இதைஎழுதியவர்ஒருபெண்பாடலாசிரியர்என்பதுமிகவும்விசேஷத்திற்கு உரியது).

 

ஒருஆண்மகனைஅழகியஅசுராஎன்றுவிளிக்கும்அளவுக்குவீரம்படைத்தவர்களாகக்காண்கிறோம். பாம்பைப்பார்த்துஇந்தபெண்கள்பயந்ததேஇல்லை.  கனவிலும்கூடபாம்புகளைமகிழ்ச்சியுடனேயேபார்த்தனர். இவ்வளவுவீரமிருந்தும், மூடநம்பிக்கைகளிலிருந்துமாறவில்லை. கடல்நீலக்கண்கள்இருந்தால்அந்தப்பெண்ணிடம்செல்வம்சேரும், கருங்கூந்தல்இருந்தபெண்களுடன்சேர்ந்தால்தொட்டகாரியம்வெற்றிபெறும், உச்சந்தலையில்அர்ஜுனமச்சம்இருக்கும்பெண்ணைஅடைபவனுக்குசகலவசதிகளும்வாய்க்கும் என்றெல்லாம் நம்பினர்.    (அடர்ந்தகருங்கூந்தலைவைத்துக்கொண்டு உச்சந்தலையில்மச்சத்தைஎப்படிப்பார்த்திருப்பார்கள்என்பதுவியப்பாகவேஇருக்கிறது.  மேலும்அவள்உச்சந்தலையில்துச்சாசனமச்சம்இருந்தால்என்னவாய்க்கும்என்றுசொல்லப்படவில்லை.  2003, படம்; விசில், பாடல்: அழகியஅசுரா).

 

ஒருஆணும்பெண்ணும்பேசிக்கொள்ளும்போதுஎந்தவிததயக்கமும்இல்லாமல்ஒருமையில்பேசிக்கொள்வார்கள். போடாபோடிஎன்று  மிகவும்சகஜமாகக்காதலைவெளிப்படுத்துவதும்ஊடுவதும்  வழக்கமாகஇருந்ததுஎனலாம். என்னைகல்யாணம்பண்ணிக்கொள்என்றுஒருஆண்கேட்டால், என்செருப்பெடுப்பேன்என்றுவெகுசகஜமாகசொல்லும்வரைபெண்கள்முன்னேறிஇருந்தனர். ஆண்களும்லேசுப்பட்டவர்களில்லை, காதல்சொல்லும்பெண்ணிடமே, உன்அக்காவுக்குலைன்போடுவேன், உந்தங்கச்சிக்குமைபோடுவேன்உன்பெமிலிக்கேஐஸ்போடுவேன்என்றுசொல்லிக்காதலித்திருக்கிறார்கள். அந்தபெண்ணும்பதிலுக்குபதில்பேசிவிட்டு, கடைசியில்ஈவ்டீசிங்கேஸ்போடுவேன்என்றுபயமுறுத்துவதைக்காண்கிறோம். ஆங்கிலவார்த்தைகளைத்தமிழ்மக்கள்தமிழைவிடஅதிகமாகநேசித்துப்பேசிஇருப்பதுகண்கூடாகத்தெரிகிறது. இதிலிருந்துதமிழர்களின்  கல்விமுன்னேற்றத்தை  அறிந்துகொள்ளலாம். (கடலைவறுப்பதுஎன்பதுகாதலின்ஒருபகுதியாஎன்பதைப்பற்றித்தனிஆராய்ச்சிமேற்கொள்ளவேண்டும்.  பலபடங்களில்இந்தவார்த்தைகையாளப்பட்டுள்ளது. 2005, படம்:சுக்கிரன், பாடல்:சப்போஸ்உன்னைக்  காதலித்து).

 

ஒருவரைஒருவர்கேலியும்கிண்டலுமாகச்சீண்டிக்கொண்டிருந்தக்  காதல், வேகம்பிடித்துவன்முறையைநோக்கிப்போனதையும்காண்கிறோம். தீப்பிடிக்கவும், தங்கள்உடல்திமிரைஅடக்கக்கடித்தும்,  சாட்டையால்அடிக்கவும், தேளைவிட்டுக்கடிக்கச்சொல்லவும்  பெண்கள்துணிந்தனர். ஆணைமல்யுத்தப்போட்டிக்குஅழைப்பது   போல்பெண்கள்அழைத்தனர். கழுத்தை  வளைத்து, தசையைமுறுக்கி, உடம்புஉதற, எலும்புகள்நொறுங்க, வரையற்றவன்முறைக்குவழிகோலினர். ஆண்களும்சளைக்காமல்அவர்களுக்குசேவை   செய்ததாகவேதோன்றுகிறது.  இதில்பெண்களின்மேலாண்மைஅதிகமாகஇருந்திருக்கவேண்டும்என்றுஎடுத்துக்கொள்ளலாம். (2005, படம்:அறிந்தும்அறியாமலும், பாடல்:தீப்பிடிக்கத்தீப்பிடிக்க).

 

இப்படிபெண்களால்ஆதிக்கம்செலுத்தப்பட்டும்,ஆண்கள்தன்னிலைமறந்துமயக்கமுற்று இருந்தனர்என்பதைஒருகவிஞர்மிகஅழகாகப்பதிவுசெய்துள்ளார். தன்னையும்பைத்தியம்என்றுபறைசாற்றிபெண்ணையும்பைத்தியம்என்றுகோடிட்டுக்காட்டினார். எவ்வளவுதான்துன்பம்அனுவித்தாலும்அவள்மீதுகாதல்வருவதைமிகவும்மனமுருகிப்பாடியுள்ளார். வேறுஎந்தவேலையுமின்றிஅந்தகாலத்தில்ஆண்கள்காலைமுதல்மாலைவரைபெண்ணின்காதலுக்காகஏங்கித்தவித்தனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.இரவில்கண்மூடித்தூங்கும்போது, பேன்டுயுப்லைட்போன்றஅசித்துப்பொருட்களும்ஆணைஎழுப்பிக்  காதலியைநினைக்கத்தூண்டியதாகஎழுதிக்கவித்துவத்தின்உச்சியைத்தொட்டிருக்கிறார். இந்தமகத்தானகவிதைஅந்தகாலத்தில்மிகவும்பிரசித்திபெற்றுஒவ்வொருஇளைஞனாலும்பாடப்பட்டிருப்பதைபதிவுகளில்இருந்துஅறியலாம். (2006, படம்: வல்லவன், பாடல்: லூசுப்பெண்ணேலூசுப்பெண்ணே).

 

தமிழ்ப்பாடல்களில்ஆங்கிலபாதிப்புஎன்பதுபோய், தமிழ்க்கவிஞர்கள்ஆங்கிலப்பாடல்களில்ஆங்காங்கு  சிலதமிழ்வார்த்தைகள்சேர்த்துஎழுத  ஆரம்பித்தனர். இதற்குக்காரணம்இல்லாமலில்லை. தமிழகத்தில்அந்தகாலத்தில்ஒட்டுமொத்தஇளைஞர்களும்கால்செண்டர்வேலைகளில்சேர்ந்திருந்ததால்அவர்கள்ஆங்கிலவார்த்தைகளையேதமிழ்போல்பாவிக்கஆரம்பித்துவிட்டனர் என்று தோன்றுகிறது. பெண்கள்ஆண்களைத்துரத்தித்துரத்திவம்புசெய்தனர். ஒருகாபிசாப்பிடலாங்டிரைவுக்குஅழைத்தனர். சிலஆண்கள்அவர்கள்கையில்சிக்காமல்பெண்களின்பேச்சும்எண்ணமும்குப்பையாகஇருப்பதாகக்குற்றம்சாட்டினர் .  அவர்களுடன்சென்றால்வாழ்க்கையேவீணாகிவிடும்என்றுகவலைகொண்டனர். முந்தையபாட்டில்சொல்லியபடிபெண்களைநம்பிபைத்தியமாகப்போனஆண்கள்பலகோடி  என்றுசொல்லித்தப்பிக்கமுயற்சிசெய்தனர். சுப்புலக்ஷ்மிஎன்றபெண்வள்ளுவரைத்துணைக்கழைத்துஅவர்சொன்னகாமத்துப்பாலைமேற்கோள்காட்டிஅழைத்தும்கந்தசாமிஎன்றகனவான்தன்கண்ணியத்தைக்காத்துக்கொண்டது  இப்பாடலில்தெள்ளெனவிளங்குகிறது. (2009, படம்:கந்தசாமி, பாடல்:எக்ஸ்கியுஸ்  மீமிஸ்டர்கந்தசாமி).

 

கந்தசாமிபோன்றகண்ணியவான்கள்மிகச்சிலரேஇருந்திருக்கின்றனர்.  பெரும்பான்மையானஆண்கள்பெண்களின்மேல்மையல்கொண்டு மதியிழந்திருந்ததுஇப்பாடலின்மூலம்தெரியவருகின்றது. நீஎனக்குவேண்டாம், நான்எனக்குவேண்டும், உன்னைப்பெற்றவன்எவன், அவன்என்கையில்கிடைத்தால்சாகடித்துவிடுவேன்என்பதைமிகஅழகாக “எவன்டிஉன்னைபெத்தான், கைலேகெடச்சாசெத்தான்” என்றுயாப்பிசைத்திருக்கிறார்  கவிஞர். இதுபெண்ணின்மீதுஉண்டானவெறுப்பினால்அல்ல, அளவுக்கதிகமானகாதலால். மேலும்அந்தகாலத்துஆண்கள்தன்காதலியின்அல்லதுமனைவியின்பெற்றோருக்குமரியாதைகொடுத்துப்பேசும்வழக்கமேஇல்லைஎன்றுதெரிகிறது. காதலியின்மேலிருந்தமோகத்தின்காரணமாகஆண்,அந்தகாலத்திலிருந்தஅத்தனைசமூகவலைத்தளங்களிலும், உபயோகித்ததொலைத்தொடர்புபொருட்களிலும்அவளையேகண்டிருக்கிறான். அதுமட்டுமல்ல, காதல்கிறுக்கத்தின்எல்லைக்குப்போய், அவள்பயன்படுத்தும்ப்ரஷ், பேஸ்ட், ஷவர்ஜெல், மானம்காக்கும்மேலாடை,  மேக்கப்சாதனங்கள், விளையாடும்பொம்மை, பெட், பில்லோஎன்றுஎல்லாமும்தானாகவேஇருக்கஆசைப்பட்டான். தமிழர்கள்பண்புதவறாதவர்கள்என்பதாலோஅல்லதுசுகாதாரம்கருதியோஎன்னவோஅவளுடையஉள்ளாடையாகஇருக்கப்பிரியப்படவில்லை. அதைப்போல,அவளுடையவீட்டிற்க்குநைட்வாட்ச்மேனாகஇருக்கப்பிரியப்படும்அந்தஆண்,காவல்நாயாகஇருக்கநினைக்காததுஏனென்றுவிளங்கவில்லை.  (2011, படம்:வானம், பாடல்: எவன்டிஉன்னைபெத்தான்).

 

பெண்கள்மீதானமயக்கத்தில்மனக்கிளர்ச்சியின்உச்சிக்குச்சென்றதமிழர்கள், தாங்கள்நினைத்தபடிநடவாதபோது, துக்கத்தில்ஆழ்ந்தனர்.  உள்ளுக்குள்காயமும், பாழானநெஞ்சுவெந்நீரில்இட்டதுபோலத்துடித்தும்வருந்தினர். வருத்தம்ஆத்திரமாகமாறிபெண்ணைவெறுத்துஅவளைக்கொல்லவும், வெட்டவும்துணிந்தனர்.  சின்னசின்னதாகக்கண்டகனவுகளில்பெண்கள்ஆசிட்ஊற்றியதாகவும், ஆண்கள்வாழ்வில்பெண்கள்சாபமாகஇருப்பதாகவும், இந்தக்காதல்மோகத்தைவிட்டொழிக்கவேண்டும்என்றும்நண்பர்களுக்குள்பேசிக்கொண்டனர். அந்தஅளவுக்குமனம்வெறுத்துப்பேசுவதிலிருந்துஆண்கள்பெண்களால்வஞ்சிக்கப்பட்டதையும், அவர்களால்வாழ்க்கையேகசந்துபோனதையும்கவிஞர்,  படகிருந்தும்வலையிருந்தும்கடலுக்குள்மீன்கள்கிடைக்கவில்லை, கனவிருந்தும்கலரில்லை, படமிருந்தும்  கதை  இல்லை, உடம்பிருந்தும்உயிரில்லை, உறவிருந்தும்தீர்வில்லைஎன்றுஅற்புதமானஉவமைகளைச்சொல்லிஆண்களின்அவலநிலையை  விவரித்திருக்கிறார்.  மேலும்பெண்களால்ஏமாற்றப்பட்டஆண்கள்இரவில்பீர்குடித்தும்காலையில்மோர்குடித்தும்தங்கள்உடல்சூட்டையும்மனக்கொதிப்பையும்ஆற்றிக்கொண்டதைகவிஞர்மிகச்சூசகமாகத்தெரிவித்திருக்கிறார்.  (2011, படம்: மயக்கம்என்ன, பாடல்: காதல்என்காதல்அதுகண்ணீருலே).

 

பெண்களால்வஞ்சிக்கப்பட்டுவாழ்க்கைப்பாழானவாலிபர்களின்நிலைதொடர்ந்திருக்க  வேண்டும். அவர்கள்இந்தப்  பெண்களின்காதலேவேண்டாம் .  அதுமூடிதிறந்ததும்ஆளைக்கவிழ்த்துவிடும்மதுக்குப்பியைப்போன்றதுஎன்றுமதுஅருந்தியபடியேபாடிஆடிஇருக்கிறார்கள். கடலருகேவாழும்ஒருபரதக்குடும்பத்துஇளைஞன்,  அவனுடைய  நண்பர்களுடன்இந்தப்பாடலைப்பாடிஇருக்கவேண்டும்.  ஏனெனில்வஞ்சிரம், வவ்வால், கெளுத்தி, இறால்போன்றநீர்வாழ்பிராணிகளைப்பற்றி, பாட்டில்கவிஞர்கோடிட்டுக்காட்டிஇருக்கிறார். கடலைப்போல்காதல்உப்புத்தண்ணீரென்றும், காதலித்தபெண்ணைக்கட்டிகொண்டால், ஆண்கள்அணியும்உடையைக்கூடஇழக்கவேண்டிவரும், அதுவேபெற்றோர்கள்பார்த்துவைக்கும்பெண்ணைமணந்தால்சற்றேநிம்மதியாகஇருக்கலாம், பெண்ணைநம்புவதைவிடநண்பர்களைநம்புவதுநல்லதுஎன்றுஅறிவுறுத்துகிறார். (2012, படம்: ஒருகல்ஒருகண்ணாடி, பாடல்; வேணாம்மச்சான்வேணாம்இந்தபொண்ணுங்ககாதலு).

 

அந்தகாலத்தில்மிகப்பிரபலமானஇந்தப்பாடல், ஏன்பிரபலமானதுஎன்றுதெரியவில்லைஎன்றுபாடல்எழுதியபுலவரேஒப்புக்கொண்டதுஇந்தப்பாடலைமேலும்பெருமைபடவைத்தது.  யுடியுப்எனப்படும்இணையத்தளவலைத்தொகுப்பில்வெளியிட்டசிலநாட்களில்வைரஸ்  போலஅதன்புகழ்பரவியது.  தமிழரின்கலாச்சாரப்பண்பாடும்உலகம்முழுவதும்பரவியது. மதுவின்மயக்கத்தில்தப்புந்தவறுமாகஆங்கிலத்திலும், சிலதமிழ்வார்த்தைகளைத்தெளித்தும்எழுதப்பட்டிருக்கும்ஒருகவிதை. காதல்வயப்பட்டுதோல்விஅடைந்து, காதலியால்கைவிடப்பட்டஆண், அவளைநினைத்துக்குடித்தபடிசைட்டிஷ்சுவைத்தபடிஅழுதுகொண்டேபாடுகிறான். அவளுக்குஏன்இந்தகொலைவெறிஎன்றுகேட்கிறான். கருப்புவானத்தில்வெள்ளைநிறமாகமிதக்கும்நிலவைப்போல், கருப்புஇதயத்தைசுமந்திருக்கும்வெள்ளைநிறத்துப்பெண்ணைவெறுத்துப்பாடுகிறான். அவள்கண்களைப்பார்த்ததால்இவன்எதிர்காலம்இருண்டதாம். கண்ணாடிக்கோப்பையில்மதுநிரம்பியது  போல்இவன்கண்களில்கண்ணீர்நிரம்பியதாம்.  அவள்வந்ததால்இவன்வாழ்க்கைபின்னோக்கிப்போனதாம். இவன்இறந்து  கொண்டிருக்க,  அவள்மட்டும்எப்படிசந்தோஷமாகஇருந்துகொண்டிருக்கிறாள்  என்றுஅவன்கேட்கும்போதுநம்நெஞ்சம்  உருகுகிறது. ஆண்களைப்பெண்கள்  எவ்வளவு  தூரம்இம்சித்திருக்கிறார்கள்என்பதுபுலனாகிறது. (2012, படம்: 3, பாடல்: ஒய்  திஸ்கொலைவெறிடி).

 

இப்படிப்பென்களால்வசியப்பட்டு, துரத்தப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு,  காதலிக்கமுடியாமல், கடைசியில்கைவிடப்பட்டு, இம்சிக்கப்பட்டுவிரக்தியின்எல்லைக்கேபோனஆண்கள், அவர்களைஎதிர்த்துசெயல்பட  முடியாமல், அவர்களைவெல்லமுடியாமல், தோல்வியில்துவண்டுபோய்,  அவர்களுக்குசாபம்கொடுத்துதம்ஆற்றாமையைஆற்றிக்  கொண்டனர். ஏமாற்றிவிட்டுப்போனகாதலியின்  கைப்பேசிகாணாமல்போகட்டும், மடிக்கணினியில்  வைரஸ்  நிரம்பட்டும், அவளுடையஏடிஎம்தகடுதொலைந்துபோகட்டும், அதன்பின்நம்பர்மறந்துபோகட்டும்என்று கண்ணீரும் கம்பளையுமாகக் கடவுளை வேண்டிச் சாபமிட்டதைக் காணமுடிகிறது.  கல்லூரிக்காளையர்அவளைஅத்தைஎன்றுகூப்பிடவும், கழிவுக்குழியில்அவள்விழவும், தூங்கமுடியாமல்கொசுபிடுங்கவும், மீறித்தூங்கினால்கனவில்பவர்ஸ்டார்என்பவரின் அதிபயங்கரமானநடனத்தைப்பார்க்கவும், வழுக்கைத்தலைபுருஷன்வாய்த்து, பத்துப்பெண்களைப்பெற்றுஅவர்களுக்குமாப்பிளைகள்கிடைக்காமல்அந்தப் பெண்திண்டாடவும்வேண்டும் என்றும், அவள்ஜாக்கிங்போகும்போதுநாய்கள்  துரத்தவேண்டும், அவளுடையசிநேகிதிகள்பேய்களாகவும்,சிநேகிதன் ஓரினச் சேர்க்கையாளாகவும் மாற வேண்டும் என்றெல்லாம் மிகவும் வயிறெரிந்து, பாதிக்கப் பட்ட ஆண்கள் பெண்களுக்குச் சாபமிட்டதைப் பார்க்கும்போது ஆண்கள் அனுபவித்த வேதனைகளும் பட்ட துன்பங்களும் தெளிவாகின்றன.  அந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் கைகளில் சிக்கி நரக வேதனை அனுபவித்திருக்க வேண்டும். (2013, படம்: இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, பாடல்: லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போய்ட்டா).

 

ஆக, ஆராய்ச்சிக்குஎடுத்துக்கொண்டதிரைப்படப்  பாடல்களில்வெளிப்படுத்தப்பட்டிருக்கும்கருத்தின்படி, அந்தகாலத்தில்வாழ்ந்ததமிழர்களின்கலாச்சாரபண்பாட்டுமுறைகள்உள்ளங்கைநெல்லிக்கனிபோல்தெளிவாகிறது. ஐம்பதுஆண்டுகளுக்குமுன்வாழ்ந்தபெண்கள்மிகவும்வீரமிக்கவர்களாகவும், காதல்வீரியம்மிக்கவர்களாகவும்  இருந்தனர்.  ஆண்கள்பெண்களின்காதலுக்காகஏங்குவதேமுழுவேலையாகஇருந்தனர். அதனால்பெண்களால்வஞ்சிக்கப்பட்டு, படுகேவலமாகநடத்தப்பட்டனர். அப்படிஇழிவுபடுத்தப்பட்டதால், பெண்களைஎதிர்த்துப்போராடத்துணிவின்றி, ஆண்கள்  மதுவைநாடினர். பெண்களைவெறுக்கத்தலைப்பட்டு,அவர்களைவெட்டவேண்டும்கொல்லவேண்டும்என்றுவெறும்வாய்வீரம்பேசிவிட்டு, பிறகுகையாலாகாத்தனத்தினால், அவர்கள்நாசமாகப்போகட்டும்என்றுபுழுதிவாரித்தூற்றிசாபமிட்டனர்என்றுதெரியவருகிறது.

 

அந்தகாலக்கட்டத்தில், தமிழகத்திலும், அதைஉள்ளடிக்கியஇந்திய  நாட்டிலும்கூடபெண்கள்ஆட்சிசெய்துவந்தனர்.  அம்மாஎன்றும், அன்னைஎன்றும், திதிஎன்றும், மாயாபெஹன்என்றும்சுஷ்மாஜிஎன்றும்பலபெருமைமிக்கபெண்கள்அந்தசமயத்தில்இந்தியநாட்டில்புகழ்பெற்றுஅரசியல்செய்துவந்ததற்கானச்  சான்றுகள்சரித்திரத்தில்காணப்படுகிறது.  ஆகவேஇந்தஆராய்ச்சிக்கட்டுரையின்முடிவுகள்சரியானதுதான்என்பதில்எள்ளளவும்சந்தேகமில்லை.

 

பின்குறிப்பு: பெரும்பாலானஆராய்ச்சிக்கட்டுரைகள்இப்படித்தான்அபத்தமாகஇருக்கும். இந்தமாதிரிரேண்டம்சாம்ப்ளிங்எடுத்துத்தான்ஆராய்ச்சிக்கட்டுரைகள்சமர்ப்பிக்கப்படுகின்றன.  அவற்றிற்குபி.எச்.டிபட்டங்களும்வழங்கப்படுகின்றன. புள்ளியைக் கொண்டு புவனத்தைஅளக்கும்கதைதான்.

தலைப்புக்கானசரிக்கட்டல்: “அன்றொருநாள்இதேநிலவின்கீழ்வாழ்ந்ததமிழர்களின்கலாச்சாரமும்பண்பாடும்” என்னும்நீண்டகட்டுரைத்  தலைப்பின்சுருக்கம்தான்அது.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *