வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92

This entry is part 10 of 25 in the series 14 செப்டம்பர் 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்த வெளிப் பாட்டு -3)

 

விண்வெளிப் புயலைச் சுவாசிக்கிறேன்.

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

இந்த நேரத்தி லிருந்து உறுதி

எடுத்துள்ளேன்,

வரையறை எனக்கில்லை !

கற்பனைக் கோடுகள்

எனக்கில்லை.

தனித்த பூரணத் தளபதியாய்,

எனக்கு நானே

மாட்சிமை புரிபவன்,

குறித்தபடி

நினைத்த இடம் செல்வேன் !

பிறர் குரலுக்குச் செவி சாய்ப்பேன்;

அவர் உரைப்பதை

மதிப்பேன்.

நின்று தேடுவேன்;

ஏற்றுக் கொள்வேன்;

சிந்தித்துப் பார்ப்பேன் கேட்டதை;

என்னுடன்

ஒட்டிக் கொண்டதைப்

பரிவுடன்

வெட்டி விடுவேன்

உறுதியாக !

 

விண்வெளிப் புயலை

உள்ளிழுத்துக் கொள்கிறேன்;

கிழக்கும் மேற்கும்

எனக்குப் பந்தமானவை.

வடக்கும், தெற்கும் அவைபோல்

எனக்குப் பந்தமானவை.

பெருத்த உடல் எனக்கு,

என் நினைப்புக் கணிப்பை விட !

நெறிப்பாடு மிக்கவன் நானென

அறியாதவன் நான் !

 

எல்லாம் எழில் மயமாய்த்

தெரியுது எனக்கு;

ஆணுக்கும், பெண்ணுக்கும்

மீண்டும் சொல்வேன் :

எனக்குப் புரிந்த

உங்கள் நற்பணி உயர்ந்தது

எனது காலம் முடியும் போது,

உனக்கும், எனக்கும் செய்து வைப்பேன்.

காலம் செல்லச் செல்ல

கலந்து வாழ்வேன்

ஆடவர், மாதரிடையே !

நானொரு புதுக் களிப்பை,

புரட்சியைத் 

தூண்டி விடுவேன்;

ஏற்றுக் கொள்ளாதவர் எவரேனும்

என்னைத்

துன்புறுத்த வேண்டாம் !

ஏற்றுக் கொள்வோர் யாராயினும்

ஆசீர்வ திக்கப் படுவார் !

என்னையும்

ஆசீர்வதிப்பர் நிச்சயம் !  

 

+++++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
Series Navigationஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *