என்ன செய்யலாம் தமிழ்நாட்டை :)

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

jaya-sasi

புனைப்பெயரில்.

கருணாநிதி, கருணாநிதி , கருணாநிதி என்று சொல்லி சொல்லியே, காட்டிக் காட்டியே , தமிழகத்தை இன்னொரு

கும்பல் நாசமாக்கிக் கொண்டிருக்கிறது.
இன்னும் எத்துனை நாள் இது தொடரும்,.

சாராய ஜேப்பியார் கல்வித் தந்தை காமராஜர் போலானது, ஏ சி சண்முகம், வேலூர் விஸ்வநாதன், ஜகத்ரட்சகன்,

திருநாவுக்கரசு(ர்) , குப.கிருஷ்ணன், என்று நீண்டு கொண்டே போகும் கூட்டம் என்ன கருணாந்தி கும்பலா?

இன்று கொழுத்த ராஜராஜ சோழன் வாரிசு போல் வாழும் மன்னார்குடி கும்பல் கருணாநிதி கூட்டமா?

கிரானைட் பி ஆர் பி, தாதுமணல் வைகுண்ட ராஜன் என்ன திமுக வால் வளர்த்து விடப்பட்டவரா?

கருணாநிதி கும்பல் கொள்ளையோ கொள்ளை எனக்குத் தேவை என் பிள்ளையோ பிள்ளையென்று இருந்தால்

அதற்கு மாற்று இன்னொரு கொள்ளைக் கும்பலா?

இலவசம் யார் அதிகமாக தருபவர் தான் நல் ஆட்சி என்று இருந்தால் எல்லா ஆதாரமும் இன்னும் கொஞ்ச

வருடத்தில் தீர்ந்து கேவலப் பிழைப்பாகிடாதோ ?

டாஸ்மாக்கில் உடல்நலம் , மனநலம் தொலைக்கும் சமூகம் வாழும் நாட்டை சுடுகாடாகத் தான் மாற்றுகிறது?

ஜெ செய்த தண்டனைக்கு அவரை மீட்டெடுப்பதற்கு ஏன், அவன் செய்யலையா இவன் செய்யலையா என்று பேச

வேண்டும்?

மற்ற அனைவரையும் தண்டிக்க இந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிக்கலாமே?

தமிழகத்தையே கொள்ளையடித்த , கொள்ளையடிக்கும் கும்பல் சசிகலா, இளவரசி – ஜெ பின்னால் அமர்ந்து தாரை

தப்பட்டை, ஜாமர் வண்டிகள், தனி விமானம் என்று பவனி வருகிறது.
கொள்ளை கும்பலிடம் தகுதிக்கு ஏற்றவாறு கையூட்டுப் பெற்ற கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது.

அத்வானிக்கு மாற்று மோடி என்று வரும் போது,

ஏன் ஜெக்கு மாற்று ஒரு கொத்தடிமையை விட கேவலமாக படுத்து தவழும் ஒரு சுயமரியாதை இல்லாத

ஜன்மமா?
முதல்வராம் ஆனால் சொல்ல மாட்டாராம்?
முதல்வராம் ஆனால் ஒரு திட்ட வடிவு , செய்ல்முறை எதுவும் கிடையாதாம்>

கூடி நின்று கலவரம் பண்ணினால் விடுதலை செய்ய வேண்டுமாம், இதற்கு இந்த கைத்தடி அடிமை முதல்வர்

மௌனகுருவாய் கண்கலங்கி நிற்பாராம்.
தூ… என்ன கேவலமான ஒரு சமூகத்தை விதைத்துச் சென்றுள்ளார்கள் திராவிட சிகாமணிகள்.

ஏன், ஜெயலலிதா செய்த ஊழலை விட அதிகம் செய்தவர்கள் என்று லிஸ்ட் போட்டு அனைவரையும் உள்ளே

தள்ளாலாமே?

சகாயத்தை பந்தாடிய கோகுல இந்திரா மீண்டும் அமைச்சராம்? கொள்ளை தொடர முயற்சியோ?

கருணாநிதி கும்பல் வேண்டாம் , மன்னார்குடி கும்பலும் வேண்டாம் – மாற்று கிடையாதா?

அடம்பிடிக்கும் கும்பலின் கன்னத்தில் ஒரு அறைவிட்டு தான் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு, உண்மையில் ஒரு நல் மாற்று தமிழகத்திற்கு தரலாம் என்றால்,
356 பிரயோகித்து ஒரு கவர்னர் ஆட்சி தரலாமே.

சீரான ஒரு ஆட்சி என்றால் மக்கள் மனம் மாறி பிறரைத் தூக்கித் தான் எறிவார்கள்.
அதில் ஏன் மத்திய அரசிற்கு தயக்கம்.

சோ செய்வது வெறும் அரசியல் , தார்மீகமும் தர்மமும் இல்லை.

கருணாந்தி வந்து விட்டால், கருணாநிதி வந்துவிட்டால் என்று ஏன் பூச்சாண்டி, ஏன் , ஜெயிடம் சென்று நீ சசி

கும்பலை விடாவிட்டால் சமூகம் உன்னைக் கைவிடும் என்று புத்தி சொல்லலாமே..

அதை அவரின் மகாபாரதமும், கீதா உபதேசமும் உணர்த்தவில்லையா?

கருணாநிதியோ ஜெயோ , யார் வந்தாலும் இனி சட்டத்தில் உள்ளே போய் கம்பி எண்ணனும் என்ற நினைப்பு

உணர்த்தப்பட்டால் அவர்தம் கை நீளுமோ?

ஒரு சுப்ரமணிய சாமி போல் ஊர் ஊருக்கு சு.சா க்கள் தோன்றினால் வீணர்கள் என் செய்திடல் முடியும்.

சு.சாமிக்கு ஒரு வீர வணக்கம்.

சகிகலா கும்பல் ஜெ முதுகு பின்னாடி நின்று தப்பிக்க தமிழகம் விட்டால் இனி நல்லதே தமிழக அரசியலில்

நடக்காது.

திமுக வோ அதிமுகவோ மக்கள் அவர்களை கண்ட்ரோல் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் நீதிமன்றம் கேலிக் கூத்தாகி விடும்.

டில்லி போனால் காசு கொடுத்து வெளி வரலாம் என்று வெளிப்படையாக இணையத்தில் பேசப் படுகிறது. அது

இல்லை என்று நிரூபிக்கப்பட வேண்டும்.

எல்லா கட்சியிலும், எல்லா நிலையிலும் திருடர்கள் இருப்பது போல், நல்லவர்களும் இருக்கிறார்கள்.
வெளி வர முடியாவிட்டாலும் , முகமூடி அணிந்து நல்லவற்றுக்கென போராடலாம்.

எழுமின் விழுமின் தான்…. இவர்கள் போன்றோரை தண்டிக்காவிடில் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாவோம்.

356 வரட்டும்.

புனைப்பெயரில்

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *