பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர் காவலூர் ராஜதுரை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

பல்துறை  ஆற்றல்  மிக்க  செயற்பாட்டாளர்  

காவலூர்  ராஜதுரை

   

 

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  அனுதாபச்செய்தி

கலை ,  இலக்கியம்,  வானொலி,  தொலைக்காட்சி,  சினிமா,  நாடகம், மற்றும்  விளம்பரம்  முதலான   துறைகளில்  தனது  ஆற்றல்களை வெளிப்படுத்தி    நீண்ட காலமாக  இயங்கிய  காவலூர்  ராஜதுரையின் மறைவு   ஈடுசெய்யப்பட வேண்டிய  இழப்பு  என்று  அவுஸ்திரேலியா தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  சார்பில்  அதன்  நடப்பாண்டு தலைவர்  டொக்டர்  நடேசன்  வெளியிட்டுள்ள  அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியில்   மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமது   பூர்வீக  ஊருக்குப்பெருமை சேர்க்கும்  வகையில்  தனது இயற்பெயருடன்   ஊரின்  பெயரையும்  இணைத்துக்கொண்டு   நீண்ட நெடுங்காலமாக   கலை,  இலக்கியம்  சார்ந்த  பல்வேறு   துறைகளில் தனது   ஆற்றலையும்   ஆளுமையையும்  வெளிப்படுத்திவந்த   காவலூர்  ராஜதுரை  தமது  83   வயதில்   அவுஸ்திரேலியா  சிட்னியில்   காலமாகிவிட்டார்  என்பதை  அறிந்து   எமது  சங்கத்தின் சார்பில்   ஆழ்ந்த  கவலையையும்  அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம்.

காவலூர்  ராஜதுரை  இலங்கையில்  மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்த  பின்னரும்  தாம்  சார்ந்திருந்த துறைகளில்   ஆக்கபூர்வமாக  உழைத்தவர்.

ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியைப்பொறுத்தவரையில்  நான்கு தலைமுறைகாலமாக   அவர்  குறிப்பிடத்தகுந்த  பங்களிப்புகளை வழங்கியவர்.

சிறுகதை,   விமர்சனம்,  நாடகம்,  வானொலி   ஊடகம்,  இதழியல், திரைப்படம்,   தொலைக்கட்சி,  விளம்பரம்  முதலான  பல்வேறு துறைகளில்   அவர்  தொடர்ச்சியாக  ஈடுபட்டுவந்துள்ளார்.

எமது  அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் உருவாக்கப்பட்ட  காலத்தில்  அதன்  ஸ்தாபக  உறுப்பினராக இணைந்துகொண்டதுடன்   –  சங்கம்  மெல்பன்,  சிட்னி,  கன்பரா முதலான  மாநில  நகரங்களில்  நடத்திய  எழுத்தாளர்  விழாக்களில் இடம்பெற்ற   கருத்தரங்குகளிலும்  பங்கேற்றவர்.

மெல்பனில்  எழுத்தாளர்  விழா    நடைபெற்ற  சமயம்  இலங்கையில் தயாரிக்கப்பட்ட   சில   தரமான  குறும்படங்களை   காண்பித்தார். அவுஸ்திரேலியாவில்   தரமான  குறும்பட  பிரக்ஞையை வளர்ப்பதற்கும்   அவர்  கணிசமான  பங்களிப்பு  வழங்கியவர்.

அவரது  பணிகளை   பாராட்டி  கௌரவிக்கும்  முகமாக  எமது  சங்கம் சில   வருடங்களுக்கு  முன்னர்  அவருக்கு  விருது  வழங்கி பாரட்டியிருக்கிறது.

எம்மவர்  பலரது  நூல்கள்  வெளியான  சந்தர்ப்பங்களில்  அவை குறித்து  விமர்சனங்கள்  எழுதி  ஊக்கமளித்தும்  வந்திருக்கும் காவலூர்  ராஜதுரை  மொழிபெயர்ப்புத்துறையிலும்  ஈடுபட்டவர்.

அவரது   மறைவினால்  கவலையுற்றிருக்கும்  அவரது  மனைவி உட்பட   குடும்பத்தினருக்கும்  அவரது  நெருங்கிய  நண்பர்களுக்கும் எமது   அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  சார்பில்  ஆழ்ந்த  அனுதாபங்களை   தெரிவித்துக்கொள்கின்றோம்.

—-0—-

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *