ஆத்ம கீதங்கள் – 10 நேசித்தேன் ஒருமுறை .. !

This entry is part 12 of 23 in the series 21 டிசம்பர் 2014

 

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

வகுத்து ஆய்ந்தேன் ஒருமுறை

வாழ்வை மதிப்பிட்டு,

வையத்தின் கூக்குரல் ஒலிகளே

நாளின் நடப்புகள் !

மறுப்பும், உடன்பாடும் மாறி மாறி  

வருத்தம் கொடுப்பது காதல் !

முத்தங்கள் விழுவது

மௌனக் களிமண் உதடுகளில்,

பெருமூச் சோடு பிரிவு விடைபாடுகள் !

வருந்து வோருக்கு தான்

வரவேற்புகள் !

நேசித்தேன் ஒருமுறை என்னும்

வாசகம் தவிர,

கசப்பான நிஜப் பிரிவெல்லாம்

காற்றோடு போயின !

 

நேசித்தது நானெனப் பேசுவது யார் ?

நிரந்தரச் சுடர்விழி யோடு

அன்பு அன்பென்று முன்னறி விக்கும்

தேவதைகள் அல்ல !

காதல் புரிந்து உணர்ந்து கொள்,

ஆதரி என்பதல்ல !

அன்பே தெய்வம் என்பதல்ல !

அதன் புனிதப் பெயர் ஒளியூட்டும்

அழியாது !

நிரந்தர மான

ஆற்றல் மிக்க கடவுள் என்றும்

மாறுவ தில்லை;

ஒருமுறை தான் நேசித்தேன் என

ஒருபோதும் யாரும்

கூறுவ தில்லை !

 

ஒருமுறை தான் காதல் என்று

உரைப்ப தில்லை !

உனது வாய்ச்சொல், ஏசுவைப்

பலியாக்கித் தோழனாய் கீழ்ப்படுத்தும் !  

உன் சிலுவை யும், சாபமும்

உண்டாக்கும் பிளவு ! ஆயினும்

நீடிக்கும் காதல் உறவு,

நேசித்த பிறகு;

ஆடவன் வார்த்தை இது !

ஆம், ஆம், ஆடவன் உரை தான் !

நகல்வ தற்கு வலுவில்லை, உருளும்

தாரகைக்கு ! நிரந்தர மான

தெய்வீகக் காதலை அவமதிப்பது

வையக மனிதன்,

ஒருமுறை தான் நேசம் !

உரைப்பான்

மறுமுறை இல்லை யென்று !

[தொடரும்] 

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ்யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *