ஆத்ம கீதங்கள் –17 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! வாழ்வினி இல்லை எனக்கு

This entry is part 26 of 26 in the series 22 பெப்ருவரி 2015

 

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

பாதிரியார் வழிபடக் காத்துள்ளார்

பாடகக் குழுவினர் மண்டி யிட்டுள்ளார்;

ஆத்மா நீங்கிச் செல்ல வேண்டும்,

அச்ச அமைதியில் வேதனை வலியுடன்,

பெருந்துயர் உற்றேன்,

களைப் படைந்த நானும் !

காத்ரீனா வுக்கு வாழ்வினி இல்லை !

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படுமா எனக்கினி ?

 

கூந்தல் நாடா எடுத்துக் கொடுக்கிறேன்

வாங்கி வைத்துக் கொள் நினைவாக,

உணர்ச்சி மேலிட்டு நீ அழ நேர்ந்தால்

மனக் கசப்பில் தனித் தில்லை நீ !

புனித நோக்குடன்

மன மயக்கின்றி

வானி லிருந்து சாய்ந்து வீழ்வாய் !

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படுமா எனக்கினி ?

 

ஆனால் இச்சமயம் நீக்கப் படாமல்

ஒளிமய மாகும் மேலுலகு விரைவாய்,

கடந்த போன என் காலத்தை

வடித்திடு நூலாய் எதிர் காலத்தில்;

என்னினிய காதலனே !

பழங்கதைப் பேச்செல்லாம்

வெறும் புகழ்ச்சிகளே !

ஒரு சிலருக்கு அவள் இதய ராணி !

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படுமா எனக்கினி ?

 

[தொடரும்]

 

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/
Series Navigationமருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *