பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 22 in the series 8 மார்ச் 2015

வைகை அனிஷ்
மனிதன் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து தொன்றுதொட்டு விளங்கி வருவது கலையாகும். இக்கலையானது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. கலையின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை ஏதேனும் ஒரு வகைப் படைப்பிலிருந்தே அறிந்துவிடமுடியாது. கவிதை, இசை, ஓவியம், சிற்பம், கட்டிடம் இன்னும் நுண்கலைகள் எத்தனை உண்டோ அவற்றையெல்லாம் கண்டும், கேட்டும், தொட்டும், துழாவியும் பார்த்தால்தான் கலையின் பரப்பையும் ஆழத்தையும் அது தோற்றுவிக்கும் உலகியலுக்கு மேம்பட்ட ரசானுபவத்தையும் நாம் ஒருவாறு உணரமுடியும்.
ஓவியக்கலையானது வரலாற்று முன்நிலைக்காலத்தில் தொடங்கி வரலாற்றுக்காலம், இடையீடாகச் சம காலம் வரையிலான கால வோட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. வரலாற்று முன்நிலைக்காலத்தில் பாறை ஓவியங்கள், வரலாற்றுக்காலத்தில் செவ்வியல் ஓவியங்கள், சம காலத்தில் பழங்குடிச் சுவர் ஓவியங்கள் மற்றும் நாட்டுப்புறச் சுவர் ஓவியங்கள் எனப் பல்வேறு கலை வடிவங்களாக அறியப்பட்ட கலையானது அறுபடா தொடர்ச்சியைக்; கொண்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாய் ஓவியம் என்னும் சொல் நெடுநல்வாடையிலும், ஒவியர் என்பது சிறுபாணாற்றுப்படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க கால இனங்களில் குடிகள், ஆவியர், ஓவியர், கள்வர், கோகர், துளுவர், திரையர், மழவர் என இருந்துள்ளது. ஓவியர் என்றொரு தமிழ் இனம் இருந்ததாகவும் அது ஓவியக்கலையில் சிறந்து விளங்கிற்று எனவும் அறியலாம். விசுவகர்மாவிற்கு மனு, மயன், சிற்பி, திவாஸ்கரன், தெய்வக்ஞன் என ஐந்து மக்கள் பிறந்தாகவும் இந்த ஐந்து பேர்களும் ஐந்து தொழில்களை செய்துவருவதாகவும் செவிவழிக் கதைகள் புனையப்பட்டு வருகிறது. கொல்லுத் தொழில் செய்பவர்கள் மனுக்கன் என்றும், தச்சுத்தொழில் செய்பவர் மயன்கள் என்றும் கல்லில் செதுக்கும் தொழில் செய்பவர்கள் சிற்பிகள் என்றும், உலோகத்தை உருக்கி பொருட்கள் செய்பவர்கள் திவஷ்டர் என்றும் அணிமணிகள் செய்பவர்கள் விசுவாங்கர் என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது.பண்டையக்காலத்திலிருந்தே ஓவியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். ஓவியத்தில் மிகச்சிறந்து விளங்கியது நமது நாடு. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செழிப்பான கலை அம்சமும், ஆன்மீக அம்சங்களும், வாழ்வியல் கூறுகளும் கொண்ட பல்வேறு மரபுகள் உள்ளன. முகலாய ஓவியம், அஜந்தா ஓவியம், எல்லோரா ஓவியம், சித்தனவாசல் ஒவியம், தஞ்சாவ+ர் ஓவியம், கேரள ஓவியம், பாறை ஓவியம், குகை ஓவியம், மதுபானி, கலம்காரி என பலவகையான ஒவியங்கள் நம்முடைய பண்டைய மரபுகளை இன்றளவும் பிரதிபலித்து வருகிறது. இங்குள்ள ஓவியங்கள் உலகப்புகழ்பெற்ற ஒவியமும் கூட. பொதுவாக ஓவியம் என்பது ஓவியர்களின் கலைவண்ணத்தால் அரசர் அல்லது அதிகாரிகள் ஆணைப்படி உருவாக்கப்;பட்டது. ஓவியர்க்கலையை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மன்னர்கள் ஆதரித்துள்ளனர். இந்திய மரபு ஓவியங்களின் ஆன்மிக-யோக-இறைப்பண்புகள், காதல், காமம் என பலவற்றில் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளது. சில ஓவியங்கள் பாறைகளிலும் செதுக்கப்பட்டுள்ளது. மரபு சார்ந்த ஓவியர்கள் சாஸ்த்திர முறைப்படி அதிகாலையில் நீராடி, மந்திர-த்யாசனச் சடங்குகளை மேற்கொண்டு, யோகம் மற்றும் தியானம் செய்வது போலவே ஓவியங்கள் வரைவது வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் ஓவியத்தை கலையாக மதிக்காமல் ஆன்மீகம், இறையியல், மதநம்பிக்கைப் பயன்பாடுகளாகவே படைக்கப்பட்டன. நம்முடைய பாரம்பரிய ஓவியங்கள் காங்க்ரா,முகல் போன்ற சிற்றோவியங்கள், ஆலய மற்றும் அரண்மனைச் சுவர் ஓவியங்கள் போன்றவை தாம் கைத்திறம் மிக்க ஒவியர்களால் படைக்கப்பட்டவை. அதே வேளையில் மதுபானி, கலம்காரி, வொர்லி போன்ற பெரும்பாலான ஓவிய மரபுகளும் மக்களின் வாழ்வியலிலிருந்தே உருவானவை. அதன் பின்னர் நமது பாரம்பரிய மிக்க ஒவியக்கலையை அழிக்கும் பொருட்டு மேற்கத்திய மரபு ஓவியங்களும் சிற்பக்கலைகளின் தாக்கத்தாலும் அழிவைத்தேடிக்கொண்டன.
கிரேக்கம், இத்தாலி, ரோமானியர், அரபிகள், கிறிஸ்தவ மதத்தின் தாக்கம், ஆப்கானிஸ்தான் என பல்வேறு படையயெடுப்புகள்; நம்முடைய பாரம்பரிய ஓவியத்தை படுகுழிக்குள் விழ வைத்தது. கி.பி.2-3 ம் நூற்றாண்டு காலகட்டத்தைச்சேர்ந்த பைஸாண்டின் முதல் 17-18 ம் நூற்றாண்டின் ரொகோகோ வரையிலான காலகட்டத்தையும் மரபுக்காலம் எனவும், 1760 ஆம் ஆண்டு புதுச்செவ்வியல் முதல் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நிலவிய எதார்த்தவியல் வரையிலானகாலகட்டத்தைப் பின் மரபுக்காலம் எனவும் பிரித்து வைத்துக்கொள்ளலாம். 15 ஆம் நூற்றாண்டு காலம் முதலான செவ்வியல் கால கட்டத்துக்கு முன்பே மனித உருவங்கள் முப்பரிமாணத் தன்மையில் தத்ரூபமாக வரையுமளவிற்கு மேற்கத்திய ஒவியர்கள் தேர்ச்சி பெற்றனர். 14-15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தைலச் சாயமே உள்ளதை உள்ளபடியே தத்ரூபமாக வரையும் முன்னேற்றம் கொண்டது. நமது மரபு ஓவியங்களில் பெரும்பாலானவை இரு பரிமாணம், புற மற்றும் உட்கோடுகள், வரைகலைகள்,அலங்காரங்கள், தட்டையான சாயப்பயன்பாடு ஆகியவற்றைக்கொண்டவை என்பதோடு எதார்த்தத்தக்கு மாறுபட்ட பற்பல கூறுகளும் கொண்டது. முக்கியமாக சரிவிகிதம், சரிகோணம் ஆகியவை மேலைநாட்டு கண்ணோட்டப்படி இருக்காது. மைய உருவமான தெய்வங்கள் அல்லது ஞானிகள் பெரிய அளவில் இருக்க, துணை உருவங்கள் சிறிய அளவில் இடம் பெறுவது. பெரிய தலையும் சிறிய உடலும் கொண்ட இயற்கைக்கு மாறான உருவஅமைப்பு, கோணப்பார்வை புறக்கணிக்கப்பட்டு உருவங்கள் காட்சிகள் மேலும் கீழுமாக அடுக்கப்படுவது போன்றவை.
நமது ஓவியங்கள் புறநோக்கில் அல்லாமல் அகநோக்கில் ஆனவை. அவற்றின் சித்தரிப்புகளும் அவ்வாறு புறத் தன்மைகளைக் குறிக்காமல் அகத்தன்மைகளையும் குறிப்பன. முதன்மைக் கடவுள் உருவங்கள் மகான்கள், ஞானிகளின் உருவங்கள் மற்ற இறை அல்லது மனித உருவங்களைக் காட்டிலும் பெரிதாக வரையப்படுவது முக்கியத்துவம், மேன்மை உணர்த்துவதற்காகவே.
பாறை ஓவியங்கள்:
பண்டைய காலத்தில் பாறை ஓவியங்கள் வரலாற்று காலத்தில் செவ்வியல் ஒவியங்கள், சம காலத்தில் பழங்குடிச் சுவர் ஓவியங்கள் மற்றும் நாட்டுப்புறச்சுவர் ஓவியங்கள் ;எனப் பல்வேறு கலை வடிவங்களாக அறியப்பட்ட கலையானது தொடர்சங்கிலியாக உறவுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.
மேற்குமலைத்தொடர்ச்சி மற்றும் கிழக்கு மலைத்தொடர்ச்சியில் ஏராளமான வரலாற்று ஓவியங்கள் விரவிக்கிடக்கின்றன. பாறை ஒதுங்கிடங்களில் உள்ள பாறைகளின் மீது தீற்றப்பட்ட கலை வெளிப்பாடுகள் பாறைக் கலைப்படைப்புகள் என அறியப்படுகின்றன. பாறையின் மீது கூர்முனைக் கருவிகளால் கீறப்பட்டவை பாறைக்கீறல்கள் எனவும் பல்வேறு நிறமிகளைக் கொண்டு தீற்றப்பட்டவை பாறைத் தீற்றல்கள் எனவும் இரு வேறு வகைப்படும். பழங்கற்காலம் தொடங்கிப் பெருங்கற்காலம் வரையிலான வரலாற்று முன் நிலைக்காலத்தில் தீற்றப்பட்ட பாறை ஓவியங்கள் உலகம் முழுவதும் காணக்கிடக்கின்றன.
நேரிடையாக பாறைத்தளங்களின் மீது நிறமிகளைக் கொண்டு பாறை ஓவியங்கள் தீற்றப்பட்டுள்ளதால் அவ்வாறு தீற்றப்பட்ட நிறமிகள் பாறைத் துகள்களால் ஈர்க்கப்பட்டு ஆக்சிஜனுடன் வினைபுரிந்து உறுதி அடைவதை தொடர்ந்து அவை காலவோட்டத்திற்கு ஈடு கொடுத்து அழியாமல் நிலை பெற்றுள்ளன.இவ்வகையான பாறை ஓவியங்கள் தேனி மாவட்டத்தில் காமயகவுண்டன்பட்டியில் உள்ள மலைப்பகுதியில் உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கி;ல் காமயகவுண்டன்பட்டியில் சுருளிமலை அருகில் சங்கிலிக்கரடு என்ற குன்றில் படையல் பாறையில் உள்ள ஒரு ஓவியத்தில், ஒரு படகில் ஒரு மனிதன் நிற்கும் தோற்றம் உள்ளது. ஒவியம் வெள்ளை நிறமியால் ஆனது. அதன் அருகே ஒரு காளையின் தலை அழுத்தமான ஓவியமாக உள்ளது. இதன் காலம் கி.பி.1000 ஆக இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அதன் அருகாமையில் உள்ள பாறைகளில் கீறல்கள், எல்லைகளை குறிக்கும் எல்லைக்கற்கள் பாறைகளில் ப+ போன்ற வடிவில் ஆங்காங்கே உள்ளன.
தாண்டிக்குடி பாறை ஓவியங்கள்
தாண்டிக்குடியில் உள்ள முருகன் கோயிலில் பாறைகளில் மூலிகைகளைக்கொண்டு மயில், பாம்பு, கால்தடம் போன்றவற்றை வரைந்துள்ளனர். இன்றும் பாறைகளில் அந்த ஓவியங்கள் உள்ளது.
நாட்டுப்புற சுவர் ஓவியம்
நாட்டுப்புறக்கலை வடிவங்களாகவே முதலில் சுவர் ஓவியங்கள் படிமலர்ச்சி அடைந்தன. பின்னரே செவ்வியல் கலை வடிவங்களாக அவை படிமலர்ச்சி பெற்றன. இன்றும் இந்தியா முழுவதும் நாட்டுப்புறத்தவர் தம் குடில்களின் சுவர்மீது ஓவியங்களைத் தீற்றி அழகுபடுத்துகின்றனர். வட இந்தியாவில் புதிதாக மணம் ஆனவர் மகிழ்ந்து இன்புறும் படுக்கை அறைச்சுவர்களில் வரையப்படும் சடங்கியல் சுவரோவியங்களை இத்தகைய நாட்டுப்புறச் சுவர் ஓவிய மரபிற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். மதுபானி ஓவியங்கள் உள்ளிட்ட நாட்டுப்புறச் சுவர் ஓவிய மரபுகள் இவை போன்ற சடங்கியல் சார் சுவர் ஓவியங்களிலிருந்து படிமலர்ச்சி எய்தின என்பது வெளிப்படை
முகலாயர்களின் ஓவியங்கள்
பதினாறாம் நூற்றாண்டில் வரையப்பட்ட காப+ல் அரியணையில் பாபருடைய ஓவியமும், அக்பரும் ஆதாம் கானுடைய ஓவியமும்,1567 ஆம் ஆண்டு சித்தூர் கோட்டை வீழ்ந்த ஒவியமும், அக்பர் காலத்தில் பீர்பால் இல்லத்தில் பாதர் அக்வாவிவாவும் பாதர் ஹென்ரிக்சும் உள்ள ஓவியம், ஜஹாங்கீர் காலத்தில் தந்தையின் ஓவியத்தை ஏந்தியடி உள்ள ஒவியம், ஜஹாங்கீரின் ஆஸ்தான ஓவியர் வரைந்த வல்லூறு, வான்கோழி, அக்பரை நேரிடையாக பார்த்தபடி உள்ள ஒவியம், விண்வெளியிலிருந்து ச+டாக வந்து எரிந்து விழுந்த எரிகல்லைச் செதுக்கி வாளின் கைப்பிடியாகப் பொருத்திக் கொள்ளுகிறார். பாதுசா, மலைப்பாம்பின் வயிற்றில் பாதி ஜீரணமாகிய நிலையில் முயல் இருக்க, பாம்பின் வயிறு பிளக்கப்பட்டு அது ஓவியமாக வரையப்பட்டது. அதே போல நூர்ஜஹான் ஓவியம், ஜஹாங்கிரின் பிரதம ஓவியர் அபுல்ஹசன் பாரசீக மன்னர் ஷா அப்பாஸ் ஐ கட்டித்தழுவியபடியுள்ள ஓவியம், ஜஹாங்கீரும், ஷாஜகானும் உள்ள ஒவியம், ரம்ஜான் பண்டிகையில் ஜஹாங்கீரின் நிலை, ஷாஜஹானுடைய இருபத்தி ஐந்தாவது வயதுள்ள ஓவியத்தை ஆஸ்தான ஓவியர் அபுல்ஹசன் வரைந்துள்ளார். அதில் ஷாஜஹான் கையெழுத்திட்டுள்ளார். ஷாஜகானுடைய மகன் தாராவுடன் ஆலோசனை செய்யும் ஓவியம் என பல ஓவியங்கள் இன்றும் அழியாமல் உள்ளது.
வரலாற்று காலச்சுவர் ஓவியங்கள்
தமிழகத்தில் பல்லவர் முதல் பாண்டியர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை செவ்வியலாக்கம் பெற்ற சுவர் ஓவியங்கள் அரண்மனைகள், மாளிகைகள் கோவில்கள் உள்ளிட்டவற்றில் முகாமையான இடத்தை வகித்தன. அவற்றுள் இன்றும் எஞ்சிநிற்பவை கோவில் சுவர்களை அணி செய்யும் சுவர் ஓவியங்கள் மட்டுமே.
தஞ்சாவ+ர் தட்டு
தஞ்சாவ+ர் தட்டு மிகவும் பிரபலமானவை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் போன்ற சமயம் தொடர்பான கோயில் மற்றும் மதகுருமார்கள் உருவங்களை பதிவு செய்து தயார் செய்கிறார்கள். இது சமயத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது. இவ்வாறு மதம் தொடர்பான கலைத்தட்டுக்கள் வீட்டில் ப+ஜை அறையில் வைத்து கடவுளை வழிபடுவது வழிபாடுகளின் வெளிப்பாடே ஆகும். கலைத்தட்டினை ப+ஜை அறையில் வைக்கும்போது அதனை தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர். இதுபோன்ற கலைத்தட்டுக்கள் பொறிக்கப்படுகின்ற தெய்வ உருவங்களும், கோயில்களும் ஒரு சமூகத்தினரை ஒற்றுமைப் படுத்துவற்காகவும் சமுதாய சிந்தனைகளை நினைவு படுத்துவதாகவும் அமைகின்றது.
செட்டிநாடு ஓவியங்கள்
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்கள் வாழும் இல்லங்களை இறைவன் வாழும் கோயிலாகக் கருதி கலை வேலைப்பாடுகளைக் கொண்டு அலங்கரித்துள்ளனர். பைன் ஆர்ட்ஸ் பிரிவுகளான ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை ஆகிய மூன்றையும் வளரச்செய்தனர். 19 ஆம் நூற்றாண்டில் திராவிடக்கலை வளர்ச்சிக்கும் இந்தியக் கலை வளர்ச்சிக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் தொண்டு மிக முக்கியமானது. நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் ஒன்று வைரவன்பட்டி. இங்குள்ள சிவத் தலத்தின் பல இடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப் பிரகார விதானத்தில் உள்ள ஒவியங்கள், கந்தபுராணம், இராமாயணம், தலபுராணம் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் கி.பி.18-ஆம் நூற்றாண்டுக் கலையை ஒத்துள்ளது. இவ் ஓவியங்களில் கந்தபுராணக் காட்சி ஒன்றில் ச+ரன் அந்தப் புரத்தில் தன் மனைவியுடன் அமர்ந்திருக்கும் காட்சி உள்ளது. 1834 ஆம் ஆண்டு கல்கத்தாவிலும், பின்னர் சென்னை, மும்பை ஆகிய இடங்களிலும் மேற்கத்தியக் கலைப்பள்ளிகள் ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டன. எனினும் அதற்கு முன்பாக இந்தியாவிலும், தமிழகத்திலும் குறிப்பாக செட்டி நாட்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் ;தாக்கம் உணரப்பட்டுவிட்டது என்பதற்கு வைரவன்பட்டி புராண ஓவியங்களும் ;சராசனிக்கலை உணரப்பட்டுவிட்டது என்பதற்கு அரிமழம், சிறுகூடற்பட்டி ஓவியங்களும் சான்றுகளாக உள்ளன. செட்டி நாடு கட்டடக்கலை என்பது கிரேக்க-சராசனிக் திராவிடக் கட்டக் கலப்பு என்பது தெளிவாக உணரப்படுகிறது.
சித்திரமாடம்
பண்டைய கால மன்னர்கள் தங்களுடைய அரண்மனையில் சித்திரமாடம் என்ற பகுதியை நிறுவி இருப்பார்கள். சித்திரமாடம் என்பது ஒரு தற்காப்பு உத்தியாகும். அங்கு இடம் பெறும் சித்திரங்கள் வெளியார் அறியாத வாயில்களாகவே அமையும் தன்மை உடையது. அண்டை நாட்டார் தாக்குதலின்போது ஆள்வோர் உயிர்தப்பி பிழைப்பதற்கு உண்டாக்கப்பட்டது. சித்திரமாடம் கலைநுட்பத்துடன் திகழ்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள கூளப்ப நாயக்கர் அரண்மனையில் இன்றும் சித்திரமாடம் உள்ளது.
சித்தன்ன வாசல் சுதை ஓவியம்
அஜந்தா பௌத்தர் உடைய தலம், சித்தன்ன வாசல் சமணர் தலம், பெருவுடையார் கோயில் இந்துவுடைய தலம் ஆகும். கி.மு.1750 ஆம் ஆண்டு கிரிட் தீவில் சுதை ஓவியக்கலையை கலைஞர்கள் அறிந்திருக்கின்றனர். கிரீட், பாரசீகம், அஜந்தா மற்றும் தமிழகத்தின் சித்தன்னவாசல், தஞ்சை பெரியகோயில், இலங்கை சிகிரியா இவையெல்லாம் அஜந்தாவின் வழிவந்தவை.
பலரும் சுதை ஓவியங்கள் என சித்தன்ன வாசல் ஒவியத்தை குறிப்பிடுகிறார்கள். இவ்வகை ஓவியங்கள் தளம் சமன்படுத்தப்பட்டு ஈரம் உலரா முன்பு ஈரத்தின் மீதே படம் தீட்டுவதாம். அஜந்தா ஒவியம் தளம் உலர்ந்த பிறகு தீட்டப்பட்டவை.
சித்திரக்கார தெரு
மதுரையில் கீpழ மாசி வீதிக்குப் பக்கத்தில் தேர் முட்டி இருக்கும் இடத்தின் கீழ்புறம் செல்லும் சந்தின்; வழியாக சென்றால் சித்திரக்காரத்தெருவை காணலாம்.
பொதுவாக மதுரை நகர மக்களுக்கு சித்திரம் எழுதுவது, சித்திரங்கள் வரையது, சித்திரங்களை ரசிப்பது என்பது குருதியுடன் கலந்த பண்பாட்டு அம்சமாகும். மதுரையில் சித்திரமாடம் என்ற அரண்மனை ஒன்றிலிருந்து அழிந்து போயிருக்கிறது. நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர் அரண்மனையில் சித்திரமாடம் இன்றும் உள்ளது.
கடைச்சங்க காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் நன்றாமன் என்ற பெயருடன் வாழ்ந்து வந்தான். இவனுக்கு சித்திரமாடத்தில் துஞ்சிய நன்மாறன் என்ற பட்டப்பெயரும் உண்டு. அதாவது சித்திரங்கள் வரைந்து அழகு செய்யப்பட்ட அரண்மனை ஒன்றில் இறந்து போனான் என்பது பொருள். மதுரையில் வாழ்ந்த சித்திரம் தீட்டுபவர்களை சங்க இலக்கியத்தின் மதுரைக்காஞ்சியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞரும்
என்கிறது.
எதையும் தன்னுடைய கண்களால் நோக்கி வரைந்து பிறருடைய கண்ணுக்கும் விருந்தாக்குவதால் கண்ணுள் வினைஞர் என்கிறது மதுரைக்காஞ்சி.இத்தகைய ஓவியத் தொழில் வல்லுநர்களான சித்திரக்காரர்கள் ஒருங்கே வளர்ந்த பகுதிதான் சித்திரக்காரத்தெரு. மேலுமம் மதுரையில் நாயக்க மன்னர்களின் காலத்தில் பலிஜா மற்றும் கவுரா நாயுடு என இரண்டு பிரிவினர் இருந்தனர். இவர்கள் ஓவியம் வரைவதில் நிபுணர்கள். இந்த ஓவியர்களான சித்திரக்காரர்கள் ஒன்றாக குடியேறி மதுரையில் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தனர். மன்னர் திருமலைநாயக்கர் அரண்மனைக்குப் பக்கத்தில் மன்னர் குடியமர்த்தினார். இதனால் சித்திரக்காரத்தெரு எனப்பெயர் பெற்றது. லண்டனில் விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் மிய+சியம் எனப்படும் அருங்காட்சியகத்தில் மதுரை பற்றிய ஓவியம் ஒன்று உள்ளது. அவ்வோவியத்தில் மீனாட்சிஅம்மன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்று ஒவியமாகத்; தீட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது மதுரைக்கு கிடைத்த பெருமை.
இவ்வளவு பெருமை வாய்ந்த ஓவியமும், ஒவியர்களும் தமிழகத்தில் இருந்துள்ளனர். ஆனால் விஞ்ஞான யுகத்தில் பிளக்ஸ்போர்டு வருகையை முன்னிட்டு ஓவியர்களுக்கு வேலை இல்லாமல் போனது. விளைவு நமது பாரம்பரிய ஓவியங்கள் கால ஓட்டத்தால் கரைந்து வருகிறது. அரசு ஓவியர்களை ஊக்கப்படுத்தி ஓவியத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602
செல்:9715-795795

Series Navigationவைரமணிக் கதைகள் -6 ஈரம்தொடரகம் – நானும் காடும்
author

Similar Posts

Comments

 1. Avatar
  ஷாலி says:

  “பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை” என்ற ஒரு தலைப்பைக் கொடுத்து ஓவியத்தைப் பற்றி ஆதியோட அந்தமாய் விவரணப் படம் காட்டுகிறார் கட்டுரையாளர் வைகை அனிஷ்.

  பிளக்ஸ் போர்டல் நடந்த தீமைகள் பற்றி ஒரு வரி கூட கட்டுரையில் இல்லை.இறுதியில் இப்படி முடிக்கிறார்.
  // விஞ்ஞான யுகத்தில் பிளக்ஸ்போர்டு வருகையை முன்னிட்டு ஓவியர்களுக்கு வேலை இல்லாமல் போனது. விளைவு நமது பாரம்பரிய ஓவியங்கள் கால ஓட்டத்தால் கரைந்து வருகிறது.//

  பிளக்ஸ் போர்டுகள் விளம்பரத் தன்மைகள் கொண்டவை.இவைகளை யாரும் கலை பண்பாட்டு பாரம்பரியத்தில் சேர்க்கப் போவதில்லை.மனிதன் கையினால் வரையும் கலையுணர்வு ஓவியத்தின் மதிப்பையும் தேவையையும் பிளக்ஸ் போர்டுகள் என்றும் ஒழிக்க முடியாது.

  இதுபோல் நவீன கம்ப்யூட்டர் கீ போர்ட் இசைக்கருவிகள்,பாரம்பரிய இசைக்கருவிகளை ஒழிக்க முடியாது.ஆனாலும் உருளும் உலகத்தில் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *