தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு – படச்சுருள் (அச்சிதழ்)

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 14 in the series 5 ஏப்ரல் 2015

நண்பர்களே ஏழு ஆண்டுகளாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நேர்த்தியான சினிமாவை நோக்கி களப் பணியாற்றிக்கொண்டே இருக்கிறது. முழுக்க முழுக்க இணையத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளை தமிழ் ஸ்டுடியோ கண்டு உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அச்சு ஊடகத்தில் தமிழ் ஸ்டுடியோ இதுவரை களமிறங்கவில்லை. இந்த ஆண்டு தமிழ் ஸ்டுடியோவில் இருந்து அந்தக் குறையையும் போக்கவிருக்கிறோம். எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திலிருந்து படச்சுருள் என்கிற மாத இதழ் (அச்சில்) வெளிவரவிருக்கிறது. முதல் இதழே தலித் சினிமா பற்றிய சிறப்பிதழாக வெளிவரவிருக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் இந்த புதிய முன்னெடுப்பிற்கு நண்பர்கள் எப்போதும் போல் பேராதரவு கொடுக்க வேண்டும். தொடக்கத்திலேயே ஆயிரம் சந்தா இருந்தால்தான் இதழை தொடர்ச்சியாக நடத்த முடியும். எனவே நல்ல சினிமாவின் மீது அக்கரைக்கொண்ட அத்தனை நண்பர்களும் படச்சுருள் இதழுக்கு சந்தா செலுத்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சந்த விபரங்களை கீழே கொடுத்துள்ளேன்.

படச்சுருள் வருட சந்தா: 250/-

ஆயுள் சந்தா: 15000/-

புரவலர் சந்தா: 25000/-

வருட சந்தா 250 ரூபாய்தான். எனவே யாரும் பெரிய தொகையாக கருத முடியாது. மிக மோசமான பொருளாதார சூழலில் இருக்கும் நண்பர் கூட படச்சுருளுக்கான சந்தாவை செலுத்தலாம். இது அத்தனை எளிதான தொகைதான். பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கும் ஆயுள் சந்தா அல்லது புரவலர் சந்தாவை செலுத்தலாம். இவைகள் இன்றி விளம்பரங்கள் கொடுக்க விரும்பும் நண்பர்களும் தொடர்பு கொள்ளலாம்.

சந்தாவை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு விபரங்கள்:

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: PADACHURUL

வங்கிக்கணக்கு எண்: 035005500700

வங்கி பெயர் & கிளை: ICICI Bank, Adyar Branch

IFSC Code: ICIC0000350

சந்த செலுத்தியதும் மறக்காமல் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி, அலைப்பேசி எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பி விடுங்கள்.

நண்பர்கள் இந்த தகவலை எல்லாருக்கும் பகிர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன்.

Series Navigation‘சார்த்தானின் மைந்தன்’வெட்டிப்பய
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *