ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட்
(ஐபி டைம்ஸ்)
சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது.
பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி அரேபியாவில் உருவான எதிர்ப்பு போராட்டங்களும், வெள்ளிக்கிழமையில் “ஆத்திரநாள்” என்று போராட்டம் துவக்கப்பட்டதும், சவுதி அரேபிய அரசாங்கம், அவரை மார்ச் 2011 இல் விடுதலை செய்தது. ஷேக் டாஃபிக் அல் அமெர் என்ற இந்த மதகுரு பெயரளவுக்கான மன்னராட்சியாக இன்றைய எதேச்சதிகார மன்னராட்சி மாறவேண்டும் என்றும், மக்களிடம் அதிகாரத்தை ஒப்புவிக்க வேண்டும் என்றும் கோரியதற்காக சென்ற மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் ஷியாக்களும் சுன்னிகளும் சமமாக இந்த சவுதி அரேபிய அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியதாக கூறப்படுகிறது.
பஹ்ரேன், எகிப்து, துனிசியா, லிபியா போன்ற நாடுகளில் சர்வாதிகாரங்களுக்கு எதிராக உருவான மக்கள் போராட்டங்கள் “அரபு வசந்தம்” என்று அழைக்கப்பட்டன. இது உலக மக்களுக்கு இந்த போராட்டங்களை அறிமுகம் செய்தது. ஆனால், உலகத்தின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளரான சவுதி அரேபியாவில் 2011இல் நடந்த போராட்டங்கள் உலகமக்களால் அதிக கவனத்துக்குள்ளாகவில்லை.
மார்ச் 2011 ல், ஷியா ஆயிரக்கணக்கான ஒரு வன்முறைத் சந்தித்தார் ஒரு எழுச்சியில், நிராயுதபாணியாக மீது கைதுகள் மற்றும் பொலிஸ் துப்பாக்கி சூடு நிகழ்வுகளில் அலை தொடங்கி, பாரபட்சம் மற்றும் மத மற்றும் அரசியல் பல தசாப்தங்களின் அடக்குமுறை ஆர்ப்பாட்டம் செய்ய Qatif, சவுதி அரேபியா, வீதிகளில் இறங்கினர் எதிர்ப்பாளர்கள்.
சவுதி அரேபியாவில் ஷியா பிரிவினருக்கு எதிராக பல்லாண்டுகளாக நிறுவனப்படுத்தப்பட்ட பாரபட்சத்துக்கு எதிராகவும், மத மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், 2011இல், சவுதி அரேபியாவில் காடிஃப் நகரத்தின் தெருக்களில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லீம் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டம், அரசு வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டது. நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்தது. ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
சவுதி அரேபியா யேமனில் உள்ள ஷியா பிரிவு ஹூதி போராளிகள் மீது நடத்தும் போரினால், ஷியா பிரிவினர் தூண்டப்படுவார்கள் என்று அஞ்சிய சவுதி அரேபியாவால், 27 பேர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், 250க்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று ஷியா பிரிவு தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.
சவுதி அரேபியாவில் 2.7 சதவீதத்தினர் ஷியா பிரிவினர். இவர்கள் நாட்டில் 12 சதவீதத்தினராக உள்ளார்கள். சவுதி அரேபியாவின் அல் அஹ்ஸா, அல் கத்திஃப் மாவட்டங்களில் வசிக்கிறார்கள். இந்த இடங்களே சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத்தின் பெரும்பான்மை உள்ள இடங்கள். சவுதி அரேபியாவின் சுன்னி மன்னராட்சியின் முக்கிய கொள்கையான வஹாபிஸத்தின் படி, ஷியா பிரிவினர் காபிர்களாகவும், ஈரானின் ஏஜெண்டுகளாகவும் பார்க்கப்படுகிறார்கள்.
மனித உரிமை கண்காணிப்பகம், 2009இல் வெளியிட்ட அறிக்கையில். சவுதி ஷியா பிரிவினர் மீது பரவலான பாரபட்சமும், அரசாங்க கல்வி அமைப்பில் பெரும் கட்டுப்பாடுகளும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியது. ஷியா பிரிவினர் அவர்களது மதத்தை பற்றி அறிவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்றும், இவர்கள் சுன்னி தலைவர்களால் காபிர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியது.
மேலும், நீதிபதிகள், வழக்குகளில், ஷியா பிரிவு சாட்சியங்களை அவர்களது மதப்பிரிவு காரணமாக தடை செய்கிறார்கள் என்றும் ஷியாக்கள் அரசாங்கத்திலோ அல்லது ராணுவத்திலோ சேர்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்றும் கூறியது.
போராட்டதின்போது ஷியா பிரிவு போராட்டக்காரர்கள் குழுமுகிறார்கள்.
கட்டிஃப் நகரத்தில் மார்ச் 9, 2011இல் போராட்டக்காரர்கள் குழுமுகிறார்கள். சவுதி ஷியாக்கள் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் சிறிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஷியா பிரிவு கைதிகளை எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்து வைத்திருப்பதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரியும் நூற்றுக்கணக்கான ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
வஹாபி கொள்கை மூலமாகவே ஷியா குடிமக்களை சவுதி அரசாங்கம் வெகுகாலமாக பார்த்துவருகிறது. இவர்களை காபிர்கள் என்றும், இவர்களது தேசபக்தியை சந்தேகமாகவும் பார்த்துவருகிறது என்று சாரா லீ விட்சன் என்ற மனித உரிமை கண்காணிப்பகத்தின் டைரக்டர் கூறினார்.
இந்த மாதிரியான சூழ்நிலைகளே 2011இல் ஷியா போராட்டங்களுக்கு இட்டுச் சென்றன. இது 2012இல் தொடர்ந்ததால் மேலும் 20 போராட்டக்காரர்கள் இறப்பதற்கும் காரணமாயிற்று.
ஷேக் நிம்ர் அல் நிம்ர் என்னும் முக்கியமான ஷியா ஆர்வலர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். பயங்கரவாதி என்றும், “கடவுளின் மீது போர் தொடுத்தார்” என்றும் இவரை குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
சவுதிகள் அடக்குமுறைக்கு முன்பாக அந்த இடத்துக்கு செல்லும் வழிகளை அடைத்துவிடுவதாலும், அந்த விஷயங்கள் எங்கேயும் கசியக்கூடாது என்று முயற்சி எடுப்பதாலும், யுடியூப் போன்ற சில விஷயங்கள் மூலம் வெளியே செய்திகள் கசிகின்றன. இந்த வீடியோக்களில் நூற்றுக்கணக்கான ஷியாக்கள் பலகைகள் எடுத்துகொண்டு ஊர்வலம் போவதையும், சவுதி அரேபிய மன்னராட்சிக்கு எதிராக கோஷங்கள் இடப்படுவதையும், அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் கோஷங்கள் எழுதப்படுவதையும் காணமுடிகிறது.
“இது வெறுப்பின் மொழி. இது போரினால் இன்னும் மோசமடைகிறது” என்று ஜாபர் அல் ஷாயெப் என்னும் ஷியா அரசியல்வாதி கூறுகிறார்.
சுவர்களில் எழுதப்பட்ட கோஷங்கள் 2014இலும் இருக்கின்றன என்று மனித உரிமை ஆர்வலர் ஆதம் கூகுள் கூறுகிறார். அரபு வசந்தத்தின் தொடர்பாக எழுந்த போராட்டங்கள் கைதுகளாலும், சிறை தண்டனைகளாலும் அடக்கப்பட்டதாக இருந்தாலும், சவுதி அரேபியாவின் ஷியா பிரிவினரின் நிலை முன்னைப்போலவே மோசமாகவே இருக்கிறது என்று கூறினார்.
“2011இலிருந்து மோசமான நிலையே இருக்கிறது. பாரபட்சத்தை நீக்கும்படி கோரிய ஷியா பிரிவினரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. சொல்லப்போனால் இன்னும் மோசமடைந்திருக்கிறது” என்கிறார்.
சவுதி அரேபியா சமீபத்தில் “பயங்கரவாத குற்றங்களை” விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கியிருக்கிறது. இதுவரை ஏராளமான போராட்டக்காரர்களையும் பத்திரிக்கையாளர்களையும் நீண்ட சிறைத்தண்டனைக்கு அனுப்பியிருக்கிறது. சென்ற வருடம், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் வேலை செய்த ஒருவர் 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அரசின் சட்டங்களுக்கு எதிராக பேசுவது இப்போது பயங்கரவாத குற்றம்.
இப்போது சவுதி அரேபியா ஏமனுக்கு எதிராக போரில் இறங்கியிருப்பதாலேயே, இப்போது ஷியா பிரிவினர் போராட்டத்தில் இறங்காமல் இருக்கிறார்கள். ஏனெனில், ஈரான் யேமனின் ஹூதி போராளிகளுக்கு உதவுவதாக சவுதி அரேபியா கூறுவதால், அதனை முகாந்திரமாக வைத்துகொண்டு ஷியா பிரிவினர் மீது இன்னும் பாரபட்சத்தையும் அடக்குமுறையையும் ஏவும் என்று இவர்கள் அஞ்சுகிறார்கள்.
கடிஃப் மாகாணத்தில்,அல் அவாமியா நகரில் ஞாயிறன்று நடந்த சிறு சண்டையில் ஒரு சவுதி அரேபிய போலீஸ்காரர் மரணமடைந்தார். இது கிழக்கு பகுதியில் புதிய போராட்டம் உருவாகிறது என்று சந்தேகிக்க வைத்தது. ஆனால், ஜாபர் அல் ஷாயப் என்னும் காடிஃப் முனிசிபர் கவுன்ஸில் உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர், இந்த நிகழ்ச்சிக்கும் யேமனில் நடக்கும் போருக்கும் சம்பந்தமில்லை என்றும், மனித உரிமைகள் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.
ஹூதி போராளிகளுக்கு எதிராக நடக்கும் சவுதி போரினால், சவுதி ஷியா பிரிவினர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதை அவர் தெளிவாகவே எடுத்துரைத்தார். நவம்பர் 2014இல் அல் அஹ்சா நகரில் உள்ள ஷியா பிரிவினர் மசூதியில் நடந்த தாக்குதலில் தொழச்சென்ற எட்டு ஷியா பிரிவினர் கொல்லப்பட்டார்கள். மேலும் இந்த சமயத்தில் வஹாபி பேச்சாளர்களின் ஷியாக்களுக்கு எதிரான வன்முறை பேச்சு அதிகரித்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டார்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற (சுன்னி வஹாபி) அமைப்புக்கு எதிராக ஷியா போராளிகள் நடத்தும் போர் சவுதி அரேபியாவிலும் எதிரொலிக்கிறது என்று இவர் கூறுகிறார்.
“அல் அஹ்ஸாவில் நடந்த மசூதி தாக்குதல் இந்த மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் வகுப்புவாத போரின் விளைவுதான். போரின் காரணமாக வெறுப்பு உரைகள் அதிகரித்துவருகின்றன” என்று இவர் கூறுகிறார்.
சானாவில் ஷியா முஸ்லீம் போராளிகள்
மார்ச் 26, 2015 அன்று, சவுதி அரேபியாவின் தாக்குதல்களுக்கு எதிராக சானா பகுதியில் நடந்த ஊர்வலத்தில் ஷியா முஸ்லீம் போராளிகள் தங்கள் ஆயுதங்களை தூக்கி காட்டுகிறார்கள். சவுதி அரேபியாவிலிருந்து வரும் போர் விமானங்கள் யேமனின் ஜனாதிபதியை துரத்த விழைந்த ஷியா முஸ்லீம் போராளிகளை தாக்கின. இது அமெரிக்காவின் ஆதரவோடு, ஈரான் ஆதரவை அரேபிய தீபகற்பத்தில் குறைக்க உலகத்தின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளரான சவுதி அரேபியா இறங்கிய போர்.
இந்த ஷியா பிரிவினர் இந்த யேமன் போரை விரும்பாமல் இருந்தாலும், கடந்த 4 வருடங்களாக ஷியா பிரிவினர் மீது சவுதி அரசாங்கம் தொடுத்துள்ள நடவடிக்கைகளால், இந்த ஷியா பிரிவினர் அரசாங்கத்துக்கு எதிராக தெருக்களில் இறங்க தைரியமில்லாமல் இருக்கிறார்கள் என்று அல் ஷையப் கூறுகிறார்
“மூன்று வருடங்களுக்கு முன்பு உணர்ந்ததை போல இன்று மக்கள் உணரவில்லை. போராடியதால் ஒரு பயனும் இல்லை என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதை பெற இங்கே இருக்கும் லோக்கல் ஆட்களோடு உறவு வைத்திருப்பதே, போலீஸுடன் மோதுவதை விட உகந்தது என்று உணர தலைப்பட்டிருக்கிறார்கள்” என்று அல் ஷையப் கூறினார்.
போராட்டங்கள் இறந்துவிட்டாலும், சவுதி ஷியா பிரிவினர் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கொண்டேதான் இருப்பார்கள் என்று கூறினார். “மக்களுக்கு குறைகள் இருக்கின்றன. சகிப்புத்தன்மையையும், சமத்துவத்தையும் அரசாங்கத்திடமிருந்து பெறும் வரைஅவர்கள் எந்த வழியிலாவது குரலெழுப்பிக்கொண்டேதான் இருப்பார்கள்” என்று கூறுகிறார்.
சவுதி அரேபியாவின் ராணுவ பலம் ஷியாக்களை தெருக்களில் இறங்கி போராடுவதை தடுக்கும் என்று சவுதி ஷியா பிரிவினரை பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கும் டோபி மத்தீசன் என்னும் காம்ப்ரிட்ஜ் பல்கலையின் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
“சவுதி அரேபியாவின் உள்ளே வகுப்புவாத உறவுகளுக்கு இந்த போர் நல்லதல்ல. ஆனால் இது புதிய போராட்டங்களை உருவாக்குமா? நான் அப்படி நினைக்கவில்லை” என்று கூறினார்.
“அடிப்படையில் இந்த மக்களுக்கு தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்று தெரியும். நாட்டின் மற்ற பகுதிகளின் மக்களிடமிருந்து ஆதரவில்லை. இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. ராணுவம் வலிமையாக ஒருங்கிணைந்துள்ளது. அவாமியா அவ்வளவு ஒன்றும் பெரிய இடமில்லை. பெரிய போராட்டங்கள் உருவானாலும், சவுதிகள் இதனை நசுக்கிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை”
- ஏமாற்றம்
- கிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது
- மணல்வெளி மான்கள் – 1
- மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்
- ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…
- இடைத் தேர்தல்
- சாவு விருந்து
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு
- மிதிலாவிலாஸ்-19
- தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி
- மூன்று குறுங்கதைகள்
- நெருடல்
- “ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”
- முழுக்கு
- பல்லக்கு
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…
- சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா
- கடந்து செல்லும் பெண்
- மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா
- அந்தக் காலத்தில்
- வயசு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6
- கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
- சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”
- சும்மா ஊதுங்க பாஸ் – 2