This entry is part 10 of 19 in the series 24 மே 2015

 

கருத்து அதிகாரம்

எது? எதில்?

 

நூறு பேர் சபையில்

நாலு பேர்

 

மேடைக்கு அழைக்கப் படுவதில்

அவருக்குள்

ஒலிவாங்கி வசப்படும்

வரிசையில்

 

இறுதிச் சொற்பொழிவு

இவரது என்பதில்

 

கருத்துச் சுதந்திரக்

கனவு வெளியில் ஒரு

தீவு

கருத்து அதிகார

பீடம்

 

ஒலிபெருக்கிகள் ஓய்ந்து

கரவொலி உரிமை

மட்டுமுள்ளோர்

கருத்து அதிகாரப் பேச்சாளர்

யாவரும் வெளியேற

 

வெற்றிட அரங்கம்

தோற்றம் மட்டுமே

 

அங்கே எங்கும்

வியாபித்திருக்கும்

சபைக்கு வரமுடியாத

கேள்விகள்

 

 

Series Navigationஅந்தப் புள்ளிஎழுத நிறைய இருக்கிறது