சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3

author
1
4 minutes, 41 seconds Read
This entry is part 12 of 21 in the series 31 மே 2015

என் செல்வராஜ்

பல சிறுகதை தொகுப்புக்களையும் அதில் உள்ள கதைகள் பற்றியும் இதுவரை பார்த்தோம். இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. தமிழ்மகன் தொகுத்த தமிழ் சிறுகதைக் களஞ்சியம், விழி பா இதயவேந்தன் தொகுத்த தலித் சிறுகதைகள், சிவகாமி தொகுத்த தலித் சிறுகதை தொகுப்பு, பிரபஞ்சன்,பாரதிவசந்தன் தொகுத்த 20 ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள், உதயகண்ணன் தொகுத்த வானவில் கூட்டம் (உலகத் தமிழர் கதைகள்), ஷங்கரநாராயணன் தொகுத்த யானைச்சவாரி, ஜுகல் பந்தி, அமிர்தம்-2 தொகுதிகள், கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த காஃபிர்களின் கதைகள், அழியாத கோலங்கள், 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள், வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் ( பெண் எழுத்தாளர்களின் கதைகள்),
“பெண்ணியக் கதைகள்”,”தமிழ் சிறுகதைக் களஞ்சியம் ” தொகுதி -1,
” இந்த நூற்றாண்டு சிறுகதைகள்- 3 “” மதுரைச்சிறுகதைகள் ” “கோணல்கள்”
“தஞ்சைக் கதைக் களஞ்சியம் ” “சிறந்த தமிழ் சிறுகதைகள் ” “20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள்” “அன்று ” ” பனியும் பனையும்” “ கரிசல் கருதுகள் ”
“வேர்மூலம்”” அன்புடன் ” ” இருள் விலகும் கதைகள்” ” மெல்ல விலகும் பனித்திரை ” “ பாதரஸ ஓநாய்களின் தனிமை “” மழை சார்ந்த வீடு ” இன்னும் பல தொகுப்புக்களையும் , எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் பார்க்கலாம்.

” தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் (1900-2010)” என்ற தொகுப்பை தமிழ்மகன் தொகுத்து விகடன் வெளியிட்டுள்ளது. 2013 ல் இது வெளிவந்தது.
11 பத்தாண்டுகளாக பிரித்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு எழுத்தாளரின் கதையை சிறந்த கதையாக 11 சிறுகதைகளை தொகுத்து உள்ளார்.

1. சுப்பிரமணிய பாரதியார் – ஆறில் ஒரு பங்கு
2.வ வே சு ஐயர் – குளத்தங்கரை அரசமரம்
3.அ. மாதவையா – சாஸ்தா ப்ரீதி 4.புதுமைப்பித்தன் – பால்வண்னம் பிள்ளை
5. கு அழகிரிசாமி – ராஜா வந்திருக்கிறார் 6. தி ஜானகிராமன் – மறதிக்காக…
7. ஜெயகாந்தன் – அக்னிப்பிரவேசம் 8. சுந்தர ராமசாமி – ரத்னாபாயின் ஆங்கிலம்
9. சுஜாதா – நகரம் 10. ஜெயமோகன் – பத்மவியூகம்
11.எஸ் ராமகிருஷ்ணன் – வேனல்தெரு

சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதைகள் ( தமிழ் சிறுகதைக்களஞ்சியம் நூலில்)

1. புதுமைப்பித்தன் – மனித யந்திரம் 2. கு ப ராஜகோபாலன் – விடியுமா?
3. தி ஜானகிராமன் – சிலிர்ப்பு 4. கு அழகிரிசாமி – அன்பளிப்பு
5. சுந்தர ராமசாமி – பிரசாதம் 6. கிருஷ்ணன் நம்பி- மருமகள் வாக்கு
7. அசோகமித்திரன் – புலிக் கலைஞன் 8. தங்கர் பச்சான் – குடி முந்திரி
9. பிரபஞ்சன் – மீன் 10. கி ராஜநாராயணன் – கதவு
11. திலீப்குமார் – கடிதம் 12.வண்ணநிலவன் – எஸ்தர்
13. ஆ மாதவன் – நாயனம் 14. பாமா – அண்ணாச்சி
15. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும் 16. இரா முருகன் – உத்தராயணம்
17. ஜெயமோகன் – பல்லக்கு 18. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
19. லா ச ராமாமிர்தம் – கொட்டுமேளம்
20. நாஞ்சில் நாடன் -வாக்குப் பொறுக்கிகள்
21. ரா கி ரங்கராஜன் -செய்தி 22. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
23. ராமச்சந்திர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள் 24. சிவசங்கரி – செப்டிக்
25. சோ தருமன் – நசுக்கம் 26. சுந்தர பாண்டியன் – களவு
27. சுஜாதா – மகாபலி 28. சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
29. வண்ணதாசன் – நிலை

கணையாழியின் கடைசி பக்கங்கள் என்னும் நூலில் அவர் குறிப்பிடும் சிறந்த
கதைகள்

1. லா ச ராமாமிர்தம் – யோகம் , கனுக்கள்
2. கு ப ராஜகோபாலன் – பண்ணைச்செங்கான்
3. இந்திரா பார்த்தசாரதி – பிரயாணம்
4. கு அழகிரிசாமி – ராஜா வந்திருக்கிறார்
5. பாவண்ணன் – நேற்று வாழ்ந்தவர்கள் 6. சுஜாதா – நகரம்
7. கோபிகிருஷ்ணன் – கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை
8. இரா முருகன் – முதல் ஆட்டம்
9. வண்ணதாசன் – அழுக்குப் படுகிற இடம்

” கதாவிலாசம் “என்ற நூலில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை தனது அனுபங்களை சார்ந்து விவரிக்கிறார்
எஸ் ராமகிருஷ்ணன்.இந்த நூலை விகடன் வெளியிட்டுள்ளது. இது பல
பதிப்புகளைக் கண்டுள்ளது. இதில் உள்ள 15 கதைகள் அவர் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் என்ற நூலில் இடம் பிடித்துள்ளன. இந்த நூலில் அவர் விவரிக்கும் அந்த 50 சிறந்த சிறுகதைகள்.

1. மௌனி – அழியாச்சுடர் 2.ஆ மாதவன் – வேஷம்
3. மு சுயம்புலிங்கம்- ஒரு திருணையின் பூர்வீகம்
4. தி ஜானகிராமன் – முள் கிரீடம் 5. ஆதவன் – சினிமா முடிந்தபோது
6. அசோகமித்திரன் – புலிக்கலைஞன்
7. ந முத்துசாமி – அப்பாவின் பள்ளிக்கூடம் 8. திலீப்குமார் – தீர்வு
9. கோபிகிருஷ்ணன் – புயல் 10. பூமணி- அடமானம்
11. பி எஸ் ராமையா – நட்சத்திரக்குழந்தைகள் 12. வண்ணதாசன் – கூறல்
13. எம் வி வெங்கட் ராம் – ஏழை 14. கி ராஜநாராயணன் – கதவு
15. பா செயப்பிரகாசம் – கரிசலின் இருள்கள்,16. கு அழகிரிசாமி – சுயரூபம்
17. புதுமைப்பித்தன் – காஞ்சனை 18. வண்ணநிலவன் -எஸ்தர்
19. நகுலன் – எட்டு வயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக்
கவிதையும் 20. ஜி நாகராஜன் – ஆண்மை
21. பாவண்ணன் – அடி 22. மா அரங்கநாதன் – ஏடு தொடங்கல்
23. ச தமிழ்ச்செல்வன் – வாளின் தனிமை 24. நாஞ்சில் நாடன் – கிழிசல்
25. இந்திராபார்த்தசாரதி – தொலைவு 26. கந்தர்வன் – சாசனம்
27. லா ச ராமாமிர்தம் – கிரஹனம் 28.கு ப ராஜகோபாலன் – திரை
29. சா கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள்
30. எஸ் சம்பத் – சாமியார் ஜூவிற்கு போகிறார் 31. சுஜாதா – நகரம்
32. கிருஷ்ணன் நம்பி- எக்ஸெண்டிரிக் 33. கரிச்சான் குஞ்சு – ரத்தசுவை
34. கோணங்கி – கோப்பம்மாள் 35. தமயந்தி – அனல் மின் நிலையங்கள்
36.பிரபஞ்சன் – சிக்கன் பிரியாணியும் ஸ்ரீதேவி சினிமாவும்
37.பிரமிள்- நீலம் 38. நீல பத்மநாபன் – கடிகாரம்
39. தஞ்சை ப்ரகாஷ் – பற்றி எரிந்து விழும் தென்னை மரம்
40. அம்பை – புனர் 41. ந பிச்சமூர்த்தி – கவலை மாடு
42. சுந்தர ராமசாமி – ரத்னாபாயின் ஆங்கிலம் 43. அ முத்துலிங்கம் – துரி
44.ஜெயமோகன் – பத்மவியூகம் 45. சூடாமணி – அந்நியர்கள்
46. வேல ராமமூர்த்தி – இருளப்பசாமியும் 21 கிடாயும்
47. ராஜேந்திரசோழன் – எதிர்பார்ப்புகள் 48. கௌரிசங்கர் – தாக்கம்
49. ஜெயகாந்தன் – மௌனம் ஒரு பாஷை 50. பாரதியார் – கத்திச்சண்டை

” மீதமிருக்கும் சொற்கள் “என்ற தொகுப்பு அ.வெண்ணிலா தொகுத்து அகநி பதிப்பகம் 2015 ஜனவரியில் வெளியிட்டது. இதில் பெண் எழுத்தாளர்களின் சிறந்த கதைகள் ( 1930-2014) கடந்த 75 ஆண்டுகளின்
சிறந்த பெண் எழுத்தாளர்களின் 54 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.

1. வை மு கோதைநாயகி அம்மாள் – காலச்சக்கரம்
2. குகப்பிரியை – பச்சை மோதிரம் 3. கமலா பத்மநாபன் – உபய களத்திரம்
4. குமுதினி – நந்துவின் தம்பி 5. கௌரி அம்மாள் – நீர் ஊற்று
6. எம் எஸ் கமலா – கார்த்திகைச்சீர்
7. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் – தமயந்தி
8. கு ப சேது அம்மாள் – புயல் ஓய்ந்தது
9. சரோஜா ராமமூர்த்தி – முதல் கடிதம்
10. கமலா விருத்தாசலம் – திறந்த ஜன்னல்
11. வசுமதி ராமசாமி – கண் திறந்தது 12. கோமகள் – பால்மணம்
13. அநுத்தமா – திண்ணை 14. ராஜம் கிருஷ்ணன் – தனிமை
15. ஆர் சூடாமணி – நாகலிங்க மரம்
16. ஜி கே பொன்னம்மாள் – யாரை நம்பி வந்தாய் ?
17. லக்ஷ்மி – குழந்தைகள் 18. அம்பை – அம்மா ஒரு கொலை செய்தாள்
19. ருக்மிணி பார்த்தசாரதி – கோகிலா நைட்டிங்கேல்
20. கிருத்திகா – தீராத பிரச்சனை
21, கமலா சடகோபன் – துறவுக்குப் பின்னும்
22. உஷா சுப்ரமணியன் – எனக்கும் ஒரு கதை உண்டு
23. லட்சுமி ரமணன் – சுதந்திரப் பறவை 24. வாஸந்தி – நஞ்சு
25. செண்பகம் ராமசாமி – சரோசாதேவியின் கதை
26. சிவசங்கரி – கழுதை தேய்ந்து 27. காவேரி – எங்கும் வானம்
28. கிருஷாங்கினி – வெள்ளை யானையும் குளிர்பதன பெட்டியும்
29. இந்துமதி – துணி 30. இந்திரபவாநி – நாய்கள்
31. ஜோதிர்லதா கிரிஜா – அம்மாவின் அந்தரங்கம்
32. சிவகாமி – பறவைகள் பறந்தன
33. பிரேமா அருணாச்சலம் – வேறு மனிதர்கள்
34. திலகவதி – நாற்காலியும் நான்கு தலைமுறைகளும்
35. ஆண்டாள் பிரியதர்ஷினி – கழிவு 36. அனுராதா – காளி
37. சாந்தா தத் – எல்லைகள் 38. மாலதி – ஆடிட்டர் கல்யாணமே
39. பாமா – அண்ணாச்சி 40. காஞ்சனா தாமோதரன் – கண்ணி
41. தாமரை – அழித்தலும் காத்தலும்
42. தமயந்தி – மழையும் தொலைவும்
43. உமா மகேஸ்வரி – ரணகள்ளி
44. இந்திரா – வன்ணத்துப் பூச்சிகளின் தேசம்
45. அ வெண்ணிலா – பூமிக்கு சற்று மேலே
46. சு தமிழ்ச்செல்வி – யதார்த்தம்
47. சந்திரா – கட் சொன்ன பிறகும் கேமிரா ஓடிகொண்டிருக்கிறது
48. தமிழ்நதி – நித்திலாவின் புத்தகங்கள்
49. புதிய மாதவி – பாட்டி என்ன சொல்லிவிட்டாள் ?
50. குட்டி ரேவதி – கட்டுவிரியன்
51. கவின்மலர் – இரவில் கரையும் நிழல்கள்
52. பி உஷா தேவி – ஒளிந்து கொள்ள ஓரிடம்
53. உமா ஷக்தி – பயணம்
54. கவிதா சொர்ணவல்லி – நான் அவன் அது

குங்குமம் தோழி வலைத்தளத்தில் ” காலத்தை வென்ற கதைகள்” என்ற தலைப்பில் 35 பெண் எழுத்தாளர்களின் படைப்புக்கள் வெளியாகி உள்ளன. அதில் 31 சிறுகதைகள் உள்ளன. அந்த சிறுகதைகள்…

1. ஆர் சூடாமணி – இறுக மூடிய கதவுகள்
2. ராஜம் கிருஷ்ணன் – தலைமுறைகள்
3. அநுத்தமா – ஒரு சோறு பதம்
4. அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
5. லக்ஷ்மி – தகுந்த தண்டனையா ? 6. அனுராதா ரமணன் – அக்னி
7. திலகவதி – வதம் 8. பூரணி – சாவு , துளசி
9. பா விசாலம் – அடிமைகள்
10. வத்ஸலா – வெறுப்பைத் தந்த வினாடி
11. வாஸந்தி – தேடல் 12. சிவசங்கரி – போணி
13. ஜோதிர்லதா கிரிஜா – நியாயங்கள் மாறும்
14. ஆண்டாள் பிரியதர்ஷிணி -தோஷம்
15.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் – தமயந்தி
16. கமலா பத்மநாபன் – உபய களத்திரம்
17. குமுதினி – நந்துவின் தம்பி
18. கௌரி அம்மாள் – நீர் ஊற்று, 19. எம் எஸ் கமலா – கார்த்திகைச்சீர்
20. குகப்பிரியை – பச்சை மோதிரம்
21. கு ப சேது அம்மாள் – புயல் ஓய்ந்தது
22. சரோஜா ராமமூர்த்தி – முதல் கடிதம்
23. கமலா விருத்தாசலம் – திறந்த ஜன்னல்
24. வசுமதி ராமசாமி – கண் திறந்தது
25. கோமகள்- பால்மணம்
26. ஜி கே பொன்னம்மாள்- யாரை நம்பி வந்தாய்?
27. ருக்மிணி பார்த்தசாரதி – கோகிலா நைட்டிங்கேல்
28. கீதா பென்னட் – அதையும் தாண்டி புனிதமானது
29. எம் ஏ சுசீலா – ஊர்மிளா
30. சரஸ்வதி ராம்நாத் – இதுதான் வாழ்க்கை
31. காவேரி – ஓசைகள்

“பெண்ணியக் கதைகள்” என்ற தொகுப்பை இரா பிரேமா தொகுத்து காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2004 ல் வெளியானது. இதில் 25 பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் 25 கதைகள் உள்ளன. அவை…

1. தனிமை – ராஜம் கிருஷ்ணன்
2. குப்பம்மாவின் பெண்கள்- ஆர் சூடாமணி
3. அம்மாவின் அந்தரங்கம் – ஜோதிர்லதா கிரிஜா
4. கறுப்புக்குதிரை சதுக்கம் – அம்பை
5. மரியா – காவேரி
6. அறிவு ஜீவிகள் காதலிக்கிறார்கள் – உஷா சுப்பிரமணியன்
7. வதம் – திலகவதி 8. விட்டு விடுதலையாகி –எம் ஏ சுசீலா
9. பொன்னுத்தாயி – பாமா 10. வெறுப்பைத் தந்த வினாடி – வத்ஸலா
11. தலை அலங்காரம் – கிருஷாங்கினி
12. விலங்குகளும் ஒரு விலாங்கு மீனும் – தமயந்தி
13. சரஸ்வதி தாரை வார்த்த முப்பத்தி மூன்று வருஷங்கள் – ஆண்டாள்
பிரியதர்ஷினி 14. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
15. பால்கட்டு – அமரந்தா 16. இயக்கம் – அநாமிகா
17. பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் – வெண்ணிலா
18. வலி – அனுராதா 19. காயங்கள் காயலாம் – உ ஜோதி
20. புதிய ஏவாள் – சூ இ குழந்தை 21. யதார்த்தம் – ஷீபா
22.மனிதர்கள்- வைகைச்செல்வி
23. முதலிரவுக்கு அடுத்த நாள்- ராஜேஸ்வரி பாலசுப்ரபிரமணியம்
24. வீடு – காஞ்சனா தாமோதரன்
25. அம்மா ! இது உன் உலகம் – சுமதி ரூபன்

“தலித் சிறுகதைகள்” என்ற தொகுப்பை விழி பா இதயவேந்தன் தொகுத்து காவ்யா பதிப்பகம் 2002 ல் வெளியிட்டுள்ளது . இதில் சிறந்த தலித் சிறுகதைகள் 17 தொகுக்கப்பட்டுள்ளது. அந்த கதைகள்…

1. கடைசிக்காடு – சிவகாமி 2. தழும்பு – சோ தர்மன்
3. நோக்காடு – அபிமானி 4. ஆடுகள்- இந்திரன்
5. எட்டாம் துக்கம் – ரவிக்குமார் 6. உறவு – இமையம்
7. எளக்காரம் – பாமா 8. இருள் கன்னி – அழகிய பெரியவன்
9. ஆசை – விழி பா இதயவேந்தன் 10. சூரி – பாப்லோ அறிவுக்குயில்
11. சகோ “டி” – ப்ரதிபா ஜெயச்சந்திரன்
12. டண்டணக்கு – டனக்கு…டனக்கு – தய் கந்தசாமி
13. பூராசாமி – அன்பாதவன்
14. திருவாளர் எம்மின் வீடு என்னும் கதையும் மேற்படி வீட்டுடனான
உரையாடலும் – ம மதிவண்ணன்
15. ஊர்காளி – ஸ்ரீதர கணேசன் 16. நெருப்பு – உஞ்சை ராசன்
17. மட்ட வெளி – பாரதி வசந்தன்

” தலித் சிறுகதைத் தொகுப்பு ” என்ற தொகுப்பை ப சிவகாமி தொகுத்து சாகித்ய அகாதெமி 2014 ல் வெளியிட்டுள்ளது. இதில் 26 கதைகள் உள்ளன. அந்த கதைகள்…

1. பள்ளத்தெரு , ஆதாரம் – விழி பா இதயவேந்தன்
2. குதிரில் உறங்கும் இருள், செருக்கவரவுக்காரனின் சூரி –
பாப்லோ அறிவுக்குயில்
3. சகோ “டி” , கரசேவை – பிரதிபா ஜெயச்சந்திரன்
4. அரியமலர், ரஹமத்துன்னிசா – ப சிவகாமி
5. டெல்லி நண்பன், போ – ஸ்ரீதர கணேசன்
6. சர்ட்டிபிகேட் , ஒத்த அடி – அன்பாதவன்
7. அவரு எல்லாம் தெரிஞ்சவர், பொன்னம்மை – கோவேத சுவாமிநாதன்
8. ஊர்ச்சோறு , மட்டம் – அபிமானி
9. குறி, மினுக்கட்டாம் பொழுது – அழகிய பெரியவன்
10. அண்ணாச்சி, ஒரு தத்தாவும் எருமையும் – பாமா
11. தேநீரும் உரையாடலும் – குடியரசன்
12. முடிவுறா சாத்யம் – அமிர்தம் சூர்யா
13. போகியும் போச்சி – கௌதம சன்னா
14. கூத்து – வெ வெங்கடாசலம்
15. மண்பாரம் , பொன்னம்மாவின் குடும்பக்கதை – இமயம்

” இந்த நூற்றாண்டு சிறுகதைகள்- 3 ” தொகுப்பு விட்டல் ராவ். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் மூன்றாம் பதிப்பு 2013 ல் வெளியானது. இதில் விட்டல் ராவ் 31 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து இருக்கிறார். இந்த தொகுப்பில் உள்ள கதைகள்.

1. அசோகமித்திரன் – பிரயாணம் 2. சுஜாதா – ஜன்னல்
3. ஐராவதம் – நிலம், நீர் ,ஆகாயம் 4. சா கந்தசாமி – வாள்
5. சார்வாகன் – யானையின் சாவு 6. விட்டல் ராவ் – பன்றி
7. பாலகுமாரன் – சின்ன சின்ன வட்டங்கள் 8. ஆதவன் – லேடி
9. ஜெயகாந்தன் – யுகசந்தி 10. சு சமுத்திரம் – போதும் உங்க உபகாரம்
11. க்ருஷாங்கினி – படம் 12. ஜெயந்தன் – மொட்டை
13. காவேரி – ஏனென்றால் 14. திலகவதி – உயிரின் நிறம்
15. திலீப் குமார் – மூங்கில் குருத்து 16. நாஞ்சில் நாடன் – பாலம்
17. சம்பத் – இடைவெளி 18. வேதபுத்திரன் – ரொட்டி
19. மா அரங்கநாதன் – மகத்தான ஜலதாரை
20. சுப்ரபாரதி மணியன் – ஸ்தலங்கள்
21. வண்ணதாசன் – போர்த்திக்கொள்ளுதல்
22.மா தட்சிணாமூர்த்தி – நினைவுகள், 23. ஆத்மாநாம் – ஒரு தேதி
24.ஜெயமோகன் – தஸ்தாயெவ்ஸ்கியின் முகம்
25. பிச்சுமணி கைவல்யம் – கவிஞர் கமலநாதனின் தற்கொலை
26. சுரேஷ்குமார் இந்திரஜித்- விரித்த கூந்தல் 27. பாரவி – தீனி
28. கோணங்கி – தனுஷ்கோடி 29. கௌரிஷங்கர் – தாக்கம்
30. எம் வி வெங்கட் ராம் – பயித்தியக்காரப்பிள்ளை
31. அனாமிகா – நிறமாலை.

“சிறுகதை மஞ்சரி” என்ற தொகுப்பு 1957 ல் வெளிவந்துள்ளது. இந்த தொகுப்பை மீ ப சோமு தொகுத்து இருக்கிறார். இதில் 17 கதைகள் உள்ளன.

1. மஞ்சள் துணி – தி ஜ ர 2. கலைஞன் தியாகம் – கி வா ஜ
3. தேவானை – ராஜாஜி 4. காசும் பாசமும் – அகிலன்
5. மோகினி – ந பிச்சமூர்த்தி 6. சிருஷ்டிகர்த்தா – சுகி (என் சுப்ரமணியம்)
7. பூவும் நினைவும் – தே ப பெருமாள்
8. அர்ச்சனை ரூபாய் – கு ப ராஜகோபாலன்
9. காலபாசம் – சோமு 10. அன்னையின் அன்பு -தீபன்
11. இரண்டு கதைகள்- துறைவன் 12. சாபவிமோசனம் – புதுமைப்பித்தன்
13. சிலிர்ப்பு – தி ஜானகிராமன் 14. கன்யாகுமாரி – த ந குமாரசாமி
15. அழகி – க நா சுப்ரமண்யம் 16. அன்னை தந்த ஒளி – பெ தூரன்
17. கோழி மிதித்த குஞ்சு – சங்கர்

“தமிழ் சிறுகதைகள்” என்ற தொகுப்பை க நா சுப்ரமனியம் தொகுத்து இருக்கிறார். இதில் 19 கதைகள் உள்ளன. இந்த தொகுப்பு இப்போது கிடைக்கவில்லை. இதில் உள்ள கதைகள் பற்றி வெங்கட் சாமிநாதன்
என் பார்வையில் சில கதைகளும் சில நாவல்களும் என்ற கட்டுரை நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தொகுப்பில் உள்ள கதைகள்

1. காவல்காரன் – ந பிச்சமூர்த்தி
2. முன் தலைமுறை இந்த தலைமுறை – கு ப ராஜகோபாலன்
3. சாபவிமோசனம் – புதுமைபித்தன் 4. அத்துவான வெளி -மௌனி
5. தேடல் – க நா சுப்ரமணியம் 6. மாமியின் வீடு – சி சு செல்லப்பா
7. அம்முலு – லா ச ராமாமிர்தம் 8. கோவில் மணி – தி ஜானகிராமன்
9. திரிவேணி – கு அழகிரிசாமி 10. யார் யாருக்கு உபதேசி – ஜெயகாந்தன்
11. ஜன்னல் – சுந்தர ராமசாமி 12. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்
13. பிரார்த்தனை – இந்திரா பார்த்தசாரதி
14. ஸார் ! ஸார் ! – அசோகமித்திரன்
15. கற்பனை அரண்- ந முத்துசாமி 16. சந்திப்பு – தருமு சிவராம்
17. ஞாபகம் – வண்ணதாசன் 18. உயிர்கள் – சா கந்தசாமி
19. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை

இன்றைய கதை உலகம் -வாழ்க்கையினூடே ஒரு பயணம் என்ற கட்டுரையில் வெங்கட் சாமிநாதன் அவர் “ஸ்ம்காலின் பாரதிய சாகித்ய” பத்திரிக்கைக்காக தொகுத்த தற்கால கதை உலக அறிமுகம் (1999).
அதில் அவர் தொகுத்த கதைகளைக் குறிப்பிட்டு இருக்கிறார்.அவை …

1. சின்னூரில் கொடியேற்றம் – சார்வாகன்
2. காணி நிலம் வேண்டும் – கோபி கிருஷ்ணன்
3. நாஞ்சில் நாடன் – இந்நாட்டு மன்னர் 4. விட்டல் ராவ் – வருகை
5. விமலாதித்த மாமல்லன் – போர்வை
6. திலீப் குமார் – மூங்கில் குருத்து 7. ஆ மாதவன் – கோமதி
8. ஜெயமோகன் – லங்கா தகனம் 9. நசுக்கம் – சோ தர்மன்
10. களவு – சுந்தர பாண்டியன் 11. பாவனைகள்- ச தமிழ் செல்வன்
12. சுப்ர பாரதி மணியன் – வாக்கு 13. கோணங்கி – மதினிமார்கள் கதை
14. ஆர் ராஜேந்திர சோழன் – புற்றிலுறையும் பாம்புகள்
15. பெருமாள் முருகன் – உண்ணிகள் 16. பாவண்ணன் – தர்மம்
17. உதய சங்கர் – அய்யம் பெருமாள் என்றொரு மனிதர்
18. வண்ணநிலவன் – உள்ளும் புறமும் 19. கந்தர்வன் – தராசு
20. மா அரங்க நாதன் – ஆதல்
21. வண்ணதாசன் – ஓர் அருவியும் மூன்று சிரிப்பும்
22. அழகியசிங்கர் – நோயாளிகள்
23. சின்ன மீனும் திமிங்கலமும் – ஐராவதம்
24. இரா முருகன் – உத்தராயணம் 25. ஜில்லு – சுஜாதா

“தமிழ் சிறுகதைக் களஞ்சியம் ” தொகுதி -1 . இந்த தொகுப்பை அ சிதம்பரநாத செட்டியார் தொகுத்து சாகித்ய அகாதெமி 1959 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்

1. அன்னையும் பிதாவும் – சி ராஜகோபாலாச்சாரியார்
2. கேதாரியின் தாயார் – கல்கி
3. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்
4. விடியுமா ? – கு ப ராஜகோபாலன் 5. பூச்சாண்டி – அகிலன்
6. வேதாந்த கேசரி – ஜீவா 7. பனித்திரை – மாயாவி
8. நக்ஷத்திரக் குழந்தைகள் – பி எஸ் ராமையா
9. சுந்தரம்மாவின் ஆவி – தேவன் 10. ஸ்ரீ சைலம் – த நா குமாரசாமி
11. உதயகுமாரி – சோமு 12. மிட்டாய்க்காரன் – கி வா ஜகந்நாதன்
13. கன்னி – ரா கி ரங்கராஜன் 14. நொண்டிக்கிளி – தி ஜ ர
15. துறவி – சுகி 16. ஜனனி – லா சா ராமாமிர்தம்
17. விஜயதசமி – ந பிச்சமூர்த்தி
18. திங்கட்கிழமை – ராஜம் கிருஷ்ணன்
19. கோபுர விளக்கு – தி ஜானகிராமன்
20. கல்லின் கருணை – துறைவன்

” 20 ஆம் நூற்றாண்டு புதுவைக்கதைகள்” – இரண்டு தொகுதிகள் – இவற்றை தொகுத்தவர்கள் – பிரபஞ்சன் மற்றும் பாரதி வசந்தன் . இந்த தொகுப்பை கவிதா பதிப்பகம் 2001 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 28 கதைகள் உள்ளன.

முதல் தொகுதியில் உள்ள கதைகள்

1. புதிய கோணங்கி -அதாவது குடுகுடுப்பைக்காரன் – பாரதியார்
2. குளத்தங்கரை அரசமரம் – வ வே சு ஐயர்
3. கதையும் கம்பாஸிட்டரும் – தமிழ் ஒளி
4. காயும் ஈரம் – தி அமிர்தகணேசன்
5. வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் ? – அவினாசி முருகேசன்
6. கோடித்துணி- காசி வில்லவன்
7. கிரிடம் சூடிய ஓர் உறுப்பு – சஞ்சீவி கோ பொற்கலை
8. நூலிலை நேசம் – காரை ஆடலரசன்
9. சிட்டுக்குருவியும் குஞ்சுகளும் – எஸ் குமாரகிருஷ்ணன்
10. இரவுப்பாடகன் – புதுவை சந்திரகிரி
11. உயிருக்கு விலை – மு சந்திராதேவி
12. விரல் நுனியில் ஒரு சொர்க்கம் – தங்க சிவராசன்
13. பெண்மனம் ஒரு பொன்மணம் – புதுவை தா செல்வராசன்
14. அதே வியாழக்கிழமை – அரிமதி தென்னகன்
15. இயல்புகள் – இரா பகவானந்ததாசன்
16. நெல்லித்தோப்பு – பாவண்ணன்

இரண்டாம் தொகுதியில் உள்ள கதைகள்

1. தம்பலா – பாரதி வசந்தன்
2. காதல் சிறகை காற்றினில் விரித்து – புதுவை நித்திலன்
3. மனசு – பிரபஞ்சன் 4. புயல் – ஹ மு நந்தர்சா
5. அப்பாவின் நண்பர்கள் – எஸ் வசந்தகுமார்
6. காந்திஜிக்கு ஜே – ப முருகேசன்
7. கவிதை உருவாகும் நேரம் – வில்லியனூர் பழனி
8. மனிதர் நோக – ஞானகுமாரன்
9. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன – ரமேஷ் பிரேம்
10. வனஜா – புதுவை ரா ரஜனி 11. ஜெய் ஆஞ்சநேயா – எ மு ராஜன்
12. இளைய பாரதத்தினாய் – கி ராஜநாராயணன்
13. நண்டு பிடிக்கப் போய் – ராஜ்ஜா

” மதுரைச்சிறுகதைகள் ” என்ற தொகுப்பை ஆ பூமிச்செல்வம் தொகுத்து அன்னம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 27 சிறுகதைகள் உள்ளன. இந்த தொகுப்பு ஏப்ரல் 2015 ல் வெளியானது.இதில் உள்ள கதைகள்.

1. சத்யாக்ரகி – சி சு செல்லப்பா 2. மடித்தாள் பட்டி – பி எஸ் ராமையா
3. சம்பாத்யம் – ஜி நாகராஜன் 4. தேன் கலந்த நீர் – காஸ்யபன்
5. வண்டி ஓட வேண்டாமா ? – கர்ணன் 6. பரிணாமம் – கோபி கிருஷ்ணன்
7. புன்கணீர் பூசல் தரும் – செண்பகம் ராமசாமி
8. கல்வெட்டு – ரோஜாகுமார் 9. புழுக்கம் – உஷா தீபன்
10. போதை – முருகேச பாண்டியன் 11. மொய் – அர்ஷியா
12. வைகை பெருகி வர – எம் ஏ சுசீலா
13. மேஷ புராணம் – யுவன் சந்திரசேகர்
14. மூன்றாம் சுமை –எம் எஸ் கல்யாணசுந்தரம்
15. கடந்த காற்று – ஷாஜஹான் 16. புகை – பா வெங்கடேசன்
17. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் – விஜய மகேந்திரன்
18. கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்
19. சுப்பு – லக்ஷ்மி சரவணக்குமார்
20. கடுந்துயரம் – எஸ் செந்தில் குமார்
21. பொன்னகரம் – புதுமைப்பித்தன்
22. நகரம் – சுஜாதா 23. கனவுப்பறவை – சொல்விளங்கும் பெருமாள்
24. 360 பாகையில் சுழலும் இளவரசி இனிப்பக சந்திப்பு – சமயவேல்
25. அந்த மனிதர்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்
26. நகர்வு – பா திருச்செந்தாழை
27. மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் – கோணங்கி

” யானைச்சவாரி” என்ற தொகுப்பு புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் சில சிறுகதைப் பதிவுகளை தொகுப்பாக்கி எஸ். ஷங்கரநாராயணன் தொகுத்து 2001 ல் இருவாட்சி வெளியிட்டு இருக்கிறது.

1. சாரு நிவேதிதா -கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு
முட்டாள் சொல்லிக்கொண்டது
2. களந்தை பீர்முகம்மது -மனவிழி 3. கிருஷாங்கினி – மற்றொன்று
4. அனுராதா ரமணன் – சந்நியாச ரேகை
5. ராஜம் கிருஷ்ணன் – உதிரிகளாகும் உறவுகள்
6. மீ விஸ்வநாதன் – தேர்
7. பாளை கோ மாணிக்கம் – அரசாங்க உயிர்கள்
8. தமிழ் மகன் – ஔவை 2001
9. அ வெண்ணிலா – பூமிக்கு சற்று மேலே
10. கோபிகிருஷ்ணன் – காத்துக் கொண்டிருக்கும் உல்லாசபுரி
11.எஸ் ஷங்கரநாராயணன் – தூங்கு பனிநீரே
12. குடை – அழகிய பெரியவன்
13. ஊஞ்சல் – எம் வி வெங்கட் ராம் 14. மு தளையசிங்கம் – கோட்டை
15. சு வேணுகோபால் – கனவில் வந்த முகமூடிக் கிழவன்
16. அசோகமித்திரன் – சிவகாமியின் மரணம்
17. ஜெயமோகன் – நதிக்கரையில் 18. கந்தர்வன் – கதை தேசம்
19. இரா முருகன் – அரண்மனைக்கதை 20.ஐவேசு – அ முத்துலிங்கம்

“கோணல்கள்” என்ற தொகுப்பு நான்கு எழுத்தாளர்களின் 12 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. இந்த தொகுப்பு 1968 ல் முதல் பதிப்பு வெளியானது. இதன் இரண்டாம் பதிப்பு 1999ல் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பு
பல எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் உள்ள 12 கதைகள்…

1. ம ராஜாராம் – மரக்கப்பல், நட்சத்திரம் கீழே இருக்கிறது ,
புதிய அத்தியாயம்

2. சா கந்தசாமி – உயிர்கள், தேஜ்பூரிலிருந்து , தேடல்

3. நா கிருஷ்ணமூர்த்தி – உதிரும் மலர்கள், மனிதர்கள் ,
காலமெனும் தூரம்

4. ராமகிருஷ்ணன் – சங்கரராமின் நாட்குறிப்பு , கோணல்கள் ,
அவளிடம் சொல்லப் போகிறான்….

“தஞ்சைக் கதைக் களஞ்சியம் ” என்ற தொகுப்பை சோலை சுந்தர பெருமாள் தொகுத்து 2001ல் சிவசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சோலை சுந்தர பெருமாள் ஏற்கனவே தஞ்சை சிறுகதைகள் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார். இதை சிவசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இதில் 51 சிறுகதைகள் உள்ளன. அவை……

1. உ வே சாமிநாதய்யர் – தருமம் தலை காக்கும்
2. குத்தூசி குருசாமி – பிச்சைக்காரி,
3. தி நா சுப்பிரமணியன் – தீராத ஏக்கம்
4. கு ப சேதுஅம்மாள் – குலவதி 5. சௌரி – பூமா
6. முரசொலி மாறன் – காகிதப் படகு
7. இராம அரங்கண்ணல் – உலகம் யாருக்கு ?
8. இளமைப்பித்தன் – ஒரே வழி
9. ஸ்வாமிநாத ஆத்ரேயன் – மாணிக்க வீணை
10. பாரதி பித்தன் – நிறைவு 11. ஜே எம் சாலி – நோன்பு
12. மகரிஷி – நெறி 13. இரா கரியப்பா – உடம்பு
14. சுபாஷ் சந்திர போஸ் – சிவப்பு நாளங்கள் 15. பா சந்திரசேகர் – பசு
16. மானா பாஸ்கரன் – சிற்ப ஓசை 17. திருவாரூர் பாபு – எருமை
18. எஸ் ராஜகுமாரன் – அய்யனார் டாக்கீஸ்
19. திருவாரூர் வி மருதவாணன் – ஜன்னல் ஜனங்கள்
20. ஆழி வே இராமசாமி – கதவுகள் 21. சார்லஸ் – உறவுகள்
22. இராஜகுரு – புது வெள்ளம் 23. அடியார்க்கு நல்லான் – சிறகுகள்
24.இரா இளங்கோ – கிருஷ்ணலீலா
25. பி சி கணேசன் – ஒரு நாயின் சுய சரிதை
26.திருவாரூர் ஜெயகிருஷ்ணன் – மஞ்சள் பதுமையின் கடைசி யுகம்
27. இரா காமராசு – ஊர்த்திருவிழாவும் அரைப்படி நெல்லும்
28. சாருமதி பாஸ்கரன் –தாய்மனசு 29. அரசியன்பன் – குடம்
30. யுகசிற்பி- வலை
31. சிவசுப்பிரமணியன் ஜெயசேகர் – பின் தொடரும் இடைவெளிகள்
32. ஹரணி – அப்பாவின் மரணம்
33. வாய்மைநாதன் – கருணையின் நிறம் காக்கி
34.பட்டுக்கோட்டை ராஜா – மண்குதிரைகள்
35. பட்டுக்கோட்டை ராஜேஷ் – நீ எனக்கு மகளாய்….
36. சாரதா நாகரத்தினம் – கனவுகள் 37. மு சிவகுருநாதன் – மீட்சி
38. பிஸ்மி – உமாகுட்டி
39. கமலா கந்தசாமி – சமூகம் என்பது நாலு பேரல்ல
40. கீரனூர் ஜாகிர்ராஜா – எடுப்பு
41. நன்னிலம் ஜெயசூரியன் -ஒற்றைக்குருவி
42. சத்தியசந்தன் – சகமனிதன் என்பவன்
43. தய்.கந்தசாமி – டண்டனக்கு…டனக்கு…டனக்கு
44. லெக்குமி குமார ஞானதிரவியம் – நானும் நீயும்
45. கிருத்திகா – இந்த பூக்கள் அர்ச்சனைக்கல்ல
46. ஜெ ஜெ காந்தன் – மனிதர்கள்
47. நாகை கவின் – ராணுவக்குதிரை 48. நாகை மாலி – கோழி மிதிச்சி
49. யாதவ நாராயணன் – மாறா அன்பு 50.ச இளம்பிறை – மதில்
51. சிவக்குமார் முத்தையா – ஓடம் போக்கி

“சிறந்த தமிழ் சிறுகதைகள் ” என்ற தொகுப்பை விட்டல் ராவ் தொகுத்து கலைஞன் பதிப்பகம் 2000ல் வெளியிட்டுள்ளது. இதில் 26 சிறுகதைகள் உள்ளன. அவை….

1. கயிற்றரவு – புதுமைப்பித்தன் 2. திரை – கு ப ராஜகோபாலன்
3. மந்த்ரஸ்தாயி – லா சா ராமாமிர்தம் 4. கழுகு – தி ஜானகிராமன்
5. கவலை மாடு – ந பிச்சமூர்த்தி 6. புதிய வார்ப்புகள் – ஜெயகாந்தன்
7. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி
8. இரு நிமிடங்கள் – அசோகமித்திரன் 9. தனிமை கொண்டு – சுஜாதா
10. பப்பாளி மரம் – சா கந்தசாமி 11. பூமாலை – ஆர் சூடாமணி
12.தேர் – எஸ் பொ 13. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
14. அடி – பூமணி 15. அசரீரி – அஜித்ராம் பிரேமிள்
16. பிராந்து – நாஞ்சில் நாடன்
17. காலத்தின் ஆவர்த்தனம் – தோப்பில் முகமது மீரான்
18. வீடு பேறு – மா அரங்கநாதன் 19. சாத்தான் திருவசனம் – ஆ மாதவன்
20. தூர தேசம் – விட்டல் ராவ் 21. தேடல் – வாஸந்தி
22. ஒரு இடந்தேடி – கந்தர்வன்
23. கட்டையும் கடலும் – எஸ் வைத்தீஸ்வரன்
24. ரகசிய ஆண்கள் – எஸ் ராமகிருஷ்ணன்
25. உத்தராயணம் – இரா முருகன் 26. வேட்கை – பெருமாள் முருகன்

20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் என்ற தொகுப்பை சா கந்தசாமி இரண்டு தொகுதிகளாக தொகுத்து கவிதா பதிப்பகம் 1999 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 15 சிறுகதையாசிரியர்களின் ஒரு கட்டுரை, ஒரு நேர்காணல், ஒரு சிறுகதை என்ற வகையில் சிறப்பாக தொகுக்கப்பட்டு உள்ளது.

முதல் தொகுதியில் உள்ள கதைகள்

1. வ வே சு ஐயர் – குளத்தங்கரை அரசமரம்
2. கல்கி – கடிதமும் கண்ணீரும்
3. கு ப ராஜகோபாலன் – விடியுமா ? 4. மௌனி – அழியாச்சுடர்
5. புதுமைப்பித்தன் – ஒரு நாள் கழிந்தது
6. க நா சுப்ரமணியம் – சாவித்திரி
7. தி ஜானகிராமன் – சிலிர்ப்பு 8. கு அழகிரிசாமி – திரிவேணி
9. சுந்தர ராமசாமி – விகாசம்

இரண்டாம் தொகுதியில் உள்ள கதைகள்

1. அசோகமித்திரன் – மாலதி 2. ஜெயகாந்தன் – பிணக்கு
3. நீல பத்மநாபன் – சண்டையும் சமாதானமும்
4. சா கந்தசாமி – முத்து ராஜா பிராது
5. வாஸந்தி – தேடல் 6. பிரபஞ்சன் – அப்பாவின் வேஷ்டி

“அன்று ” என்ற தொகுப்பு 1993 ல் மாலன் தொகுத்து ஓரியண்ட் லாங்க்மென் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பின் தேர்வும் தொகுப்பும் மாலன். இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. இந்த தொகுப்பு 1917 – 1980 காலகட்டத்தின் சிறந்த கதைகளைக் கொண்டுள்ளது.

தொகுதி 1 ல் உள்ள சிறுகதைகள்

1. சுப்ரமணிய பாரதி – காக்காய் பார்லிமெண்ட்
2. வ வே சு ஐயர் – மங்கையர்க்கரசியின் காதல்
3. அ.மாதவையர் – ஏணியேற்ற நிலையம்
4. எஸ் வி வி – டிப்டி கலெக்டர்
5. பி எஸ் ராமையா – நட்சத்திரக் குழந்தைகள்
6. தி ஜ ரங்கநாதன் – திருடனின் லஞ்சம்
7. மௌனி – அழியாச்சுடர் 8. கல்கி – கேதாரியின் தாயார்
9. புதுமைப்பித்தன் – கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
10. கு ப ராஜகோபாலன் – ஆற்றாமை
11. அகிலன் – ஏழைப்பிள்ளையார் 12. விந்தன் – யாருக்குப் பிரதிநிதி
13. சி என் அண்ணாதுரை – தனபால செட்டியார் கம்பெனி
14. கு அழகிரிசாமி – குமாரபுரம் ஸ்டேஷன்
15. லா ச ராமாமிர்தம் – பாற்கடல்

தொகுதி 2 ல் உள்ள சிறுகதைகள்

1. சுந்தர ராமசாமி – வாழ்வும் வசந்தமும்
2. ஜெயகாந்தன் – அக்கினிப்பிரவேசம்
3. ந முத்துசாமி – இழப்பு 4.எம் ஏ நுஃமான் – சதுப்பு நிலம்
5. ஆர் சூடாமணி – நான்காம் ஆசிரமம்
6. ஆதவன் – ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்
7. அசோகமித்திரன் – புலிக்கலைஞன் 8. சிவசங்கரி – வைராக்கியம்
9. வண்ணநிலவன் – கரையும் உருவங்கள்
10. வண்ணதாசன் – ஞாபகம் 11. பூமணி – பொறுப்பு
12. அம்பை – சூரியன் 13. திலீப் குமார் – தீர்வு
14. சுஜாதா – திமலா 15. மாலன் – வித்வான்
16. தி ஜானகிராமன் – பாயசம்

” அன்புடன் ” என்ற தொகுப்பு சுப்ரமண்ய ராஜு நினைவாக மாலன் தொகுத்து இந்தியா டு டே வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் உள்ள கதைகள்

1. வயது பதினைந்து – அம்பை 2. கத்தி – ஆதவன்
3. நம்பிக்கை – இந்திரா பார்த்தசாரதி 4. இரணிய வதம் – சா கந்தசாமி
5. இடைவெளி – கார்த்திகா ராஜ்குமார்
6. இவர்களின் உலகம் – சு சமுத்திரம் 7. விகாசம் – சுந்தர ராமசாமி
8. தர்மு மாமா – சுஜாதா 9. நெகிழ்வு – நீல பத்மநாபன்
10. விடாது பெய்யும் மழை – பாலகுமாரன்
11. சம்மதங்கள் ஏன் ? – பாவண்ணன் 12. மனிதர்கள்- பிரபஞ்சன்
13. மனிதன் – மாலன் 14. என்று தணியும் – செ யோகநாதன்
15. பயிர் – ராஜம் கிருஷ்ணன் 16. ஒரு முத்தம் – லா சா ராமமிர்தம்
17. சொல்ல முடிந்தது – வண்ணதாசன்
18. உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
19. பொம்மலாட்டம் – வாஸந்தி 20. வானவில் – ஜெயந்தன்

வாசகன் இதழ் “ஒரு தலைமுறையின் பதினொன்று சிறுகதைகள்” என்ற தலைப்பில் ஒரு இதழை வெளியிட்டது. ஆசிரியர் மாலன் , அக்ரீஷ்

இந்த தொகுப்பில் உள்ள கதைகள்

1. நான் பர்ஸ் திருடிய நாள் — ஆதவன்
2. இருட்டில் நின்ற ….. -சுப்ரமண்ய ராஜு
3. அந்த தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு – ஜெயபாரதி
4. விளிம்பு – பாலகுமாரன் 5. நடப்பு – வண்ணதாசன்
6. 29 – மாலன்
7. ஒரு கடிகாரத்தை சுற்றும் கணமான முட்கள் – இந்துமதி
8. நேர்க்கோடுகளும் கோணல் கோடுகளும் – எம் சுப்ரமணியம்
9. பார்ட்டி – ஸிந்துஜா 10. புதியதோர் வேள்வியின் துவக்கம் – கபந்தன்
11. கோட்டு – கலாஸ்ரீ

“வானவில் கூட்டம்” என்ற தொகுப்பை ( உலகத் தமிழர்களின் கதைகள்) பா உதயகண்ணன் தொகுத்து இருவாட்சி பதிப்பகம் 2007 ல் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் 37 கதைகள் உள்ளன. இதில் உள்ள கதைகள்

1. முதல் பிக்குணி – சித்தார்த்தன் 2. கர்வம் – இரா இராமையா
3. சுழற்சி – பாரதி ராமன் 4. ஐயடிகள் காடவர்கோன் – ரமேஷ் வைத்யா
5. கண்கள் – என் கணேசன் 6. கண்ணடி சுவர்கள் -உதயசங்கர்
7. ஒரு சுமாரான கணவன் -ரெ கார்த்திகேசு
8. ஒரு லைப்ரரியின் மரணம் – சூர்ய ராஜன்
9. உயிர்த்தலம் – ஆபிதீன் 10. மொகித்தே – நாஞ்சில் நாடன்
11. வித்தியாசம் ஏதாவது – குரல்செல்வன்
12. மிட்டாதார் – காசிகணேசன் ரங்கநாதன் 13. அவரோகணம் – நாகூர் ரூமி
14. திருமுகப்பில் – ஜெயமோகன்
15. பறக்கும் திருடனுக்குள் – சுரேஷ்குமார் இந்திரஜித் 16. சுமை – நரசய்யா
17. தொலைந்து போனவள்- பத்ரிநாத் 18.திமலா – சுஜாதா
19. எட்டாயிரம் தலைமுறை – தமிழ் மகன் 20. பனி விழும் இரவு -நிலா
21. ஊமங்காடை – இலட்சுமணப்பெருமாள் 22. வடிகால் – சாந்தன்
23. நிழல்களின் வடு – அப்துல் றசாக் 24.கவலை – பாளை கோ மாணிக்கம்
25. பூங்கொத்து கொடுத்த பெண் – அ முத்துலிங்கம்
26. பெற்றோல் ஸ்ரேஸன் – இளைய அப்துல்லாஹ்
27. நாலேகால் டாலர் – ஜெயந்தி சங்கர் 28. மெயில் தாம்பத்யம் – போப்பு
29. காலடித்தடங்கள் அற்ற ஓர் உலகம் – எஸ் ஷங்கரநாராயணன்
30. அலுமினியப் பறவைகள் -எம் கே குமார்
31. யுவர்ஸ் போஸ்துமஸ்லி – ம வே சிவக்குமார்
32. கழிப்பறைக் காதல் – கே ஆர் மணி
33. பெயர் உதிர் காலம் – ஐஷ்வர்யன்
34. மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே – பாலா
35. அன்னம் தானம் தொம் தனம் தா – ம ந ராமசாமி
36. மஜ்னூன் – மீரான் மைதீன்
37. வீட்டுக்கு வந்தார் – இந்திரஜித்

” பனியும் பனையும்” என்ற தொகுப்பை இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ இருவரும் தொகுத்து மித்ர 1994 ல் வெளியிட்டுள்ளது. இதில் 39 கதைகள் உள்ளன. இது முழுக்க ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் படைப்புக்கள் கொண்டதாக உள்ளது. இதில் உள்ள கதைகள்…

அவுஸ்திரேலியா கதைகள்

1. பனையும் – சந்திரிகா ரஞ்சன் 2. ஒரே இனமும் – மாத்தளை சோமு
3. சுப்பர் மார்க்கெட் – மாவை நித்யானந்தன் 4. மழை – முருகபூபதி
5. ஓய்வு நாள் – யாழ் பாஸ்கர் 6. கதையின் கதை – யோகன்
7. நிறமில்லை – ரதி 8. விருந்து – ச வாசுதேவன்
9. ரகசிய ரணங்கள் – அருண் விஜயராணி

ஐரோப்பிய கதைகள்

10. சபிக்கப்பட்டவர்கள் – எம் அருட்குமரன்
11. அரங்கேற்றங்கள்- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் 12. இன்று – சாள்ஸ்
13. அடுத்த தரிப்பு – லோகா 14. அகதி அ … செல்வமதீந்திரன்
15. வரம் – க ஆதவன் 16. கதை தொடரும் – கரவை தாசன்
17.சுழற்சி – முல்லையூரான் 18. கலாச்சாரங்கள் – சந்திராதேவி
19. போயின – தேவகி இராமநாதன் 20. குளிர் – கலா மோகன்
21. கூடுகளும் …. கலைச்செல்வன் 22. மாலை மயக்கங்கள் – சுகன்
23. அன்புள்ள நண்பனுக்கு – புவனன்
24. குழந்தை விசாரங்கள்- பொ கருணாஹரமூர்த்தி
25. ஆவின மழை … ப வி சிறிரங்கன் 26. புருஷ வீதிகள் – ந சுசீந்திரன்
27. ஆண்பிள்ளை – தேவா 28. பனியும் …. ஜீவ முரளி

வட அமெரிக் கதைகள்

29. மரபுகளும் உறவுகளும் – அளவெட்டி சிறிசுக்கந்தராசா
30. அவர் நாண – ஆனந்த் பிரசாத் 31. விடிவு தூரத்தில் – அ கந்தசாமி
32. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சனை – வ ந கிரிதரன் 33. மனசு – சக்கரவர்த்தி
34. க.குழம்பும் க.முரண்பாடும் – க நவம் 35. பிரசவம் – நிலா குகதாசன்
36. முகமிழந்த மனிதர்கள் – பவான் 37. வெறுமை – என் கே மஹாலிங்கம்
38. எக்ஸ் அலைகளில் – ஜோர்ஜ் குருசேவ்

நார்வே கதை

39. செக்குமாடு – வ ஐ ச ஜெயபாலன்

“ கரிசல் கருதுகள் “என்ற தொகுப்பை உதயசங்கர் , எஸ் லட்சுமணப்பெருமாள் இருவரும் இணைந்து தொகுத்துள்ளனர். கரிசல் எழுத்தாளர்களின் சிறுகதை களஞ்சியம் இது. இதை அகரம் பதிப்பித்துள்ளது. கி ராஜநாராயணனின் 85 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த தொகுப்பு 2007 ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உள்ள கதைகள்…

1. கு அழகிரிசாமி – சுயரூபம் 2. கி ராஜநாராயணன் —முதுமக்களுக்கு…
3. வே சதாசிவம் – தீக்கண்ணு 4. பா செயப்பிரகாசம் – அம்பலக்காரர் வீடு
5. தனுஷ்கோடி ராமசாமி – நாரணம்மா
6. எம் எஸ் சண்முகம் — மனிதநேயம்
7. கௌரிஷங்கர் – பாலம் 8. சுயம்புலிங்கம் – மூளி மாடுகள்
9. மேலாண்மை பொன்னுச்சாமி – சூரிய வேர்வை
10. ச தமிழ்ச்செல்வன் – பதிமூணில் ஒண்ணு
11. வித்யாஷங்கர் – ஊமையனின் பசி
12. வேல ராமமூர்த்தி – இருளப்பசாமியும் 21 கிடாய்களும்
13. கிருஷி – பாறையில் துளிர்க்கும் விருட்சங்கள்
14. கோணங்கி – உலர்ந்த காற்று
15. உதயசங்கர் – அடி 16. மாதவராஜ் – புகை நடுவினிலே….
17.எஸ் லட்சுமணப்பெருமாள் – கதை சொல்லியின் கதை
18. இரா நாறும்பூநாதன் – ஒற்றைப்பனை
19. பாரததேவி – மாலைநேரத்து வெளிச்சங்கள்
20. ஜே ஷாஜஹான் – ஈன்ற பொழுது…..
21.எஸ் காமராஜ் – காணாமல் போன சாமி
22. சாரதி – உருமாறும் பிம்பங்களில் கரையும் என் அப்பா
23.அப்பணசாமி – திருநங்கை பாரதிகண்ணம்மாவுடன் ஓர் உரையாடல்

“வேர்மூலம்” என்ற தொகுப்பை வே மு பொதியவெற்பன் தொகுத்து ருத்ரா பதிப்பகம் 2008 ல் வெளியிட்டுள்ளது. இதில் 18 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கதைகள்…

1. அறிமுகம் – புதிய மாதவி 2. மௌனத்தின் வெடிப்பு – கி பார்த்திப ராஜா
3. தொலைந்துபோன சாவி – ம பாலகுருசாமி
4. காணாமல் போகும் காலம் – பாவண்ணன்
5. நிழல் பார்வைகள் – சோ தர்மன் 6. சரண் – ஜி சரவணன்
7. பாசக்கயிறு – பித்தகுமாரன் 8. சராசரி – சிவதாணு
9. பன்றி – ரமேஷ் -பிரேம் 10. ஆண் பொம்மை – கீரனூர் ஜாகிர்ராஜா
11. தேரு பிறந்த கதை – வளவ துரையன் 12. கொமரு – விசும்பு
13. பெத்தவ – ஹரிகிருஷ்ணன் 14. எக்ஸெல் ஆப்பர் – வா மு கோமு
15. ஏழு முனிக்கும் இளைய முனி – சி எம் முத்து
16. பச்சை வாழியும் யோகவனமும் – நா விச்வநாதன்
17. செருப்பு – பெருமுருகன் 18.அடி – தெ வெற்றிச் செல்வன்

“ கணையாழி கதைகள்” என்ற தொகுப்பை அசோகமித்திரன் தொகுத்துள்ளார். 1965 முதல் 1974 வரை கணையாழியில் வெளியான சிறந்த கதைகளின் தொகுப்பு இது.

1. ந முத்துசாமி – சப்பாத்தி பழம்
2. நா பார்த்தசாரதி – இரண்டாவது விமர்சகன்
3. நகுபோலியன் -மழநாட்டு மகுடம் 4. சிவம் – எதிரொலி
5. எஸ் வைத்தீஸ்வரன்- சிருஷ்டி 6. லா ச ராமாமிர்தம் – மரணத்தின் தாதி
7. என் வி ராமநரசு – ஆண்மனம் 8. கு அழகிரிசாமி – தன்னையறிந்தவர்
9. நகுலன் – ஒரு ராத்தல் இறைச்சி
10. சா கந்தசாமி – ஒரு பையனும் இரண்டு பெண்களும
11. ராஜரங்கன் – வழுக்குமரம் 12. சிட்டி – பிணத்தின் சாவு
13. ஐராவதம் – அச்ச்சுவெல்லம்
14. வேலுமித்திரன்(கோ ராஜாராம்) – ஒதுங்கிய வீதியில் ஒரு கடை
15. மலர்மன்னன் – பிரதிக்ஞை 16. எம் ஏ நுஃமான் – சதுப்பு நிலம்
17. திருவாழத்தான்( ம ந ராமசாமி ) – கதை உலகில் ஒரு மேதை
18. சம்பத் – சாமியார் ஜூவுக்குப் போகிறார் 19. ஆ மாதவன் – நாயனம்
20.தி ஜானகிராமன் – பாயசம் 21.ராஜேந்திர சோழன் – எதிர்பார்ப்புகள்
22. நீல பத்மநாபன் – கடிகாரம் 23. சிவசங்கரா – கூரை மேலேறி
கோணச்சுரக்காயை …….. 24. சுபானு – ஜெயா ஷட்டரை போடுகிறாள்
25. கி ராஜநாராயணன் – சந்தோஷம்
26. இந்திரா பார்த்தசாரதி – இளமாறன் கொடுத்த பேட்டி
27. அசோகமித்திரன் – கடன் 28. சுப்ரமண்ய ராஜு – இருட்டில் நின்ற…..
29. ஆதவன் – ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்
30. ஜெயபாரதி – அந்த தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு
31. வண்ணதாசன் – வடிகால்
32. நா விச்வநாதன் – இருட்டுக்கு வெள்ளை ராஜி
33. மாலன் – 23 34. அம்பை- ம்ருத்யு
35. ஜி நாகராஜன் – கிழவனின் வருகை

” மழை சார்ந்த வீடு ” என்ற தொகுப்பு உச்சம் தொட்ட படைப்பாளிகளின் உன்னதமான கதைகள் கொண்டது. இந்த தொகுப்பை உத்தமசோழன் தொகுத்து சத்யா பதிப்பகம் 2005 ல் வெளியிட்டுள்ளது.இதில் உள்ள கதைகள்

1. வீடு சின்னது – நெய்வேலி பாரதிக்குமார் 2. தாய்ப் பூனைகள் – ஜி ஏ பிரபா
3. தனக்கென்றொரு புல்வெளி -உத்தம சோழன்
4. மலரினும் மெல்லிது … பட்டுக்கோட்டை ராஜா
5. நினைவுச் சுமைகள் – ஷைலஜா 6. நியாயம் பழக்கு – காஞ்சனா ஜெயதிலகர்
7. விட்டு விடுதலையாகி …. – இரா காமராசு
8. குருவிக்கூடு – இந்திரா சௌந்தர்ராஜன்
9. ஸோல்டன் ஃபேப்ரியும் தங்கச்சூரியும் … பாஸ்கர் சக்தி
10. ஒரு வாய் நீர்… – மாத்தளை சோமு
11. முட்டை வேட்டை -மேலாண்மை பொன்னுச்சாமி
12. தேன்சிட்டு – பொன்னீலன் 13. பாவனைகள் – ச தமிழ்ச்செல்வன்
14. புதர் வீட்டில் யாரோ வசிக்கிறார்கள் – எழில் வரதன்
15. மழை சார்ந்த வீடு – எஸ் ராமகிருஷ்ணன்

” சலாம் இசுலாம் ” என்ற தொகுப்பு சமீபத்திய இசுலாமிய சிறுகதைகளை
களந்தை பீர்முகமது தொகுத்து உதயகண்ணன் வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பு 2002 ல் வெளியானது. இதில் உள்ள கதைகள்

1. மனசு நனைந்த மழைக்காலங்களில் – அப்ழல்
2. கடைசி இடம் – எஸ் அர்ஷியா
3. அடையாளம் – ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் 4. கைசேதம் – இளசை மதீனா
5. விபத்து – இன்குலாப் 6.மழை – களந்தை பீர்முகம்மது
7. அவனைச் சுற்றியே – களந்தை சாகுல் ஹமீது 8. கழிவு – கழனியூரன்
9.சம்மந்தக்குடி -மீரான் மைதீன் 10. சாவு முதல் – முகம்மது முஸ்தபா
11. செப்புத் தூக்கி – ஹ மு நத்தர்ஷா 12. விசாரணை – நாகூர் ரூமி
13. இயல்பு – எஸ் பர்வீன் பானு 14. பச்சை நிறப்பூனை – ஹெச் ஜி ரசூல்
15. விழியின் ஓசை – ரோஜாகுமார் 16. பொறி – சல்மா
17. வானவர்கள் செல்லுமிடங்கள் – தோப்பில் முஹம்மது மீரான்

முனைவர் சேதுராமன் மூன்று தொகுப்புக்களை தொகுத்து அவற்றை பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் ஆகிய தொகுப்புக்கள் அவை.

அவற்றில் உள்ள கதைகள்…

1. புதுமைப்பித்தன் – ஒரு நாள் கழிந்தது, சிற்பியின் நகரம், காலனும் கிழவியும்
2. ந பிச்சமூர்த்தி – ஞானப்பால், குளவிக்கூடு
3. மௌனி – கொஞ்சதூரம், அழியாச்சுடர்,
4. சி சு செல்லப்பா – மூடி இருந்தது, வாழ்க்கை
5. கல்கி – ஒன்பது குழி நிலம், இடிந்த கோட்டை, தந்தையும் மகனும்
6. அண்ணாதுரை – இரும்பு முள்வேலி, சொல்லாதது, கொக்கரக்கோ
7. நா பார்த்தசாரதி – கொத்தடிமைகள், புகழ் துறவு,
8. விந்தன் – மறுமணம் 9. மதிப்பு மிகுந்த மலர் – வல்லிக்கண்ணன்
10. விடியுமா ? – கு ப ராஜகோபாலன், தாயாரின் திருப்தி
11. குளத்தங்கரை அரசமரம் – வ வே சு ஐயர்
12. குழந்தைக்கு ஜுரம் – தி ஜானகிராமன்
13. இருவர் கண்ட ஒரே கனவு – கு அழகிரிசாமி
14. ராஜகுமாரி – லா ச ராமாமிர்தம்
15. பணம் பிழைத்தது – பி எஸ் ராமையா

வெவ்வேறு வகை சார்ந்த தொகுப்புக்கள் சில வெளியாகி உள்ளன. அவற்றை
இப்போது பார்க்கலாம்.

“ஜுகல்பந்தி” என்ற தொகுப்பை சங்கீதக் கதைகளைக்கொண்டு தொகுத்துள்ளார் எஸ் ஷங்கரநாராயணன். இது வடக்கு வாசல் வெளியீடாக 2006ல் வெளியானது. இதில் உள்ள கதைகள்..

1. ஸரிவாரிலோன – ஸ்வாமிநாத ஆத்ரேயன்
2. ஏறும் இறையும் – ஜெயமோகன் 3. உக்ரம் – பிரபஞ்சன்
4. வீணைபவானி – கல்கி 5. சின்னம் -வாஸந்தி
6. பிரபஞ்சகானம் – மௌனி 7. காற்றும் சுழி மாறும் – செ யோகநாதன்
8. தெளிவு – நீல பத்மநாபன் 9. திரிவேணி – கு அழகிரிசாமி
10. நகுமோமு – சம்யுக்தா 11. நாதம் – சுப்ரபாரதிமணியன்
12. ஆர்மோனியம் சிரிக்கிறது- அனுராதா ரமணன் 13. மழை – சீதா ரவி
14. மொழிக்கு அப்பால் – ம ந ராமசாமி
15. இன்னிசை விருந்து – பத்மா நாராயணன் 16. ரி – அ முத்துலிங்கம்
17. பாஷாங்க ராகம் – தி ஜானகிராமன்
18. ஈ ஜெகமுலோ திக்கெவரம்மா -லா ச ராமாமிர்தம்
19. ஊர் சுற்றிக்கலைஞன் – யுவன் சந்திரசேகர்
20 . ஷங்கர்லால் இசை விழா – சாரு நிவேதிதா
21. காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு – பா ராகவன்
22. நம்பிக்கை – முத்துராமன்
23. பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர் – நாஞ்சில் நாடன்
24. டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல் – உதயசங்கர்
25. நாயனம் – ஆ மாதவன் 26. இனம் – ஏ ஏ ஹெச் கே கோரி
27. மோகனம் – எஸ் ஷங்கரநாராயணன்
28. சேர்ந்திசை – எஸ் ராமகிருஷ்ணன்

“ அமிர்தம்” என்ற தொகுப்பை எஸ் ஷங்கரநாராயணன், சு வேணுகோபால் இருவரும் தொகுத்துள்ளார்கள். இது உணவு சார்ந்த தொகுப்பு. இந்த தொகுப்பை 2010ல் நிவேதிதா புத்தகப் பூங்கா வெளியிட்டுள்ளது.

தொகுதி -1 (அறுசுவை கதைகள்)

1.மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள்
பிரியாணியும் – நாஞ்சில் நாடன்
2. பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைபொழுது – பரணி
3.சுயரூபம் – கு அழகிரிசாமி 4. சாயங்காலம் – ராஜன் அரவிந்தன்
5. எட்டியது – சாந்தன் 6. முறைப்பெண் – அசோகமித்திரன்
7. அக்னி -அனுராதா ரமணன் 8. வெறுப்பைத் தந்த வினாடி – வத்ஸலா
9. மீன்- பிரபஞ்சன் 10. முட்டை – ஏ ஏ ஹெச் கே கோரி
11. நிலை நிறுத்தம் – கி ராஜநாராயணன் 12. தேனீக்கள் – ஜி காசிராஜன்
13. கலங்கல் – பூமணி 14.மோகினி – சு வேணுகோபால்

தொகுதி – 2

1. உந்தித்தீ – நா விச்வநாதன் 2. இடப்பெயற்சி – க்ருஷாங்கினி
3. மந்தி சிந்து கனிகள் – எஸ் ஷங்கரநாராயணன்
4. உஞ்சவிருத்தி – கோபுல்ஸ்ரீ 5. சாஸ்தாப்ரீதி -அ மாதவையா
6. தண்ணீர் – ஆ மாதவன்
7. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
8. கோபாலய்யங்காரின் மனைவி – புதுமைப்பித்தன்
9. முட்டைபாஷ்யம் – கே ஆர் மணி
10. சேரன் சோழன் பாண்டியன் – க சீ சிவக்குமார்
11. கடைசி விருந்து – அமர்நாத் 12. நாக்கு – ஜெயமோகன்
13. கத்தியும் கரண்டியும் – நாகரத்தினம் கிருஷ்ணா
14. அன்னம் – உஷாதீபன் 15. மந்திரம் – ம ந ராமசாமி
16. பெண்வீடு – களந்தை பீர்முகம்மது 17. மங்கலநாதர் – கந்தர்வன்
18.இருளில் – அ முத்துலிங்கம்

” காஃபிர்களின் கதைகள் ” என்ற தொகுப்பை கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்து இருக்கிறார். இஸ்லாமியரல்லாதவரால் எழுதப்பட்ட இஸ்லாமியர் பற்றிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பை 2013ல் எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்…

1.ரெயில்வே ஸ்தானம் – சுப்ரமணிய பாரதி 2. விகாசம் – சுந்தர ராமசாமி
3. நூருன்னிசா – கு ப ராஜகோபாலன் 4. அழகு – அசோகமித்திரன்
5. பாயம்மா – பிரபஞ்சன் 6. ஒன்றுபடுதல் – பொன்னீலன்
7. மெஹ்ருன்னிஸா – வண்ணநிலவன் 8. ஈரா – எஸ் பொன்னுதுரை
9. தொலைவெளி நெருக்கம் – சுகுமாறன் 10. கான் சாகிப் – நாஞ்சில் நாடன்
11.ஹசர் தினார் – எஸ் ராமகிருஷ்ணன்
12. க்யாமத் என்னும் இறுதித் தீர்ப்பின் நாள் – தஞ்சை ப்ரகாஷ்
13. தடம் – வேல ராமமூர்த்தி 14. பேராசிரியர் தக்கியின் ஆடு – விட்டல் ராவ்
15. பயம் – ரமேஷ் பிரேம் 16.எட்டாவது நாள் – ஆ மாதவன்
17. அக்பர் என்ற அப்பா – ச சுப்பாராவ்

” அழியாத கோலங்கள்” என்ற தொகுப்பை கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்து இருக்கிறார். தமிழின் தலை சிறந்த் 24 காதல் கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பை ஆழி பதிப்பகம் 2012 ல் வெளியிட்டுள்ளது.

1. சுப்பையா பிள்ளையின் காதல்கள் – புதுமைப்பித்தன்
2.சிரிக்கவில்லை – கு அழகிரிசாமி 2. அழியாச்சுடர் – மௌனி
4. அன்புள்ள… – லா சா ராமாமிருதம் 5. வெயில் – நகுலன்
6. கன்னிமை – கி ராஜநாராயணன் 7. மாமன் வரவு – பிரபஞ்சன்
8. வயது பதினாறு – ஜெயந்தன் 9. ஆறு நரகங்கள் – பா செயப்பிரகாசம்
10. வெயிலோடு போய் – ச தமிழ்ச்செல்வன்
11. திருவாரூர் ஜட்காவும் இவர்களும் – கோணங்கி
12. கழுவேற்றம் – எஸ் ராமகிருஷ்ணன் 13. நிழலாட்டம் – ஜெயமோகன்
14. வார்த்தை உறவு – கோபி கிருஷ்ணன் 15. பால்திரிபு – இரா நடராசன்
16. ஜெயாவும் சௌந்தரபாண்டியனும் – லக்ஷ்மி மணிவண்ணன்
17. பால்ய சிநேகிதி – உதய சங்கர் 18. நெரிக்கட்டு – அழகிய பெரியவன்
19. மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும் – அஜயன் பாலா
20 டெய்ஸி டீச்சர் – வா மு கோமு
21. பெயரிடப்படாத சம்பவம் – எஸ் செந்தில்குமார்
22. நதியில் மிதக்கும் கானல் – சந்திரா
23. செம்பருத்தி பூத்த வீடு – கீரனூர் ஜாகிர்ராஜா 24.தனுமை – வண்ணதாசன்

” 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் ” என்ற தொகுப்பை கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்து இருக்கிறார். பதினேழு நவீன சிறுகதை ஆசிரியர்களின் படைப்புக்கள் இதில் இருக்கின்றன. இந்த தொகுப்பை ஆழி பதிப்பகம் 2012 ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்…

1. வனம் – சசி 2. புலிப்பாணி ஜோதிடர் – காலபைரவன்
3. அணைப்பட்டி வெற்றிலை சுவாமிகளின் சரிதம் – எஸ் செந்தில்குமார்
4. வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும் – மு
ஹரிகிருஷ்ணன்
5. கர்ண மகராசா – தூரன் குணா
6. யாளி இதழில் (63) வெளிவந்த தேவேந்திரனின் நேர்காணல் குறித்து வந்த
கடிதங்கள் – ராகவன்
7. அவளின் வாழ்க்கை இவ்வாறாக முடிந்தது – ஆலமர் செல்வன்
8. கரகு பெரி ஜா – இராம முத்துகணேசன்
9. இருள் யாசகன் – கணேசகுமாரன்
10. கோணவாச்சி- ஆங்கரை பைரவி
11. தஞ்சை ப்ரகாஷும் மிஷன் தெரு ரம்யாவும் – லக்ஷ்மி சரவணக்குமார்
12. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா
13.இசைக்காத மீன்களின் அக்கார்டியன் – அசதா
14. ஃ என்றொரு கதை – குமார் அம்பாயிரம்
15. அநாதையாகக் கிடந்த டைரியிலிருந்து … சந்தியூர் கோவிந்தன்
16. உள்ளோசை கேட்காத பேரழுகை – ஏ தேவராஜன்
17. சாமத்தில் முனகும் கதவு – கே ஜே அசோக்குமார்

” இருள் விலகும் கதைகள்” என்ற தொகுப்பை விஜய் மகேந்திரன் தொகுத்துள்ளார். இளம் எழுத்தளர்களின் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்த நூல்.இதை சிறந்த தொகுப்பு நூலாக எஸ் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொகுப்பை தோழமை 2009 ல்வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்..

1. நல்லதம்பியின் டைரி குறிப்புகள் – வா மு கோமு
2. முருகன் படுத்தால் பிணம் -சுதேசமித்திரன்
3. வெல்க்கம் ட்டு வேலந்தாவனம் – ஷாராஜ்
4. உயிர்வதை – கே என் செந்தில் 5. வெளிச்சம் – ஹரன் பிரசன்னா
6. ஜெயக்கொடி – எஸ் செந்தில்குமார் 7. ரோஸ் நிறம் – பாலை நிலவன்
8. மரணத்திற்கான காத்திருப்பில் -லக்ஷ்மி சவணக்குமார்
9. செறவிகளின் வருகை – சிவக்குமார் முத்தையா
10. நகரத்திற்கு வெளியே – விஜய் மகேந்திரன்
11.காலவாயனின் காடு – புகழ்
12. குதிரை வண்டிக்காரனும் ஒன்பது குழந்தைகளும் – என் ஸ்ரீராம்

” மெல்ல விலகும் பனித்திரை ” என்ற தொகுப்பை லிவிங் ஸ்மைல் வித்யா தொகுத்துள்ளார். இது திருநங்கையர் குறித்த கதைகளின் தொகுப்பு. இந்த தொகுப்பை பாரதி புத்தகாலயம் 2013ல் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்….

1. கோமதி – கி ராஜநாராயணன்
2. மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து – இரா நடராசன்
3. ஊமங்காடை – இலட்சுமணப்பெருமாள் 4. தீராக்கனவு – பாரதி தம்பி
5. இப்படியும் …. – சுதா 6. ஆச்சி முத்து – திண்டுக்கல் தமிழ்பித்தன்
7. நீளும் கனவு – கவின் மலர் 8. வக்கிரம் -பாவண்ணன்

“ பாதரஸ ஓநாய்களின் தனிமை ” என்ற தொகுப்பை ஆ பூமிச்செல்வம் தொகுத்து இருக்கிறார். இதில் திருட்டு குறித்த கதைகள் 20 உள்ளன. இந்த தொகுப்பை 2014ல் அன்னம் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கதைகள்….

1. சங்குத் தேவனின் தர்மம் – புதுமைப்பித்தன்
2. குற்றப்பரம்பரை – சி சு செல்லப்பா
3. இளிந்த சாதி – ஜி நாகராஜன்
4. ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – ஜெயகாந்தன்
5. பூட்டுப் பாம்படம் – எம் எஸ் சண்முகம் 6. திருடன் – வண்ணநிலவன்
7. திண்டி – தஞ்சை ப்ரகாஷ் 8. சரஸ்வதி பூஜை – தனுஷ்கோடி ராமசாமி
9. சத்தியங்கள்- சோ தர்மன் 10. பாதரஸ ஓநாய்களின் தனிமை – கோணங்கி
11. இருளப்ப சாமியும் 21 கிடாயும் – வேல ராமமூர்த்தி
12. பச்சை இருளன் – பவா செல்லத்துரை
13. பறக்கும் திருடனுக்குள் – சுரேஷ்குமார் இந்திரஜித்
14. நிலவில் குளித்தவன் – உதயசங்கர் 15.களவு – சுந்தர பாண்டியன்
16. சுருக்கு – கண்மனி குணசேகரன் 17.புத்துயிர்ப்பு- சு வேணுகோபால்
18. சனிக்கிழமை திருடன் – எஸ் செந்தில்குமார்
19. களவு – ஆதவன் தீட்சண்யா 20. ஆளரவம் – ஜனகப்பிரியா

இந்த தொகுப்புக்களில் “அன்று “, “அன்புடன்”, தொகுப்புக்களில் உள்ள கதைகளைப் பற்றிய தகவல்களை தந்த மாலனுக்கும், அழியாத கோலங்கள் என்ற தொகுப்பினை அளித்து உதவிய கீரனூர் ஜாகிர் ராஜா , ஜுகல் பந்தி தொகுப்பினை அளித்து உதவிய ஷங்கர நாராயணன் ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். க நா சுப்ரமணியம் தொகுத்த கதைகள் சிறந்த தமிழ் சிறுகதைகளாக(selected tamil short stories ) ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்துள்ளது. இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கக்கூடும். வானதி சிறப்பு சிறுகதைகள் முதல் தொகுதி மட்டும் கிடைத்திருக்கிறது. நகுலனின் குருஷேத்திரம் தொகுதி கிடைக்கவில்லை. இன்னும் என்னிடம் இருக்கும் சில தொகுப்புக்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த கட்டுரையில் 943 கதைகளை குறிப்பிட்டு இருக்கிறேன்

(தொடரும்)

Email: enselvaraju@gmail.com

Series Navigationநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8பிசகு
author

Similar Posts

Comments

  1. Avatar
    Mani says:

    அருமை. நீங்கள் ஒரு நவீன கால உ.வே.சா. ! தொகுப்பு உண்மையில் வியப்பைத்தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *