ஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்

author
4
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 20 in the series 26 ஜூலை 2015

ஜஸ்டின் ஹக்லர்

church_3182962bஏறத்தாழ 400000 ஜெர்மானியர்கள் தாங்கள் புராடஸ்டண்ட் சர்ச்சுகளிலிருந்தும் கத்தோலிக்க சர்ச்சுகளிலிருந்தும் விலகுவதாக எழுதிகொடுத்துள்ளனர். ஜெர்மானிய அரசாங்கம் சர்ச்சுகளுக்கு பணம் வழங்க, பங்குகளிலிருந்து பெறும் லாபத்துக்கும் 8 இலிருந்து 9 சதம் வரைக்கும் இந்த சர்ச் டாக்ஸ் பெறப்படும் என்று அறிவித்ததே இதற்கு காரணம்,

பல்லாயிரக்கணக்கான ஜெர்மன் கிறிஸ்துவர்கள் அதிகாரபூர்வமாக கிறிஸ்துவத்திலிருந்து விலகுவதாக எழுதிகொடுத்துள்ளனர்.

சென்றவருடம் மட்டுமே 200000 ஜெர்மானியர்கள் தாங்கள் புராடஸ்டண்ட் சர்ச்சிலிருந்து விலகுவதாக எழுதிகொடுத்துள்ளனர். இது கடந்த 20 ஆண்டுகளில் சர்ச்சிலிருந்து வெளியேறியவர்கள் தொகையிலேயே மிக அதிகமான தொகை. இதே அளவுக்கு கத்தோலிக்க சர்ச்சிலிருந்தும் வெளியேறியுள்ளனர்.

ஜெர்மனியில் சர்ச் உறுப்பினர்கள் சர்ச் வேலைகளுக்காக வரி செலுத்தவேண்டும். இந்த வரியை அரசாங்கமே வசூலித்து தருகிறது.

ஜெர்மன் சட்டப்படி, யாரெல்லாம் குழந்தையாக இருக்கும்போது ஞான்ஸ்னானம் பெற்றார்களோ, அந்த சர்ச்சுக்கு வரி கொடுக்கவேண்டும். அது அவர்களின் வருமானத்தில் ஒரு பங்கு. அவர்கள் மதத்தை நம்புகிறார்களோ இல்லையோ, அந்த சர்ச்சில் பங்கு பெறுகிறார்களோ இல்லையோ, அந்த வரியை கொடுத்தே ஆகவேண்டும். சமீப காலம் வரைக்கும் இந்த கூடுதல் வரியை ஜெர்மானியர்கள் கொடுத்து வந்திருக்கிறார்கள். காரணம் சர்ச் பள்ளிகளில் இருக்கும் முன்னுரிமை, குழந்தைகளை பகல் நேரத்தில் சர்ச்சுகளில் பார்த்துகொள்ளும் வசதி ஆகியவை காரணம். இவையெல்லாம் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த வரியிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி, அதிகாரபூர்வமாக தாங்கள் மதத்திலிருந்து விலகிவிடுகிறோம் என்று எழுதிக்கொடுப்பதே. இவ்வாறு எழுதிகொடுப்பதற்கும் ஒரு தொகை செலுத்த வேண்டும். இப்போது ஒரு சொத்தை விற்பதனால் கிடைக்கும் பணத்திலும் 9 சதவீதத்தை சர்ச் வரியாக செலுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமே இன்னும் அதிகமாக சர்ச் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாகியிருக்கிறது.

ஏற்கெனவே சர்ச்சிலிருந்து விலகுவதற்கு யோசித்துகொண்டிருக்கும் பலரையும் அந்த முடிவை எடுக்க வைத்திருப்பது இந்த புதிய வரி. ஒட்டகத்தின் முதுகில் ஏற்றப்பட்ட கடைசி வைக்கோல் இந்த புதிய வரி. அந்த ஒட்டகத்தின் முதுகை உடைத்துவிட்டது” என்று ரூத் லெவின் என்ற புராடஸ்டண்ட் மதத்தின் அதிகாரப்பூர்வமான பேச்சாளர் தெரிவித்தார். சொத்துவிற்பனையில்பெறும் பணத்துக்கு சர்ச் வரி என்பது ஏற்கெனவே இருக்கும் சட்டமென்றாலும், முன்பு சொத்து விற்பனையை அரசாங்கத்திடம் தெரிவிக்கவேண்டியதில்லை என்று இருந்தது. அந்த ஓட்டையை தற்போது அரசாங்கம் மூடிவிட்டதால், இப்போது அந்த வரியை செலுத்தியே ஆகவேண்டியிருக்கிறது.

முன்பு சர்ச்சை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் தங்களது பெற்றோரின் மதத்தை விரும்பாத இளம் தலைமுறையினராகவே இருந்தார்கள். சென்ற வருடத்தில் பென்ஷன் வாங்கும் நிலையில் இருக்கும் வயதானவர்களே தங்களது சேமிப்பை பாதுகாத்துகொள்ள சர்ச்சிலிருந்து விலகுபவர்களாக இருக்கிறார்கள்.

சர்ச்சை விட்டு விலகுவது என்பது சம்பிரதாயமான ஒன்றல்ல. மதத்தை விட்டு விலகினால், மதபிரஷ்டம் அல்லது சமயவிலக்கு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு சர்ச் தொழுகைகளில் பங்கெடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு சட்டப்பூர்வமாகவே சில சலுகைகளும் மறுக்கப்படும். உதாரணமாக சர்ச் கல்லறைகளில் சவ அடக்கம் செய்வது மறுக்கப்படும். அவர்களது குழந்தைகள் அரசாங்கம் நடத்தும் சிறப்பான பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படமாட்டார்கள்.

பாவமன்னிப்பு கோருவதும், தொழுகைகளில் பங்கெடுப்பதும் கத்தோலிக்க மதத்திலிருந்து விலகியவர்களுக்கு மறுக்கப்படும்.

தற்போதைய சட்டத்தின்படி, சர்ச் உறுப்பினர்களது சொத்து விற்பனையில் 9 சதவீத வருமானத்தை ஜெர்மன் வங்கிகள் பிடிக்க வேண்டும்.

2012இல் 138000 புராடஸ்டண்ட் உறுப்பினர்களே மதத்திலிருந்து விலகினார்கள். சென்ற வருடம் 200000கும் மேற்பட்ட ஜெர்மானியர்கள் புராடஸ்டண்ட் மதத்திலிருந்து விலகியுள்ளார்கள். பவாரியாவில் இந்த மதநிராகரிப்பு சுமார் 62 சதவீதம் அதிகரித்துள்ளது.

கத்தோலிக சர்ச்சிலிருந்து 2014 ஆம் ஆண்டில் விலகியவர்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2013இல் சுமார் 178000 கத்தோலிக்கர்கள் கத்தோலிக்க மதத்திலிருந்து விலகியிருக்கிறார்கள். இது 2012இல் 118000 ஆக இருந்தது.
2011 சென்ஸஸ் படி, சுமார் 30.8 சதவீத மக்கள் அதாவது 24.7 மில்லியன் ஜெர்மானியர்கள் கத்தோலிக்கர்கள். 30.3 சதவீதத்தினர் அதாவது 24.3 மில்லியன் ஜெர்மானியர்கள் புராடஸ்டண்ட் பிரிவினர்.

மொபெ. ஆர். கோபால்

மூலம்

Series Navigationநகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    paandiyan says:

    இங்கு மதம் மாற்றும் பணத்தில் நீங்கள் ராஜா மாதரி இருக்கலாம் வரி இல்லாமல் . உங்கள் தலை எழுத்து , மாற்ற முடியுமா ?

  2. Avatar
    ரவி says:

    இதில் மதம் மாறுபவர்கள் பற்றிய செய்தியை விட முக்கியமாக எனக்கு தோன்றுவது
    1. ஜெர்மானிய அரசாங்கம் போன்றவை, சர்ச்சின் நீட்சியாகவே இருக்கின்றன. ஜெர்மன் மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து கிறிஸ்துவம் வளர்க்கின்றன.

    ஆனால் இந்தியாவில் இந்து கோவில்களில் பெறப்படும் பணம் அரசாங்கத்தால் அனைத்து மக்களுக்குமாக செலவழிக்கப்படுகிறது.

    2. ஜெர்மனியில் கிறிஸ்துவ சர்ச்சுகள் தன்னிச்சையாக இருக்கின்றன. அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் ஜெர்மன் அரசாங்கம் மக்களிடம் வசூலித்து சர்ச்சுகளுக்கு தருகிறது.
    இந்தியாவில் இந்து ஆலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்து ஆலயங்களிடம் வசூலித்து அரசாங்கம் தானே செலவழிக்கிறது. இது கிறிஸ்துவ/முஸ்லீம்களால் நடத்தபப்டும் கேரளா அரசாங்கமாக இருந்தாலும் சரி, நாத்திக திமுகவாலும், மேற்கு வங்க நாத்திக சிபிஎம்மால் நடத்தப்படும் வங்காளமாக இருந்தாலும் சரி.

    இது எப்படி சரியாக இருக்கும்?

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      அட, அப்படி இருந்தால்தானே, நாம் “மதச்சார்பற்ற நாடு” :)

  3. Avatar
    ரவி says:

    மேலும், சவுதி அரசாங்கத்துக்கும் ஜெர்மன் அரசாங்கத்துக்கும் அதிக வித்தியாசம் இருப்பது போலவும் தெரியவில்லை. சவுதி அரசாங்கம் அல்லது பாகிஸ்தான் அரசாங்கம் மக்களிடம் ஜகத் என்ற பெயரில் வரி வாங்கி முஸ்லீம் அமைப்புகளுக்கும் மசூதிகளுக்கும் செலவு செய்கிறது. ஜெர்மன் அரசாங்கம் ஜெர்மனியர்களிடம் வாங்கி கிறிஸ்துவத்துக்கு செலவு செய்கிறது.
    என்ன ஒரே வித்தியாசம், யாரேனும் கிறிஸ்துவத்திலிருந்து மாறினால், ஜெர்மன் அரசாங்கம் இப்போது அவர்களுக்கு தண்டனை தருவதில்லை. ஆனால், முஸ்லீம் பெற்றோரிடம் பிறந்துவிட்டால், கட்டாயமாக ஜகத் போன்ற வரியை செலுத்தியே ஆகவேண்டும். மதத்திலிருந்து விலக முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *