அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

author
0 minutes, 8 seconds Read
This entry is part 5 of 15 in the series 29 நவம்பர் 2015

AUSTRALIA NEWS:

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

ஆலோசனைக்கூட்டம்வாசிப்பு அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 – 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neghbourhood House ( 36 – 42 Mackie Road, Mulgrave – Vic – 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் சங்கம் மேற்கொள்ளவுள்ள கலை – இலக்கிய நிகழ்வுகள் – மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெறும்.

இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் வெளியான இரண்டு புதிய நாவல்கள் மற்றும் இரண்டு புதிய சிறுகதைத்தொகுதிகள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் இடம்பெறும்.

வாசிப்பு அனுபவப்பகிர்வில் இடம்பெறும் நூல்கள்

பொக்ஸ் — Box ( நாவல்) ஷோபா சக்தி

நிலவு குளிர்ச்சியாக இல்லை – (சிறுகதைத்தொகுதி ) – வடகோவை

வரதராஜன்

ஆயுதஎழுத்து — ( நாவல்) – சாத்திரி

கோமகனின் தனிக்கதை — ( சிறுகதைத்தொகுதி ) கோமகன்

கருத்துரை — போருக்குப்பின்பான ஈழத்து இலக்கியவளர்ச்சி

                 திரு. சி. வன்னியகுலம்

 

 

 

 

Series Navigationஅவன் அவள் அது – 12நீ தந்த செலாவணிகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *