எனது இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 23 in the series 20 டிசம்பர் 2015

நந்தன் ஆ

இப்பொழுது தான் விழித்தேன்
விர்ர் என்று பறந்திட ஓடினேன்
பறக்க முடியவில்லை
?
திரும்பிப் பார்த்தேன்
என் இறக்கைகளை காணவில்லை

என் இறக்கைகள் இருந்த இடத்தில்
அவை பியிக்கப்பட்டதற்க்கான அடையாளம் மட்டுமே இருந்தது
ஆ!
என் இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது !
யார் பியித்தார்கள் என்று கேட்டேன்
பதில் ஏதும் இல்லை

என் இறக்கைகளை காணவில்லை
என் இறக்கைகள் !
எல்லை என்ற ஒன்றையே அறியாத என் இறக்கைகள்!
எங்கே அவை ?
தேடினேன் !

வெகு சிலரிடம் மட்டுமே இருந்த இறக்கைகள்
என் அறிய இறக்கைகள்
என்னைச் சேர்ந்தோர்யிடம் கதறினேன்

நடந்தவை நன்மைக்கே என்றார்கள்
அவரகளுக்கு பொறமை !

மூன்று வேலையும் மருந்து குடுத்தார்கள்
காயம் குணமாக வேண்டுமாம்

நடந்து செல்வதின் நன்மைகள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது
இனி அந்த வானத்தை பற்றியே நான் நினைக்கக்கூடாதாம்!

எங்கே என் இறக்கைகள் ?
எங்கே என் வானம்?
இதுவும் கனவுதானோ ?
கனவு எனில் ஏன் என்னால் எழ முடியவில்லை ?

எனது இறக்கைகளைக் காணவில்லை
அவை பியிக்கப்பட்டிருந்தது
யார் பிய்த்தார்கள் ?
தேடுகிறேன்
என் அறிய இறக்கைகளை. . .

. – நந்தன் ஆ

Series Navigationநன்னூலாரின் வினையியல் கோட்பாடுசகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *