சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.

author
0 minutes, 10 seconds Read
This entry is part 20 of 23 in the series 20 டிசம்பர் 2015

கலை – இலக்கியவாதி, சமூகப்பணியாளர்
திருமதி அருண். விஜயராணி மறைவு
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ
— உமர்கய்யாம் ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு )
அருண்__விஜயராணிஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, 13-12-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.
இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.
தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.
KannikaThanagalஇவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது. இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் – பின்னாளில்; மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர். 1989 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை – இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர்.
மெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால் அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக அண்மையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமதி அருண்.விஜயராணிக்கு எதிர்வரும் 18-12-2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 (P.M) மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Greensborough Road Le Pine மண்டபத்தில் (513, Greensborough Road , Greensborough ) மலர் அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.
20-12-2015 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு Fawkner Memorial Park இல் ( 1187, Sydney Road, Fawkner ) இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
அவருடைய வீட்டு முகவரி: No. 65, Beatty Street, Ivanhoe , Vic – 3079. AUSTRALIA.
தகவல்: முருகபூபதி — அவுஸ்திரேலியா

Series Navigationஎனது இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது !மழையின் பிழையில்லை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *