அவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 19 in the series 31 ஜனவரி 2016
ஹஸீனா அப்துல் பாசித்

எங்கும் எதிலும் எப்போதும் அவசரம், சக்கரம் கட்டி சுழன்றிடும் நிமிடங்களோடு நம்மவா்கள் வரும்புவதெல்லலாம் இரண்டே நிமிடத்தில் தயாராகிடும் உணவையும், இரண்டு வாரங்களில் சிகப்பழகு பெற்றுத்தந்திடும் முகப்புச்சு களிம்புகளையும் தான்.

இளைய தலைமுறையின் இத்தகைய அவசரமான தேடல்களால் நாம் அடைந்தது  என்ன? அல்லது சில வினாடி தாமதங்களால் இழக்க நேர்வது தான் என்ன?
மக்களை ஏமாளிகளாகவும், சோம்பேறிகளாகவும், இறுதியில் நோயாளிகளாகவும் மாற்றிடும் இதுபோன்ற பலவிதமான தயாரிப்புகளுக்கான விளம்பரங்களையும் ஊடகங்கள் சலிக்காமல் வெகு முனைப்போடு ஒலிபரப்பிக்கொண்டுதானிருக்கின்றன.
இரசாயனங்களும் போலிகளுமற்ற இயற்கை வழியிலான  முறையில் வாழ்ந்த நமது மூதாதையகளின் வாழ்வியலின் சாராம்சத்தை நினைவுகூற வேண்டிய தருணமிது.
எனது ஆயுளில் இது வரை ஒரே ஒரு ஊசி கூட போட்டுக்கொண்டது கிடையாது என்று கூறும் பெரசுகளை ஊா்ப்புறங்களில் இப்போதும் பார்க்க முடியும்.
உண்மையில் நம் முன்னோர்“களிடமிருந்த நிதானத்தின் சிறு விழுக்காட்டை கூட நாம் பெற்றிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
அன்றைய கால வாழ்க்கையில் அதிகாலை பொழுதிக்கான தேநீர் தயாரிப்பதில் தொடங்கி அன்றாட தேவை தொடர்பான அனைத்து  பணிகளும் நிதானமும் பொறுமையும் மேலும் அதிகப்படியான  உடலுழைப்பும் இருக்கவே செய்தது.
தற்போதைய எந்திர உலகில் எந்திரங்கள் தாம் மனிதர்களுக்காக ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கிறது.
அத்தோடு நில்லாமல் 2 நிமிடங்களில் தயாராகிடும் துரித நூடுல்ஸ் உணவுவகைகளும், நான்கே வாரங்களி்ல் சிகப்பழைகு தந்திடும் அழகு சாதன பொருட்களும் , இரண்டே வாரத்தில் உடற்பயிற்சி ஏதுமின்றி உடல் எடைய குறைத்திடும் தயாரிப்புகளும்,  குறுகிய காலத்தில் வீட்டிலிருந்தபடியே சம்பாதித்து லட்சாதிபதி ஆக செய்திடும் தொழில்முறைகளும் தற்போதைய இளைஞா்களால் விரும்பப்படுகிறது.
இதனால் ஏற்படும் பின்விளைவுகளையோ, இழப்புகளையோ பற்றி முன்கூட்டி சிந்தித்திட யாரும் இங்கு தயாரில்லை. என்பதோடு மூன்று நிமிட பாடலிலே வாழ்க்கையில் முன்னுக்கு வந்திடும் சினிமா பாடலைப் போன்றதொரு வாழ்க்கையையே நம்மவா்களுக்கு தேவைப்படுகிறது.
அது மட்டுமா நாம் மூன்றாம் வகுப்பில் கற்ற பாடப்பகுதிகளெல்லாம் இப்போதைய காலகட்டத்தில் நமது பிள்ளைகளுக்கு முதல்வகுப்பிற்கு முன்பாகவே திணிக்கப்படுகிறது. ஆனால் நமது பெற்றோர் பின்பற்றிய உணவு மற்றும் வாழ்வியல் முறைகளில் கால்பங்கு கூட நாம் நமது குழந்தைகளுக்கு செய்ய இயலாதவா்களாக இருப்பதும் கண்கூடான உண்மையே..
 – ஹஸீனா அப்துல் பாசித்.
Series Navigationதிருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் – மாலே மணிவண்ணாவானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *