பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 17 of 19 in the series 7 பெப்ருவரி 2016

Bramharajan

 

பிரம்மராஜன் [ இயற்பெயர் : ஆ. ராஜாராம் ] 1953 – ஆம் ஆண்டு பிறந்தவர்; சேலம் மாவட்டத்துக்காரர். ஆங்கிலப் பேராசிரியரான இவர் கவிஞர் , மொழிபெயர்ப்பாளர் , கட்டுரையாளர் ,

விமர்சகர் , ஆகிய தளங்களில் அறியப்படுகிறார். ஃபூஷன் இசையும் இயவருக்குத் தெரியும். ‘ ஜென்மயில்’

என்ற இத்தொகுப்பிற்கு ஆனந்த் , ‘ பிரம்மராஜன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ என்ற தலைப்பில் ஒரு

கட்டுரை எழுதியுள்ளார்.

” பிரம்மராஜன் கவிதைகளை வாசிக்க ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது என்பது உண்மை.

அப்பயிற்சியைத் தனக்காக — பிரம்மராஜனுக்காக அல்ல — மேற்கொள்ளத் தயாராக இருக்கும் வாசகனுக்கு இவரது கவிதைகள் சவாலாகவும் , அதே சமயம் ஆழமான அக அனுபவத்தைத்

தருபவையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது . ” என்கிறார் ஆனந்த். அதாவது

ஆழமான பயிற்சி இருந்தாலும் கவிதை வாசிக்க சவாலாக இருக்குமாம். இதுவே கவிதை முன் வைக்கும்

இருண்மை வெளி பரந்துபட்டது என உறுதிப்படுத்துகிறது.

இப்புத்தகத்தில் ரெயினர் மரியா ரில்கேயின் ‘ ஒரேயொரு கவிதையின் பொருட்டு ‘ என்ற விளக்கம்

ஒன்று தரப்பட்டுள்ளது.

இதுவே கவிதை முன்வைக்கும் இருண்மை வெளி , பரந்துபட்டது என உறுதிப்படுத்துகிறது.

பொதுவாக , ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் தமிழில் கவிதை எழுதும் போது கடினமாக இருப்பது

வழக்கம். பிரம்மராஜனோடு அபி , ரிஷி , அதங்கோடு அனிஷ்குமார் ஆகியோரையும் குறிப்பிடலாம்.

இத்தொகுப்பில் சில உரைநடைக் கவிதைகளையும் சேர்த்து 43 கவிதைகள் உள்ளன.

— ‘ வீறிட்ட விதை ‘ முதல் கவிதை !

அந்தரத்தில் மிதப்பதென்பதால்

அதக் கூடென்றோ கோளென்றோ

சொல் தளராது வீடென்று கொள்

விண்ணில் விதைத்த விதை

மண்ணில் விழுந்து வீறிட்டாக வேண்டுமே

மலரும் தோட்டக்காரனும்

ஒருவரேயென்றாலும்

துரிதம் குறைவுறு தெளிப்பான் கள்

மறைக்காட்டுக்குச் சொல்வதுண்டாம்

எடை ஈரம் வடிந்து

ஈர வைக்கோல் காய்ந்து

சுழன்றடிக்கும்

தர்க்க நாணல்

ஒரு நாள்

ஒரே நாளில்

— மேற்கண்ட கவிதையில் கருத்துகள் கோவையாக அமையாது பொருள் கொள்ள முடியாமல் போகும்

நிலை தெளிவாகக் காணப்படுகிறது. ‘ மலரும் தோட்டகக்காரனும் / ஒருவரேயென்றாலும் ‘ என்ற சொற்கள் ஆன்மிக சிந்தனைக்கு [ எல்லாம் ஒன்றே ] வழி வகுப்பதாகவும் கொள்ளலாம். முடிவில் ஒரு

சிதைவு தெரிகிறது. இதைக் கவிதையென்று சொல்வது எப்படி என எனக்கு தெரியவில்லை.

‘ ஆயிரம் கால் மண்டபம் ‘ என்றொரு கவிதை.

உன் காதலியின் மார்பை வியந்து கொண்டிருக்கிறது

கோயிலின் ஆண் சிலை

அவள் முதுகு மட்டும் தெரிகிறதுனக்கு

பூத்திருக்கும் தும்பை மலர்

பார்த்திருக்கிறது அவள் பூக்களை

மண்டபத்தின் ஆயிரம் கால்களில்

ஒன்றிலும் உரசாமல்

ஒரு வெளவால் திரும்புகிறது

முன் சென்று பாராது நீட்டிப் படுத்திருப்பவர்

கடவுள் என்றால்

அமர்ந்திருக்கும் பெண்

உன் அம்மா மண்டபம்

— இதில் முதல் இரண்டு வரிகளில் மனவக்கிரம் பதிவாகியுள்ளது. யாருக்கும் எட்டாத சிந்தனை !

வழக்கம் போல் குழப்பத்தில் முடிகிறது முத்தாய்ப்பு.

‘ மூவருக்கான மேஜை ‘ என்ற கவிதையில் ஒரு புதிய சிந்தனை.

‘ தூரத்தில் ஒரு ஐஸ்கிரீம் மேகம் ‘ — இக்கவிதையில் வெளிப்பாட்டில் அபத்தம் தெரிகிறது. கவிதையின் மையம் திட்டமிட்டுத் தகர்க்கப்பட்டுள்ளது. எனவே கவிதை சரிந்து தொய்ந்துபோய் நிற்கின்றது.

‘ சபலத் திரு உரு ‘ கவிதையும் மேற்கண்ட ரகக் கவிதைதான் . ‘ தாகம் தீர்க்கும் இடம்புரிச் சங்கு ‘

மர்மமாக இருக்கிறது. இறுகிய பூடாகத்தன்மை கவிதையில் முக்கிய இயல்பாக இருக்கிறது.

பிரம்மராஜன் கவிதைகள் எனக்கானவையல்ல என்று புரிகிறது. ஆனால் ஆனந்த் , ரிஷி போன்றவர்கள் இவரைப் போற்றுகிறார்கள். கவிதை இலக்கிய இன்பம் தரும் என்ற கருத்து இவருடைய கவிதைகளோடு ஒட்டாமல் நிற்கிறது.

———–

Series Navigationஇறுதி விண்ணப்பம்இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Comments

  1. Avatar
    சேயோன் யாழ்வேந்தன் says:

    முதன் முறையாக ஒரு சரியான விமர்சனத்தைப் படித்த மனத்திருப்தி. பாராட்டுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *