இப்படிச் சொன்னால் ‘தலைக்கனம்’ என்று பகுக்கப்படலாம். ஆனால் இந்த உணர்வு உண்மையானது. ஒரு அற்புதமான எழுத்தாளரை மொழிபெயர்த்த பிறகு, அல்லது ஒரு நல்ல படைப்பை எழுதி முடித்த பிறகு அதற்கென பரிசு பெறுவது என்பது எனக்கும் எனக்கும் அல்லது எனக்கும் நான் மொழிபெயர்த்த மேதைக்கும் இடையேயான தேவையற்ற குறுக்கீடாகவே தோன்றுகிறது. தாஸ்தாவ்ஸ்கியை மொழிபெயர்க்கக் கிடைத்ததே ஆன பெறும் பேறு என்கையில் அதற்கு ஒரு பரிசை தாஸ்தாவ்ஸ்கியை அறிந்த அறியாத, அறைகுறையாக அறிந்த அல்லது அவர் பெயரை மட்டுமே அறிந்து ப்ராண்ட் நேம்’ஆக அதைப் பயன்படுத்துகிற, நல்லவரோ அல்லவரோ, பணம் இருப்பதால் மட்டுமே இலக்கியப் புரலவலராகிவிட்ட இன்னபிறரிடமிருந்து பரிசு பெறவேண்டிய தேவை என்ன என்றும் அது ஒருவிதத்தில் படியிறக்கமாகவும் திரும்பத்திரும்பத் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அப்படியேதான், அருமையான கவிதை ஒன்றை எழுதிவிடுவதே ஒரு பெறும் பேறு!
அதேசமயம், நம் நூல்களை வெளியிடுவோருக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை அவர்களுக்கு மறுக்கிறோமோ என்ற குற்றவுணர்வும் சேருகிறது. தவிர,பிறரிடம் கொடுத்தால், நாம் பிரசுரிக்க விரும்பும் நூல்களை – நமதேயாகட்டும், பிறருடையதாகட்டும் – குறித்த காலத்தில் பிரசுரிக்க முடியாமல் போய்விடுகிறது. நண்பர்களிடம்தான் கொடுக்கிறோம், எனில், அவர்களுக்கும் பணப்பிரச்னை. எனவே, குடிசைத்தொழில் போல் ஒரு பதிப்பக முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். ‘அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்(Anaamikaa alphabets). முதலில் நான்கு நூல்கள் கொண்டுவந்துள்ளேன். புத்தகங்களின் முகப்பு அட்டைகளைப் பதிவேற்றம் செய்துள்ளேன்.
வந்துள்ள நான்கு நூல்களின் மொத்தவிலை ரூ.370. மொத்தமாக வாங்கினால் ரூ300க்குப் பெற்றுக்கொள்ளலாம். தபால் செலவுகள் தனி. வரவுள்ள ஐந்து நூல்களுமாகச் சேர்த்து ரூ330. ஆக மொத்தம் ரூ700. மொத்தமாக வாங்கினால் ரூ 600. தபால் செலவுகள் தனி. வேண்டுவோர் என் மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.
- ‘இப்போது‘ – என் (ரிஷி) கவிதை நூல்
- RAIN BEYOND AND OTHER POEMS (என் ஆங்கிலக் கவிதைகளின் சிறு தொகுப்பு)
- UPS & DOWNS ( A BI-LINGUAL BOOK – A BLOGGER’S MUSINGS by G.VENKATESH)
- சின்னஞ்சிறு கிளியே – கோமதி (மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் தாயார்)
* கருப்பு – வெள்ளை அட்டைதான். எனக்குப் பிடித்தது.
வரவுள்ள புத்தகங்கள்
1.சொல்லும் சொல் ப்ரம்மராஜனின் – கவிஞர் பிரம்மராஜனின் கவித்துவம் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல்.
- அருங்காட்சியகம் – என்னுடைய (அநாமிகா) சிறுகதைகள் 11 இடம்பெறும் நூல்.
- வைதீஸ்வரனின் இலக்கிய விரிவெளி ( கவிஞர் வைதீஸ்வரன் குறித்த கட்டுரைகள் இடம்பெறும் தொகுப்பு)
4.மாண்டிசோரி அம்மையாரைப் பற்றிய ஒரு சிறு நூல் – அருள்செல்வி என்ற மாண்டிசோரி (மாந்தசோரி என்று தான் தமிழில் எழுதவேண்டும் என்றார்.)
- மாண்டிசோரி ஆசிரியை ப்ரசில்லா எழுதிய குழந்தைகளுக்கான குட்டிப்பாடல்கள்
சென்னையில் திருமதி பத்மினி கோபாலனும் அவர் நட்பினரும் நடத்திவரும் ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் பெருமுயற்சியினால் சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் இந்தத் தரமான கல்வி குழந்தைகளுக்குக் கிடைத்துவருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் குழந்தைகளுக்கு மாண்டிசோரிக் கல்விமுறையில் கற்பித்துவருகின்றனர். தோழியர்கள் அருள்செல்வியும் ப்ரசில்லாவும் அந்த ஆசிரியப் பெருமக்களில் இ்ருவர்.
முதல் நான்கு நூல்கள் ஜூன் 11ஆம் தேதி கைக்கு வந்தன. தற்போது சென்னையில் இருக்கும் எழுத்தாளர் கோமதியிடம் அவருடைய நூலைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். ஜூன் 9ஆம் தேதி அவர் மாரடைப்பால் காலமானதாக சதாரா மாலதியின் மகளிடமிருந்து அன்று மின்னஞ்சல் வந்தது. தன் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தந்துவீடவேண்டுமென்றும், தனக்கு ஈமச்சடங்குகள் செய்யவேண்டாம் என்றும் கோமதி ஐசியூவுக்குப் ஓவதற்கு முன் கையெழுத்திட்டுத் தந்ததாகத் தெரிவித்திருந்தார். நேர்ப்பேச்சிலும் கோமதி அவர்கள் அதை என்னிடம் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. அவருடைய மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமாயிருந்தது.
MODERNITY IS NOT IN DRESS; BUT IN OUTLOOK என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
- யாதுமாகியவள்
- பிளிறல்
- சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3
- சொல்லவேண்டிய சில
- விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும்.
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10
- மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!
- ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்
- குறிப்பறிதல்
- உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்
- கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு
- காப்பியக் காட்சிகள் 10.பொழுதுபோக்குகள், பழக்க வழக்கங்கள்
- மஹாத்மா (அல்ல) காந்திஜி
- பாடம் சொல்லும் கதைகள்
- தொடுவானம் 125. முன்றாம் ஆண்டின் முதல் நாள்..
- அம்மா கணக்கு – இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் வரவு
- நெஞ்சிலிருந்து ஒரு சொல் – ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016
- சிறுவர் நாவல்கள் மின்னூல்களாக
- திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை