கவிதைகள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 23 of 29 in the series 9 அக்டோபர் 2016

ஸ்ரீராம்

சாமி சுத்தம் – கவிதை
கற்கள் மீதும்,
சுள்ளிகள் மீதும்
கால் வைத்து நடந்து
கோயிலுக்கு செல்லும் வழியே
தோளில் அமர்ந்திருந்த ஜானவிக்குட்டிக்கு
சாரதி ஆகியிருந்தேன்…
ஜானவிக்குட்டி கேட்கிறாள்
‘ஐய.. மாமா..
இந்த சாமி சுத்தமே இல்ல’…
  – ஸ்ரீராம்
*********************************
இடம் – கவிதை
மழை என நினைத்து
பனியை
அள்ளி அள்ளி பொழிந்துவிடும்
தேசத்தில்,
மார்புக்கச்சையையும்,
குறி மறைக்குமோர் துணியையும்
மட்டுமே
அணிந்த பெண்ணொருத்தி
என்னைப்பார்த்து
விகல்பமின்றி புன்னகைக்கிறாள்…
காமத்தின் இடத்தில்
தோழமையை
அள்ளி அள்ளி பொழிந்தது
அந்த புன்னகை ….
  – ஸ்ரீராம்
*********************************

 

Series Navigationஆழி …..கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *