உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

This entry is part 6 of 22 in the series 4 டிசம்பர் 2016

 

Cover Picture -1

கி.பி. [1044  – 1123]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

+++++++++++++

உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள்.  அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார்.  உமர் கயாம் பாரசீக  அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம்.  நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது.  முதன்முறை செய்தவை என்றும் சில பதிப்புகள் கூறும்.

 

விழித்தெழு !  காலைப் பொழுது கல்லை வீசி

விரட்டும் தாரகை யாவும் இரவுக் குவளையில்.

ஆகா ! கிழக்கே வேடன் கைப்பற்றி விட்டான்

சுல்தான் கோட்டையைச் சுருக்குக் கதிரால் !

++++++++++++++++

1.    AWAKE! for Morning in the Bowl of Night
Has flung the Stone that puts the Stars to Flight:
And Lo! the Hunter of the East has caught
The Sultan’s Turret in a Noose of Light.

++++++++++++++++

Series Navigationதேசபக்தி!!தாத்தா வீடு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *