This entry is part 3 of 13 in the series 2 ஏப்ரல் 2017

 

நிலாரவி

கோளபந்தொன்று
நுரை துப்ப நீர்தளும்பியது
கிளைவிரித்தது மரங்களாய்
காற்று வெளியென கவழ்ந்திருந்தது
கான்கிரிட் இல்லா
பறவை கூட்டில்
பசியறியாதிருந்தன குஞ்சுகள்
புகை கழிப்பில்லா இயக்கங்களில்
கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்
மழை நீரை நிறம் சேர்க்காமல்
வடித்தன மலர்கள்
இரைச்சல்களில்லா
இயற்கையின் மொழியை
கேட்டது மரத்தில்
ஏறிய அணில்
நீரோடையில் முகம் பார்த்தது
நிலம்
காண்அகம் என
மலர்ந்திருந்தது பூமி
இயற்கையின் பிழை
மனிதன்.

.

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி