உமர் கயாம் ஈரடிப்பாக்கள்

This entry is part 7 of 11 in the series 16 ஏப்ரல் 2017
 

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

[49]

விந்தை இல்லையா ?  ஆயிரக் கணக்கான பேரில்

நம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர் இதுவரை

நமக்குப் பாதை காட்ட ஒருவர் கூட மீண்டிலர்;

நாமே பயணம் செய்து தான் காண வேண்டும்.

[49]
Strange, is it not? that of the myriads who
Before us pass’d the door of Darkness through
Not one returns to tell us of the Road,
Which to discover we must travel too.

[50]

நமக்கு முன் பிறந்தோர்,  தீக்கிரை யானோர்

போதகர், மேதையர் ஓதிய திருமறைகள்

அனைத்தும் கதையே. கல்லறையில் எழுந்து

கனைத்தனர் தோழர்க்கு ! வந்தது தூக்கம் !

[50]
The Revelations of Devout and Learn’d
Who rose before us, and as Prophets burn’d,
Are all but Stories, which, awoke from Sleep,
They told their fellows, and to Sleep return’d.

[51]

ஆத்மா புழுதி மண் வீசி ஒதுங்கு மென்றால்

வானகக் காற்றின் மீது மிதக்கும் போது

மான மில்லையா, அதற்கு மான மில்லையா

இந்தக் களிமண்ணில் புதைந்து போவதற்கு ?

[51]
Why, if the Soul can fling the Dust aside,
And naked on the Air of Heaven ride,
Is’t not a shame – Is’t not a shame for him
So long in this Clay suburb to abide?

+++++++++++++++

Series Navigationதொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளிஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *