உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 9 of 11 in the series 11 ஜூன் 2017

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம்உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம்சி. ஜெயபாரதன், கனடா.

+++++++++++++++

[73]

கேள் மீண்டும், ரம்ஸான் முடியும் தருணம்

மாலை வேளை, நிலவு எழுவதற்கு முன்பு

முதிய குயவன் கடைக்கு முன் நின்றேன்

களிமண் பாண்டக் குழு வரிசை சூழ நான்.

[73]

Listen again. One Evening at the Close
Of Ramazan, ere the better Moon arose,
In that old Potter’s Shop I stood alone
With the clay Population round in Rows.

[74]

ஓர் அதிசயம் இது, பானைச் சந்தையில்

சில பேசின ! சில வாய்மூடிக் கிடந்தன;

திடீரென ஆவேசமாய் அலறும் ஒரு பானை:

“யாரிந்தக் குயவன், சொல், யாரிந்தக் குடம் ?”

[74]

And, strange to tell, among that Earthen Lot
Some could articulate, while others not:
And suddenly one more impatient cried – 
‘Who is the Potter, pray, and who the Pot? ‘

[75]

அடுத்த பானை கேட்கும், “நிச்சயம் பயனாக 

எனது களிமண்ணும் மிதி பூமியில் எடுத்தது,

மெய்வருந்தி மெதுவாய் என்னை வடித்தவன்

மீண்டும் மிதி மண்ணுக்கே தள்ள வேண்டும்.”

[75]

Then said another – ‘Surely not in vain
My Substance from the common Earth was ta’en,
That He who subtly wrought me into Shape
Should stamp me back to common Earth again.’

++++++++++++++++++++++++

Series Navigationகலித்தொகை காட்டும் மகளிர் கற்புக் கோட்பாடுகவிதைகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *