திரைவானில் நானோர் தாரகை !

This entry is part 1 of 14 in the series 19 நவம்பர் 2017

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா 

+++++++++++++

 

எப்படித் தோன்ற நீ விரும்புகிறாய் என்றோர்

பெண்ணைக் கேட்ட போது,

கண்ணா !

உனக்குத் தெரிய வில்லையா ?

திரைவானில் நானோர்

தாரகை யாய்

மின்னிட விழைகிறேன்.

அதற்குள் நீ எனக்கு இதைச் செய்யலாம்;

என் காரை நீ ஓட்டு !

திரைவானில் தாரகையாய் நானாகப்

போகிறேன் !  

 

கண்ணா !

நீ என் காரை ஓட்டு !

காதலிக் கலாம் நான் உன்னை !

தோழியிடம் சொன்னேன் :

அதற்குத் தகுதி மிகவே உள்ளதென்று

தோழியும் வழிமொழிவாள்.

பொரி கடலை வேலைக்குப் போகாதே ! 

நல்ல வேலைக்கு

நான் வழிகாட்டுவேன் உனக்கு !

நீ என் காரை ஓட்டு !

நான் உன்னை நேசிக்கலாம் !

 

வானில் ஓர் தாரகை யாய்

நான் மின்னப் போகிறேன் !

அதற்குள்

நீ என் காரை ஓட்டு !

இப்போதே நான் தயாரென்று தோழியிடம்

ஒப்புதல் தெரிவித்தேன்.

பொறு ! இதைக் கேள் முதலில்,

என்று தோழி நிறுத்தினாள் !

உன்னிடம் காரில்லை,

என்னிதயம் வெடிக்குது தெரியமா ?!

கார் உள்ள தெனக்கு !

தாரகை ஆக நான் விழைகிறேன் !

ஆரம்பம் அதுதான் !

இப்போது

நீ என் காரை ஓட்டு !

+++++++++++++++++++

Series Navigation” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *