ஓடிப் போய்விடு உயிருடன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 8 of 12 in the series 7 ஜனவரி 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++

இன்னொருவன் மார்பில் புரளும்

சின்னப் பெண்ணே ! நீ

செத்துப் போவது நல்லதென நான்

சிந்திக்கிறேன் !

சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும்

சின்னப் பெண்ணே !

இன்றேல் எனக்குத் தெரியாது நான்

எப்படிப் பட்டவன் என்று !

உயிரைப் பற்றிக் கொண்டு

இயன்றால் நீ

ஓடிப் போவது நல்லது

சின்னப் பெண்ணே !

மண்ணுக்குள் புதைத்துக் கொள்

மண்டையை

சின்னப் பெண்ணே !

அடுத்தவன் அணைப்பில் நீ இருப்பின்

முடியும் உன் அற்ப ஆயுள்

சின்னப் பெண்ணே !

முன்பே தெரியும் உனக்கு நான்

மூர்க்கன் என்பது !

பொறாமை பிடித்தே பிறந்தவன் நான்

சின்னப் பெண்ணே !

உன்னை மாற்ற வாழ்நாள் முழுதும்

என்னால் முடியாது !

ஓடிப் போவது நல்லது

உயிருடன்

சின்னப் பெண்ணே !

அடுத்தவ னோடு படுப்பதைப்

பார்த்தால்,

முடியும் உன் அற்ப ஆயுள்

சின்னப் பெண்ணே !

+++++++++++++++++++

Series Navigationகுடல் வால் அழற்சி ( Appendicitis )குறிப்புகள் அற்ற குறியீடுகள்!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *