உனக்குள்ளே !உனக்கு வெளியே !

This entry is part 20 of 22 in the series 22 ஏப்ரல் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++

 

நாமெல்லோ ருக்கும் இடையே உள்ள

தூரத்தைப் பற்றி

வாதாடிக் கொண்டி ருந்தோம் !

மனிதர் சிலர் மயக்க நினைவுச் சுவருக்குள்  

ஒளிந்து கொண்டுள்ளார்  !

மெய்ப்பாடு கண்டு கொள்ளார்  !

அறியும் போது

தவறிப் போகுது காலம் !

 

நாமெல் லோரும் பகிர்ந்து கொள்ளும்

நேசத்தைப் பற்றி

பேசிக் கொண்டி ருந்தோம் !

நட்பைக் கண்டு விட்டாலோ  நாம்

வெட்டி விடத் துணிவோம் !

நேசத்தால் நாமிந்த

காசினியைக் காப்பாற் றலாம் அதன்

வாசனை நுகரும் போது !

 

எவரும் உன்னை மாற்ற இயலாது !

எண்ணிக் கொள்,

எல்லாம் உன் நெஞ்சுக் குள்ளே

இருக்குது.

பார்த்தால்  நீ  ஓர் அற்பம் !

வாழ்வு புலர்கிறது

உனக்குள்ளே !  உனக்கு வெளியே !

 

நாமெல்லாம் ஆறிப் போகும்

காதல் உணர்வைக் காண்கிறோம் !

உலகைக் கைப்பற்ற முனைவோர்  

இழப்பர்  தம் ஆத்மாவை !

அதை அறியார் அவர் ! காணார் அவர் !

அவர்களில் ஒருவனா நீ ?

உன்னைக் கடந்து அப்பால்

உன்கண் நோக்கினால்,

உனக்கு அங்கே காத்திருக்கும்

மனச்சாந்தி !

நாமெல்லாம் ஒன்றெனும்

காலம் வரும் ! அன்று

உயிர்க்கும் வாழ்வு உனக்குள்ளே !

உனக்கு வெளியே !

 

++++++++++++++++++

Series Navigationமாமனார் நட்ட மாதுளைசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *