This entry is part 4 of 13 in the series 20 மே 2018

 

சரஸ்வதி தோட்டம் வளைவில்
சில நாட்களாக
பச்சைநிற விளிம்பு உயர்ந்த
பிளாஸ்டிக்
செவ்வகத் தட்டு இருக்கிறது
அதில் தண்ணீரோ
பாலோ நிரம்பியிருக்கிறது
சில நேரங்களில்
சில ரொட்டித்துண்டுகள்
தரையில் கிடக்கின்றன

தெரு நாய்களும்
சில பறவைகளும்
பயன் கொள்கின்றன

அந்த திரவங்களின்
மேற்பரப்பில்
‘ உயிர்களை நேசி ‘
என்ற சொற்கள்
மிதக்கின்றன !

————————

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்கவிதைகள்