நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 6 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++

நீண்டு நெளியும் பாதை

நின் இல்லம் நோக்கிச் செல்லும் !

மறையாத ஒரு பாதை !

முன்னறிந்த பாதை !

என்னை என்றும் ஆங்கே

முன்னிழுத்துச் செல்லும் பாதை.

கடும் காற்று அடிப்பும், இரவைக்

கழுவிச் சென்ற பேய் மழையும்

அழுத கண்ணீர்க் குளமும்

பகலில் காட்சி தந்து

என்னை நிறுத்துவ தேனோ ?

எனக்குப் பாதை தெரியும் !

ஏகாந்தனாய் நானும்

ஒதுக்கப் பட்டேன் பன்முறை !

ஏங்கி அழுதுள்ளே நானும்

பன்முறை ! நான்

பயிற்சி செய்த பல வழிகளை

பலர் அறிய மாட்டார்.

ஆயினும்

நீண்ட நெளிந்த பாதைக்கே

மீண்டும்

இழுத்துச் செல்வார் .

நில்லென்று சொல்லி என்னை

நிறுத்திச் சென்றாய்,

நீண்ட நேர மாக !

ஒதுங்கி விலகிச் செல்லாதே !

உன் வீட்டுக் கென்னை

அழைத்துச் செல் !

Series Navigationஞாபக மறதிஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *